கவரிங் புன்னகைகள்

This entry is part [part not set] of 19 in the series 20010226_Issue

திலகபாமா, சிவகாசி


பொன்னகைக்கு மாற்றாய்

கவரிங் நகைகள்

களவாடலுக்கும்

கைகடிக்கும் பட்ஜெட்டுக்கும் பயந்து

பொன்னகை வேண்டாம்

புன்னகை போதுமென்றாய்

எங்கே போவேன்

என்னில்மலராத புன்னகைக்கு

இருந்தாலும் அணிய முடியா

இள நகையாய் இனமாற்றியதெது

புன்னகைக்கும் மாற்றாய்

புதிதொண்று வேண்டும்

பேருந்தில்

இடநெருக்கடிகளில்

இதயம் திருடு பொகலாமென்று

பயத்தில் பதுக்கி வைத்தேன்

புன்னகை

பட்ஜெட் பற்றாக்குறைக்கு

பொன்னகையோடு

புன்னகையும் அடகாய்

மீட்க முடியாமல்

மூழ்கியபடி

வசதியென வாங்கிய இரு சக்கர

வாகனம்

எரிக்கும் சூரிய ஒளியில்

சிரிக்கும் எண்ணம் மறந்து

முகத்தில் காற்றோடு மோதும்

எதிர் வண்டிக்காரனின்

ஏளனச் சிரிப்பு தவிர்க்க

புதைத்து வைத்தேன்மீண்டும்

புன்னகையை பைக்குள்

பொன்னகைக்கு மாற்றாய்

புன்னகையும் அணிய முடியாது

கவரிங் புன்னகையை தேடியபடி…

Series Navigation

திலகபாமா,சிவகாசி

திலகபாமா,சிவகாசி