கவிதைத் தோழி
ஜோஸ்பின் பிரான்சிஸ்

கூட்டத்திற்கு வரும்
அவளைச் சுற்றியே
கூட்டம்
அவளது தும்மலுக்கும்
ஆமாம் சொல்லி
பல் இழிக்கும்
ஜிப்பா ஜீன்ஸ்கள்
இலக்கியமாய்
பேசுவாள் இலக்கியம்
அவளது பேச்சுக்கு
மறுப்பு எதிர்ப்பு
கிடையாது கிடையாது
அவளைத் ‘தோழி ‘ என்றே
விளிக்கிறார்கள்
மைக் பிடிக்கும்
பஞ்சுத் தலையர்கள்
மின்னலாய் சிரித்து
மேகமாய் உலவி
கவிதை சுனையில்
ஈரம் கசிக்கிறாள்
ஜோஸ்பின் பிரான்சிஸ்