கருணாநிதியின் ஜெக ஜால வெளியீடுகள்:

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

வரதன்


ஸ்டாலின்: ஈவ் டாஸிங் சட்டம் மூலம் பெண்களின் மேலான பாலியல் கொடுமைகளைத் தடுப்பதற்கு ஸ்டாலின் மேயராக ஆற்றிய பணிகளைக் கெளரவிக்கும் வகையில் அவருக்கு, ‘பத்மசிரி ‘ பட்டம் வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு.

கருணாநிதி: வள்ளுவருக்குப் பின் தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய பணிகளை கெளரவிக்கும் வகையிலும் , இந்திய மொழிகள் எல்லாவிற்றிலுமே அற்புத படைப்பான, ‘என் உடன்பிறப்பே ‘ கடிதங்களுக்காக

‘ஞானபீடை ‘ விருதை மத்திய அரசு அறிவித்தது.

மேலும், அவரின் நாகரீக அரசியலுக்காக, ‘NOபல் ‘ பரிசுக்கு அவரின் பெயரை மத்திய அரசு பரிந்துரைத்தது.

கனிமொழி: அவரின் பல கவிதைகளுக்காக ‘சாகித்ய அக்காடம்மி ‘ விருது அறிவிப்பு.

தயாநிதிமாறன்: அவரின் பணியை பாராட்டி, துணைப் பிரதமர் பதவி தர யோசனை.

மு.க.அழகிரி: அவருக்கு நீதித் துறை அமைச்சர் பதவியை தான் கேட்கவில்லையென்றும், சோனியா தான் வற்புறுத்துவதாகவும் கருணாநிதி தனக்கு தானே கேள்வி கேட்டு பதில் அளிக்கும் பகுதியில் எழுதியுள்ளார்.

varathan_rv@yahoo.com

Series Navigation

வரதன்

வரதன்