கறுத்த நாயும் பாத்றூமும்

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

அம்மன்கிளி


இன்றைக்கும் அப்படித்தான் அந்தக் கறுத்த நாய் பாத்றூம் வாசலில் படுத்துக்கிடந்தது எந்தநாளும் இதே பிரச்சினை.

.நாயென்றால் அல்செஷனோ பொமரேனியனோ பொக்கட் நாயோ இல்லை. பொதுவாக எங்கள் வீடுகளில் அருமையாக வளர்க்கிற ஊர் நாய்வகைதான். ஊரிலே ஏற்பட்ட பஞ்சம்.
அலுவலகத்துள் அதன் வாழ்க்கையாயிற்று அதுவும் பாத்றூம் வாசலில்

பாத்றூம் என்றால் நாற்பது வருஷங்களுக்கு முன் கட்டியது. ஆண்களுக்கும் பெண்களுக்குமாக மூன்று பாத்றூம்கள் , கதவுகள் பழுதடைந்தநிலையில், போன வருஷம் சொல்லித்தான் சிப்போட்டை வெட்டி, உடைந்த கதவுக்குப் பொருத்தியிருந்தார்கள்.மழைகாலம் என்றால் அழுத்த்pச்சாத்த முடியாது இறுகிவிடும். திறப்பதற்கு வேறுயாரும் தான் வரவேண்டும் இப்பொழுது மீண்டும் கதவுப் பலகை காலாவதியாகத் தொடங்கிவிட்டது இதுபற்றி அலுவலகத்தில் பிரஸ்தாபித்தால் பாத்றூம் பற்றிக் கதைப்பதே தீட்டு என்ற மாதிரி.

நாய் எழும்புவதாக இல்லை உள்ளே போவதா திரும்பி வருவதா? கடித்துவிடுமோ என்ற பயம் வேறு. போகாமல் முடியாது. இவ்வளவுநேரமும் ஏ.சீ அறையில் ஒரு கூட்டத்த்pல் இருந்தது. போய்த்தான் ஆகவேண்டும். ஒரு மாதிரி நாயில் முட்டாமல் அதனைக் கடந்து போய் வந்தாயிற்று. நாய் எழும்பின பாடாய் இல்லை. வெளியே குட்டிகள் மூன்று விறாந்தையில் படுத்துக் க்pடந்தன.

இரண்டு மாதமிருக்கும் வழமைபோலவே அந்தக் கறுத்தநாய் பாத்றூம் வாசலில் படுத்துக் கிடந்தது. நல்ல வெயில் காந்துகிற நேரம். நாக்கைத் தொங்கப் போட்டபடி மூச்சிரைத்தபடி கிடந்தது.

மதியம் சாப்பாடு முடிந்த பிறகு வாசலில் போடுகிற சாப்பாட்டு மிச்சங்களை உண்டே அது அவ்விடத்தில் படுக்கத்; தொடங்கிவிட்டது எப்படித் துரத்த்pனாலும் போகாது.

துப்புரவாக்கும் தொழிலாளி வந்து போகும்வரை அந்தச் சாப்பாட்டுப் பார்சல்களின் மிச்சங்கள,; மீன்முள்ளுகள், எலும்புகள், முருங்கைக்காய் தோல்கள், கருவேப்பிலைகள், சோற்றுத்துகள்கள் லஞ்ச் சீற்றுகள் சுற்றிய பேப்பர்கள் எனப் பரவியிருக்கும். பலவேளைகளில் குப்பைத்தொட்டியின் வெளியே சிதறி விறாந்தை முழுக்கப் பரவி ஒரே அரிகண்டமாக இருக்கும். அவ்வளவுக்கும் அந்த நாய்தான் சொந்தம். அது குரைத்து நான் பார்த்ததில்லை. ஆனாலும் பயம்.

கொஞ்ச நாளாய் ஒரு செம்பட்டைநாயும் அவ்விடத்தை ஆகக்pரமிக்கத் தொடங்கியிருந்தது அது கடுவன் நாயாக இருந்ததாலோ என்னவோ தொடர்ந்து அங்கு நிற்பதில்லை.

நாய் இழுத்துத் தின்ற பார்சல்களைக் கூட்டித் துப்பரவாக்கும்வரை சில வேளைகளில் காலில் உழக்க்pக் கொண்டுதான் போக வேண்டும். இப்பொதெல்லாம் பாதுகாப்பு ஊழியர்கள் குளிக்கும் அறையிலிருந்து வரும் நீரும் சேர்ந்து தேங்கத் தொடங்கி விட்டது. கொசுக்கள் வேறு எழும்பத் தொடஙகியிருந்தன.துப்புரவாக்குபவர் அந்தப்பக்கம் வராவிட்டால் அதோ கதிதான்;.

நாய்கள்பாடு பிரச்சினை இல்லை.

பாத்றூம் போவது தொடர்ந்தும் பிரச்சினைதான். முந்தியென்றால் கட்டாக்காலி நாய்களைக் கொண்டுபோக மாநகர சபை வண்டி வரும். எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போய்விடும். இப்ப அப்படி எதுவும் நடப்பதாகத் தெரிய வில்லை. மனிதர்களுக்கு இல்லாத மதிப்பு. எல்லா இடமும் திரியும். எல்லாரோடும் திரியும். செக்கிங் கிடையாது. சென்றி கிடையாது. ஆளடையாள அட்டை கிடையாது.

இப்பெல்லாம் முதலில் நாய் படுத்திருக்கிறதா என்று எட்டிப்பார்ப்பேன்.விசர்பிடித்த நாய்தான் ஈரத்தைத்தேடி அலையும் என்று யாரோ சொன்னதன் பிறகு நாய் படுத்திருக்க வில்லையென்றால மட்டும் அந்தப் பாத்றூமைப் பாவி;ப்பது.அல்லது கொஞ்சம் தள்ளிப்போய் பின்னால் இருகக்pற பாத்றூமைப் பாவிப்பது.

திடீரென்று பார்த்தால் நாய் குட்டிகளோடு பாத்றும் வாசலில் அதே இடத்தில் படுத்துக் கிடந்தது. ஏழு அல்லது எட்டுக் குட்டியிருக்கும். குட்டிகளின் கண்கள் மூடினபடி கிடந்தன. இனிப் போக முடியுமா அந்தப ;பக்கம்? குட்டி ஈன்ற நாய் கடித்துக் குதறிவிடும் என்ற பயம்.. பிறகு இருபத்தியொரு ஊசி தொப்புளைச் சுற்றிப்போடமுடியுமா என்ன?

ஒரு பக்கம் நாயைப் பார்க்கப் பாவமாக இருந்து.

எங்கட பாடு அந்தோ. ஆண்கள் பாடு பரவாயில்லை அந்தப் பக்கம் அது போகவே இல்லை

ஐந்து நாளிருக்கும். யாரோ புண்ணியவான்கள் குட்டிகளையும் தாயையும் வெளியே விறாந்தையில் விட்டிருந்தனர் ஆனாலும் குட்டிகளையும் தாயையும் கடந்துதான் அந்தப் பக்கம் போக வேண்டியிருந்தது.

விறாந்தை பலர் போகுமிடம்.

பராமரிப்புப்பகுதி பாத்றூமைத் தாண்டி இருந்தது அதனால் பராமரிப்புபு;பகுதி உபகரணங்களும் அந்த விறாந்தையில் கிடக்கும் கிடக்கும். சில உத்த்pயோகத்தரின் மோட்டார் வண்டிகளும் அதில் கிடக்கும் அததுடன் சைக்கிள் வண்டிகளும்தான் . இது பற்றிக் கதைத்தும் பலன் ஏதும் இல்லை. அதனால் சில சமயம் ஒற்றையடிப்பாதை மாதிரித்தான் அதைப் பாவிக்க வேண்டியும் வந்தது.

நாய் சற்றுத்தள்ளி செவ்வரத்தைச் செடியின்கீழ் குட்டிகளுடன் கிடந்தது

நாயின் இருப்ப்pடம் மீண்டும் குட்;டிகளுடன் அழகாக வெட்டி விடுகிற வரம்புச்செடிகளின் நிழலுக்கு மாறியது.

அன்றைக்கு மழை. ஒரு சீற்துண்டு செடிகளின்மேல் கிடந்தது. சிறீயைக் கேட்டேன்.என்ன என்று.

நாய்க்குட்டிகளுக்கு மழைபடாமல் போட்டிருக்கு மிஸ்.

ஓ குட்டிகள் பாவம் தான்.

குட்டிகள் கண் முழித்து விறாந்தையில் மட்டுமல்லாது பக்கத்த்pலுள்ள அறைகளுக்குள்ளும் சிலவேளை நடைபோட்டன.

வெள்ளிக்க்pழமை.

வழமைபோல 8.10 இற்கு அலுவலகத்துள் நுழைகிறேன் வழியில் குட்டிகள் மூன்றுதான் நின்றன.இரண்டு கால்களிலும் நின்று இரண்டு கால்களால் தாயின் மடியைப் பிடித்து பால் குடித்தபடி. கொஞ்சநேரம் நின்ற தாய் குட்டிகளை விட்டுவிட்டு நடையைக் கட்டியது. செடிகளுக்குத் தண்ணீரூற்றிய சிறீயிடம்தான ;கேட்டேன்

எங்கே மற்றக்குட்டிகள்?

ஒரு குட்டியை நாய்தின்று விடுமாம். மிச்சம் ஆண்குட்டிகள் நாலையும் ஆக்கள்கொண்டு போய்விட்டாங்க மிஸ்.

சிறீ பதிலளித்தார்

ஓ காலையில் வரும்போது குட்டிகள் தனியே நின்றன. தேடுவாரில்லை.

கறுத்த நாயையும் காணவில்லை செம்பட்டை நாய்தான் பாதுகாப்பு ஊழியர்களின் குளியலறையின் தண்ணீருமாக சேறாக கிடந்த இடத்தில் நேற்றுக் கொட்டிய சரஸ்வதி பூசைப் பிரசாதங்களின் மிச்சம் மீதியைத் தின்று கொண்டிருந்தது

இனி குட்டிகளும் பாத்றூம் வாசலில் தான்.


murugathas1953@yahoo.com

Series Navigation