கற்பக விருக்ஷம்

This entry is part [part not set] of 26 in the series 20010910_Issue

வந்தியத்தேவன்


‘இதை செய்யாதே ‘ ! ‘அது உன்னால் முடியாது ‘ !!
‘நீ தேரமாட்டாய் ‘ ! ‘நீ இதற்கு லாயக்கில்லை ‘ !!

பெற்றோரின் ஆசிட் அதட்டல்களால் எத்தனை
பிஞ்சுகள் முளையிலே கதிரருப்பு,
ஓவியனாக, கவிஞனாக, விளையாட்டு வீரானாக
எண்ணிய எத்தனை கனவுகள் கருக்கலைப்பு.

பெற்றோரின் நிறைவேராத ஆசைகளை சுமக்க கனவினை துறந்த இளைஞர்களுக்கு
கிடைத்ததென்னவோ வேலை வாய்ப்பு அலுவலக வரிசையும் ரேஷன் கடை வரிசையும் தான்.
இளைஞனே,
உன்க்கென கடமைகள் பல உண்டு, உன் தேவை இங்கே பலர்க்குண்டு.
இருந்தும் உன்னுள் ஒரு முற்றாத தேடல், ஒரு நிறைவேராத கனவு.

பிடிக்காத படிப்பு படித்து, விரும்பாத வேலை பார்த்து,
இசையில்லா இல்வாழ்கை வாழ்ந்து, இன்பமான வாழ்கையை இயந்திரமாக்காதே.

கனவு காணுங்கள் உங்கள் ஒளிமயமான எதிர்காலத்தை நினைத்து,
ஊன்றி வையுங்கள் உங்கள் மனதில் தன்னம்பிக்கை விதையை,
விடாமல் ஊற்றுங்கள் விடாமுயற்சியெனும் நீரை,
அறிவின் வெப்பங்கொண்டு காத்திடுங்கள் அந்தப் பயிரை,
உங்கள் மனதில் சீக்கிரம் முளைக்கும் கற்பக விருக்ஷம்
கேட்டதெல்லாம் கிடைக்கும், நினைத்ததெல்லாம் நடக்கும்,
எண்ணமே சொல்லாய் சொல்லே செயலாய் ஒரு சுக வாழ்கை சித்திக்கும்.

Series Navigation

வந்தியத் தேவன்

வந்தியத் தேவன்