புஷ்பா கிறிஷ்ரி
கண்களை மூடினேன்
கனவொன்று வந்தது
என்ன அந்த மரம்
அது என் அன்பு மிக்க
அழகான நாவல் மரம்
உருண்டை உருண்டையாக
உருட்டிய பந்தாக
எத்தனை பெரிய பழங்கள்.
இன்னும் நான் கனவில்
எண்ணி எண்ணிப் பார்த்து
இனிக்க இனிக்க
எடுத்து எடுத்து உண்கிறேன்
முடிந்ததா கனவு
கண் விழித்துப் பார்த்து
ஏமாந்து தான் போனேன்
என் கண்கள் பனித்தன
ஆ.. அது.. அத்தனையும் கனவா ?
மீண்டும் கண்களை மூடினேன்.
மீண்டும் அந்த நாவல் மரம்
மீண்டும் என் கைகளில்
நாவற் பழ உருண்டைகள்
மீண்டும் நான் உண்கிறேன்
எத்தனை நாட்கள் இந்தக்
கண்கள் இந்த
வண்ணக் கனவுகளில்
எண்ணக் கோலம் போடும் ?
எப்போது என் கனவு பலிக்கும் ?
நான் எப்போது என்
நாவல் மரத்தடி நிழலில் நின்று
நாவற் பழம் பொறுக்குவேனோ ?
எப்போது அந்தப் பழங்களில்
ருசித்து ரசித்து உண்பேனோ ?
என் கனவு தினமும்
தினமும் வந்து போனது
நான் மட்டும் அங்கு
இன்னும் போகவில்லை
மரமே! என் நாவல் மரமே!
என்னை மன்னித்து விடு.
என்றோ ஓர் நாள்
உன்னைத் தேடி
நான் அங்கு வருவேன்.
உன் மர நிழலில் நின்று
பழம் பொறுக்கித் தின்று,
என் ஆசையெல்லாம் தீர்க்க
என் கதை சொல்ல
என்றோ ஒர் நாள் நான்
உன்னைத் தேடி வருவேன்
***
Pushpa_christy@yahoo.com
- அவள் அழுகிறாள்….
- மருமகள்
- ஒலிக்கும் சதங்கை
- யுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பராமோ காட்சி பதிவும் கதை வெளியும்
- விளையாட்டும் விபரீதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 19 – சி.சு.செல்லப்பாவின் ‘குருவிக்குஞ்சு ‘)
- திருமதி. வனிதா முறை (Method) ‘மட்டன் பிரியாணி ‘
- மனிதர்களிடன் இருக்கும் எய்ட்ஸ் -எதிர்ப்பு ஜீன்
- கண்ணே! கவிதைப் பெண்ணே!
- கனவு வந்து போனது
- இதுவும் அதுவும்
- ஆழம்
- ஐந்தாம் வகுப்பு நண்பன்.
- நட்பு
- அந்த ஒரு மாதம்…
- ஆழ்ந்த ஆசை
- அதிசயம் ஆனால் உண்மை : அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்தனர்
- சிகாகோவில் தமிழ் மாநாடு : மறுபடியும் பழமைக்குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவோம்.
- இந்த வாரம் இப்படி – சூலை 14 2002 (வைகோ, அரசியல்வாதிகள், ஜம்மு காஷ்மீர், படுகொலைகள்)
- ஒலிக்கும் சதங்கை
- கொச்சைப்படுத்தாதீர்கள், தயவு செய்து..
- இலைக் குணம்