This entry is in the series 20070405_Issue

புதியமாதவி, மும்பை



கரப்பான்களின் தொல்லை
எவ்விடமும்
எக்காலமும்
எல்லோரிடமும்.
சகித்துக்கொள்ள முடியாமல்
இராசாயண அணு ஆயுதங்களுடன்
தாக்குதலைத் தொடர்ந்த போது
தெரிந்தது
ஓரிடத்தில் குவிந்திருந்த கரப்பான்கள்
ஊரெல்லாம் பரவி
வெவ்வேறு பெயர்களில்
ஊர்ந்து கொண்டிருப்பது.

செங்கல் சுவர்களை இடித்து
பளிங்கு கற்களைப் பதித்து
இடைவெளி இல்லாமல்
அடுக்கிவைத்து
நிமிர்ந்து போது
கரப்பான்கள் ஊர்ந்தன
கைகளிலும் கால்களிலும்.
துண்டிக்கவோ கண்டிக்கவோ
முடியாது என்பதால்
யுகம் யுகமாய்
உடம்பெல்லாம் மேய்கின்றன
கரப்பான்கள்.


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation