`கட்டுக்கதையான ஹூசேனின் மாசற்றதன்மை!` யில் பிக்காசோ

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

பரிமளம்


பிக்காசோ
கடந்த வாரம் திண்ணையில் வெளிவந்த `கட்டுக்கதையான ஹூசேனின் மாசற்றதன்மை!` என்ற கட்டுரையிலிருந்து சில வரிகள்.

{ஜனநாயக ஆட்சிக்கு ஆதரவு தந்து, கொடுங்கோன்மைக்கு எதிராகாக பிகாசோ, போர்க்கொடி உயர்த்தியவர்.}
{பிகாசோ போன்ற பெருந்தகையோர், மனத்திண்மையுடன் அதிகார அமைப்புகளுக்கு எதிராக மகத்தான சண்டையிட்டு, தாங்கள் ஏற்றுக்கொண்ட, அரசியல், சமூக, கொள்கைகளுக்காகவும், பொறுப்புகளுக்காகவும், இவைகளில் உள்ள அசைக்கமுடியாத திடநம்பிக்கைகளால், பல அல்லல்களை தைரியமாக சகித்துக்கொண்டு துன்பப்பட்டிருக்கின்றனர்.}
பின்வருவது விக்கிபீடியாவிலிருந்து ஒரு பகுதி:
Picasso remained neutral during World War I, the Spanish Civil War, and World War II, refusing to fight for any side or country. Some of his contemporaries felt that his pacifism had more to do with cowardice than principle. An article in The New Yorker called him “a coward, who sat out two world wars while his friends were suffering and dying”. As a Spanish citizen living in France, Picasso was under no compulsion to fight against the invading Germans in either World War. In the Spanish Civil War, service for Spaniards living abroad was optional and would have involved a voluntary return to the country to join either side. While Picasso expressed anger and condemnation of Francisco Franco and fascists through his art, he did not take up arms against them. He also remained aloof from the Catalan independence movement during his youth despite expressing general support and being friendly with activists within it.
இனி திண்ணைக் கட்டுரை வரி:
{ஆர்வம் மிக்க ஹுசைனின் ஆதரவாளர்களுக்கு பிக்காசோவைப்பற்றி ஒன்றுமே தெரியாது போலிருக்கிறது, ஆதனால் தான், ஏதோ பிதற்றுகின்றனர்.}
பரிமளம்.

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்

கட்டுக்கதையான ஹூசேனின் மாசற்றதன்மை!

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue

அம்பா சரண் வஸிஷ்ட் – தமிழாக்கம்: நல்லான்


அநியாய செய்கைகளின் உண்மைநிலை

இவ்வாண்டு செப்டம்பர் 17ம் தேதியில், கேலிச்சித்திரக்காரர் (Maqbool Fida Hussain- (MF Hussain) ஹூசேனின் நலம்-விரும்பிகளும், பாராட்டுபவர்களுமாகச் சேர்ந்து அவர் பிறந்த நாளை ஒரு விழாவாகக் கொண்டாடினர். ஒருவருடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதென்பது அவரவர் உரிமை. மறுக்கவில்லை. ஆனால், அவருடைய ஆதரவாளர்கள், அவரை ”இந்தியாவின் பாப்ளோ பிக்காசோ” எனப் பட்டம் சூட்டி, இப்போற்பட்ட தலைசிறந்த ஒப்பாரில்லா ஓவியர் ’மக்பூல் ஹூசேன்’ சொந்த தாய்நாட்டிலேயே வசிக்க இயலாத சோகத்தால் மனம் நொந்து, இந்தியாவில் இருந்துகொண்டே அவருக்காக அழுது புரண்டு பிலாக்கணம் பாடுகின்றனர். [இதில் வேடிக்கை என்னவென்றால், இந்திய நாட்டிலிருந்து, வெளிநாட்டில் வாழ தன்னைத் சுயமாகவே தேசபிரஷ்டம் செய்துகொண்டவர் à MF ஹுசைன். எவரும் ஹுசைனை இந்தியாவை விட்டு வெளியேறு என கூறியதில்லை!! காரணம் கீழே***.] பிக்காசோவுடன் ஹுசேனை ஒப்பிடுதல் ’மலைக்கும் மடுவுக்கும் உள்ள ஒற்றுமை’ போன்றது. எவ்விதத்திலும் ஒவ்வாதது மேலும் ஏற்றமற்றது. இருவரும் ஓவியர்கள் என்பதைத் தவிர இவர்களுக்குள் பரஸ்பரம் பொதுவான விசேஷங்கள் என ஒன்றுமே கிடையாது.

ஆர்வம் மிக்க ஹுசைனின் ஆதரவாளர்களுக்கு பிக்காசோவைப்பற்றி ஒன்றுமே தெரியாது போலிருக்கிறது, ஆதனால் தான், ஏதோ பிதற்றுகின்றனர்.

ஜனநாயக ஆட்சிக்கு ஆதரவு தந்து, கொடுங்கோன்மைக்கு எதிராகாக பிகாசோ, போர்க்கொடி உயர்த்தியவர். ஆனால், ஹுசேனுக்கோ, எந்த அரசியல் கோட்பாடும் கிடையாது, அதற்காக போராடவும் தேவையில்லை!!. ஆனால், ஹுசேன் அவர்கள், அதிகார அமைப்பு அளிக்கும் ஆதரவு, பாதுகாப்பில் குளிர்காய்ந்து கொண்டு, அதிகார அமைப்பும், ஹுசைனால் தங்களுக்கு ஏற்படும், குறுகிய அரசியல்-தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே அன்றி வேறொன்றுக்குமில்லாமல் பரஸ்பரம் உபயோகித்துக் கொள்வார்கள். ஆகையால், ஹுசேனுக்கும் எந்த அரசியல் வகுப்பையோ அல்லது அரசாங்கத்தையோ அவமதிக்க தேவையே இல்லாமல் போய்விட்டது போலும்!! ஆனால், அதேசமயம், தங்கள் தாய் தந்தையரைக் காட்டிலும் ஒருபடி மேலாகக் கொண்டாடிவரும் ஹிந்து தெய்வங்களை, நிர்வாண கேலிச்சித்திரமாகத் தீட்டி, ஹிந்துக்களின் மன மென்மை உணர்ச்சி களுக்கு வேண்டுமென்றே, ஹூசேன், ஊறுபாடு உண்டாகி வருகிறார். இச்செய்கையை இன்றைய அரசாங்கமும் குற்றமாகக் கண்டுகொள்வதில்லை.

***சொந்த தேசத்திற்கு திரும்பி வர எவரும் என்றும் ஹூசேனை தடுத்ததில்லை. அதிகார பீடத்தில் அமர்ந்திருந்த முன் அரசாங்கமோ, அல்லது தற்கால அரசாங்கமோ, அவருக்கு வேண்டிய பாதுகாப்பை அளிக்க என்றும் மறுத்தது கிடையாது. ஆனால், இந்த கேலிச்சித்திரக்காரரோ, தான் முன்னர் இழைத்த கருமங்களுக்காகவும், குற்றங்களுக் காகவுமே பயந்து, அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்காகவே நடுங்கி, நாடு திரும்ப யோசிக்கிறார் போலும்!. இவர் எந்த குற்றமும் செய்யாவிட்டால், பின் தன் சொந்த நாட்டுக்கு திரும்ப வர ஏன் அஞ்சவேண்டும், அல்லது ஹிசேனுக்கு இந்நாட்டு சட்டம், நீதிமுறை இவைகளின் மீது நம்பிக்கயற்று போய்விட்டதா? அல்லது குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதா?

மேலும், இம்மாதிரி சீற்றமூட்டும் கேலிச்சித்திரங்கள், இந்திய சமூக எதிர்பார்ப்புகளுக்கும், நீதிநெறி விளக்கங்களுக்கும் எதிரானவை. கூடுதலாக, சட்டம் அறியாமை என்பது ஒரு நொண்டிசாக்கு, (Ignorance of Law is no excuse) எந்த நீதிமன்றத்திலும் செல்லாது என இந்த கேலிச்சித்திரக் காரருக்குத் தெரியாதா என்ன! கட்டாயம் தெரிந்திருக்கும்!! வேண்டுமென்றே, எந்த சமூக அமைப்புகளுக்கோ, மத நம்பிக்கைகளின் மென்னுணர்வுகளுக்கோ, குந்தகம் ஏற்படுத்தினால், இந்திய தண்டனை சட்டப்படி, குற்றம் குற்றமே. இம்மாதிரி குற்றங்களுக்கு பலர், கடந்த நாட்களில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டு கடும் தண்டனையும் அனுபவித்ததுண்டு. இச்சட்டம் வேற்று நாட்டான் (British Govt.) அமைத்துக் கொடுத்ததாக இருப்பினும், இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகும், இது போன்ற சட்டங்கள் (Indian Penal Code, Criminal Procedures etc.) இன்னும் அமலில் உள்ளன. மேலும், மதிக்கத்தான் படுகின்றன.

பிகாசோ போன்ற பெருந்தகையோர், மனத்திண்மையுடன் அதிகார அமைப்புகளுக்கு எதிராக மகத்தான சண்டையிட்டு, தாங்கள் ஏற்றுக்கொண்ட, அரசியல், சமூக, கொள்கைகளுக்காகவும், பொறுப்புகளுக்காகவும், இவைகளில் உள்ள அசைக்கமுடியாத திடநம்பிக்கைகளால், பல அல்லல்களை தைரியமாக சகித்துக்கொண்டு துன்பப்பட்டிருக் கின்றனர். துரதிருஷ்டவசமாக இந்த கேலிச்சித்திரக்காரருக்கோ, (பாவம்!) கொள்கையோ, பொறுப்போ, திடநம்பிக்கையோ, எதுவுமே சுத்தமாகக் கிடையாது, மேலும், பிகாசோ போன்று வியக்கத்தக்க தைரியசாலியுமல்ல.
சென்ற ஆண்டு, ஏப்ரல் ஏழாம் நாளில், பிரசித்தமான கலைஞர், ஓவியர், சதீஷ் குஜ்ராலுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஒரு நேர்காணலில், ஜனாப் ஹுசேனின் (சுயமாக செய்துகொண்ட) தேசப்பிரஷ்டத்தைக் குறித்து அவர் பேசுகையில், ””இம்மாபெரும் கலைஞனை, சொந்த நாட்டில் வாழ விடாமல், வெளிநாட்டிலேயே காலம் கழிக்க வைத்த, இந்நாட்டு நாசகாரக் கும்பல் கலாசாரத்தை சேர்ந்தவன் என நினைத்து, நான் வெட்கித் தலைகுனிகிறேன்”” என வாயால் முத்துதிர்த்தார். (யார் யார் என திட்ட வட்டமாகச் சொல்லி இருக்கலாமே!! ஒருவேளை அவர் குறிப்பிட்ட நாசகாரக் கும்பல்….. இருக்கலாம், இருக்கலாம்!!)
இம்மாதிரியான வேண்டாத அறிக்கைகள், உண்மையான பிரச்சனைகளை மூடிமறைத்து, மக்களை தாறுமாறாகத் திசைதிருப்பி திகைக்கவைக்கிறது. இது போன்ற பிதற்றல்கள், அடிப்படை பிரச்சனைகளைப்பற்றி, பரந்த நோக்குடன், ஒவ்வொரு கோணத்திலும் மக்களை அகழ்வாராய விடாமல், இதனால், பல சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போய் விடுகின்றன. நம் கலாச்சாரத்தைப்பற்றி நாமே தமுக்கடித்துக் கொள்ளத் தேவையில்லை. ’உன் விரலை பிறர்மீது குற்றம் சுமர்த்தக் காட்டுவதற்கு முன், உன்னையே நீ சோதனை செய்து கொள்’ என நம் இந்திய கலாச்சாரப் பண்பு நற்போதனையை அளிக்கிறது. இவ்வழியிலேயே, நம் இந்திய கலாச்சாரம், மாற்றோரை மதிக்கவும், அவர்களது மென்னுணர்வுகளை அவமதிக்காதே எனவும் கற்றுக் கொடுக்கிறது.
கோடிக்கணக்கான இந்நாட்டு மக்களின் மென்னுணர்வுகளை, சினமூட்டுதலின்றி, வேண்டுமென்றே காயப்படுத்தி, துடுக்குத்தனத்துடன் கேலிச்சித்திரங்களைத் தீட்டிய ஜனாப் ஹுசேனைக் குறிப்பிட்டு, “மாபெரும் கலைஞர்” என கூவுவது, நம் கலாச்சாரத்தைப் புறக்கணித்தது, மேலும் அவமதிப்பது போன்றது.
இதில் மற்றுமொரு, மர்மமும் உண்டு. கேலிச்சித்திரக்காரர் சொந்த நாட்டை விட்டு வெகுதூரத்தில் வாழும் அலங்கோலத்தை நினைந்து நினைந்து, இந்திய மண்ணின் காதலால் கசிந்துருகும் வேளையில், ஹுசேனின் நலம்-விரும்பிகளும், அவருடன் சேர்ந்து (முதலைக்) கண்ணீர் விடுகின்றனர். பாரதமாதாவை நிர்வாண கேலிச்சித்திரமாக வரைந்ததற்கான வழக்கில், இந்திய உச்ச நீதி மன்ற தீர்ப்புக்குப்பிறகு பிபிசி ஹிந்திக்கு ஹுசேன் அளித்த பேட்டியில், ”எப்போது உங்கள் வெளி நாட்டு வாசத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பப் போகிறீர்கள்?” என்ற வினாவுக்கு, அவர் ஹிந்தியில் அளித்த பதில் விசித்திரமானது:” நான் இங்குமங்குமாக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்” என ஏதோ முற்றும் துறந்த சித்தர் போல விரக்தியுடன் பதிலளித்தார். ஹுசைன் பிபிசி ஹிந்தி-நிகழ்ச்சியில் அளித்த இந்த வாக்குமூலத்தால்,’ஹிந்து மதக்கொள்கை களில் ஆழ்ந்த தீவிரமுள்ளவர்களின் நடவடிக்கைகளால் தான் ஹுசேன் இந்திய நாட்டைவிட்டு வெளிநாடுகளில் வசிக்கிறார்’ என்ற கேலிச்சித்திரக் காரரின் ஆதரவாளர்கள் அள்ளித் தெளிக்கும் குற்றச்சாட்டையே பொய்யாக்குகிறது.
ஒரு இந்தியனாக, மேலும் எம்மதமும் சம்மதம் என்ற சர்வ தர்ம சமபாவத்தில் தனக்குள்ள பற்றைப்பற்றி பீற்றிகொள்ளும் பரந்த நோக்குடைய மதசார்பற்றோர், அவர்களுடைய அதே அளவுகோலால், மாற்றானின் மதத்திற்கும், அவர்களது உணர்ச்சி பூர்வமான மதப்பற்றிற்கும் மதிப்பு கொடுக்கத் தெரிதிருக்க வேண்டும்; ஆனால், நம் கேலிச்சித்திரக்காரருக்கோ, இதிலெல்லாம் நம்பிக்கையில்லை போல் தெரிகிறது.
கோடிக்கணக்கான இந்தியர்கள் இந்தியத் திருநாட்டையே, ’பாரதமாதா’ எனக் கொண்டாடும் போது, இந்த மன உணர்வை ஒவ்வொரு தைரியமுள்ள இந்திய தேசாபிமானியும், மதித்துத் தான் வேண்டும்.
ஆனால், இதே பேட்டியில், அவர் மேலும் கூறுவது:
”பாரதமாதா என்ற பெயர் நானாக சூட்டிவிடவில்லை. இது ஒரு மொழிவழி மரபே ஒழிய, வேறொன்றுமில்லை. இச்சொல், மொழியால் இந்திய நாட்டை அன்னையாக உருவகப்படுத்திப் பார்க்கும் மனோபாவமே. ஆனால், இதில் கடவுளோ அல்லது தேவியோ என்று ஒன்றுமே கிடையாது” என கொஞ்சமும் நெஞ்சில் ஈரமும் இன்றி பேசினர். இதற்கு மேலும் ஹுசேனின் இந்தியத்தன்மைக்கும், அவருக்குள்ள இந்திய உணர்வைப்பற்றிக் கூற ஒன்றுமே தேவையில்லை.
ஆனால், கோடிக்கணக்கான இந்திய நாட்டு மக்களே, பாரதமாதாவை ஒரு தெய்வத் தாயாக நினைந்து, இத்தேசத்திற்காக எந்த தியாகத்தையும் புரியத் தயாராக இருப்போரின் மன உணர்வுகளையும் மென்னுணர்ச்சிகளையும் இந்த கேலிச்சித்திரக்காரர், பிபிசி பேட்டியால் புண்ணாக்கவில்லையா?
கேலிச்சித்திரக்காரரின் பேச்சுபோல, ஹிந்துமதத்தவர் எவராவது, இவருடைய மதத்தையோ, அல்லது ஹிந்து அல்லாதவருடைய மதத்தைப்பற்றியோ பேசி இருந்தால் இங்குள்ள இதே பரந்தநோக்குள்ள மதசார்பற்றோர், ஹிந்துமதத்தவர் தலைகளைக் கொய்ய இந்நேரம் போர் புரிய புறப்பட்டிருப்பார்கள். ஹுசேனின் சொற்களும், ஆதரவாளர்களின் ’உரிமை’ கொக்கரிப்புகளும் இவர்களது கபட நாடகத்தைத் தான் அப்படியே அப்பட்டமாக அம்பலப்படுத்திக் கொள்கின்றன.
இந்திய ஜனநாயக கருத்து சுதந்திரத்தை ஒரு கேடயமாகக் கொண்டு, எதற்காக ஹிந்து கடவுள்களைப் பற்றி மட்டுமே கேலிச் சித்திரங்களாகத் தீட்டி, அதே கருத்து சுதந்திரத்தால், தனது இன புனித மாமனிதர்களைப் பற்றி கேலிச்சித்திரங்களை வரையாமல் இருப்பதைக் குறித்தோ ஹுசேனோ அல்லது அவர் ஆதரிப்போர்களோ தெளிவாக விளக்கம் கூற முற்படுவார்களா? [சித்திரம் தீட்டுவதற்கு வேண்டிய விஷயங்களா இல்லை? இதற்கு ஏற்ற விஷயங்களை அவர்களே திகட்டிப்போகும் அளவுக்கு அவர்கள் புனித நூல்களிலிருந்தே சான்றுகளாக ஏராளமாகக் கொடுக்க முடியுமே. இதில் கற்பனை கூடத் தேவையில்லை. தேவையானால் சொல்லவும்].
’தான தருமம் தன் இல்லில் தொடங்கவேண்டும்’ (Charity begins at home) என ஒரு முதுமொழி உண்டு. இதன்படி, எந்த ஓவியருக்கும் (மிக பிரசித்தமானவரோ, அல்லது புது ஓவியரோ) முதலில் தன் வீட்டிலுள்ளோரை, அல்லது தன் மதத்தோரை அம்மண கேலிச்சித்திரங்களாக வரைந்த பின், பிறர் மனையிலுள்ளோரை சித்திரமாகத் தீட்டிக்கொள்ளலாமே!. இவர்களுக்கு ஏதாவது கொஞ்சமா வது அறநிலையைப் பற்றி அறிவு இருந்தால், முதலில் தன் தாயார், மனைவியரையோ, உடன்பிறந்த சகோதரிகளையோ, தன் மதத்திலுள்ள புனிதர்களை நிர்வாண சித்திரமாக வரையாது, பிறர் மனைப் பெண்டிரை, அல்லது, மற்றோருடைய கடவுள்களை மட்டுமே நிர்வாண சித்திரங் களாக வரைவதற்கு எந்த தார்மீக உரிமையும், கிடையவே கிடையாது.
ஐயா!, ஜனாப் ஹுசைன் மிகப்பெரிய ஓவியர் என இருந்துவிட்டுபோகட்டும். ஆனால், அதே சமயம், அவரை போன்று வேறு எந்த சிறந்த ஓவியரோ பிறர் தாயாரை நிர்வாணமாக வரைந்தார்களோ இல்லையோ, அது பற்றி நமக்கு இதுவரை தெரியாது,
ஹிந்து கடவுள்களை மட்டும் சுதந்திரத்துடன் நிர்வாணப்படங்களாக வரைந்தது ஏன் என்பதற்கு, (தன் மதத்திலுள்ளோரை நிர்வாண ஓவியங்ளாகத் தீட்டாமல்), ஜனாப் ஹூசைன் உலகத்தோருக்கு விளக்கம் கூறித்தான் ஆகவேண்டும்.
மேற்கூறிய பிபிசி-ஹிந்தி பேட்டியில்,”உங்கள் மதத்தில் ஒருவரையோ அல்லது மக்கா-மதீனாவில் உள்ளோரையோ ஏன் சித்திரமாக வரைவதில்லை” என கேட்டதற்கு, அவர் அளித்த பதில், ”முஸ்லிம் கடவுளுக்கு உருவம் கிடையாது”என்றார். இதைக் கூறி ஹுசைன் உலகோரை முட்டாளாக்குகிறார். ஹிந்துமத கடவுள்களின் படங்களை எவரும் நேரிடையாக ஆண்டாண்டு காலமாக நேருக்கு நேராக புகைப்படம் (Photographs) பிடித்ததில்லை எனவும், இவைகளை நம் சரித்திரப் பிரசித்திபெற்ற இலக்கியங் களிலிருந்தும், புனித கிரந்தங்களில் காணும் விவரப்படி ஓவியம் தீட்டப்பட்டது, ஆக இவைகள் உண்மையான நேரிடையாக எடுத்த படங்களல்ல, என ஹுசைன் உள்பட, மற்ற எல்லோருக்கும், தெரிந்ததுதான். இந்த உண்மை ஹுசைனின் மதத்திற்கும் பொருந்தும். ஜனாப் ஹுசைனும் இஸ்லாமிய இலக்கியங்களிலிருந்தும், புனித நூல்களிலிருந்தும், படங்களை உருவகப்படுத்தி வரைந்திருக்கலாமே!. சொல்லப்போனால், ஓவியங்களுக்காக, மக்கா-மதீனா படங்களையும், உருவங்களையும், வரையலாம். [இதுவரை எவரும் வெளியிடாத தலைப்புகளிலிருந்தும், நாமே பிரேரித்தது வேண்டுமா?] ’நிர்வாணப் படங்களை மட்டுமே வரைவதில் ஹுசைனுக்கு ஆசை’ என அவரே தீர்மானித்து விட்டால், ஹிந்து மத்தில் உள்ளோரை ஹுசைன் வரைந்தது போல, பல லக்ஷக்கணக்கில் கிடைக்கும் நிர்வாண-முஸ்லிம் பெண்டிர் படங்களில் ஒன்றைக்கூடவா ஹுசைன் இன்னும் வரைய முடிய வில்லை?
” ஹுசைன் ஒரு முஸ்லிமாக இருப்பதால் தான் குறிவைத்து பிரதானமான இலக்காகத் தாக்கப்படுகிறார்” என சில முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதையே எதிரிடையாக (inversely) சொன்னால், இந்திய கருத்து சுதந்திரம் அளிக்கும் உரிமைப்படித்தான், ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு, ஹிந்து கடவுள்களை மட்டுமே நிர்வாண கேலிச்சித்திரங்களாக, அவரே வரைந்து கொண்டிருக்கிறார் என தீர்மானமாக மற்றோர் குற்றம் சாட்டலாமா?

பரந்த நோக்குள்ள மதசார்பற்றவராக சித்தரிக்கப்படும் ஹுசைன், ஹிந்து கடவுள்களை வெளிப்படையாக நிர்வாண ஓவியமாக சித்தரித்ததுபோல இஸ்லாமிய மதத்திலிருந்து சிலரை நிர்வாண ஓவியமாக வரைந்து, அவைகளுக்கு தலைப்பாக, “எனது அன்னை துர்கா”, எனது அன்னை சரஸ்வதி” அல்லது, ”எனது அன்னை பாரதமாதா”, என சித்தரித்திருந்தால் கூட, இவருடைய விமர்சகர்களிடமிருந்தும், குறை கூறுபவர் களிடமிருந்தும் கிடைத்த கூர்மையான, கடுமை தாக்குதல் தர்க்கங்களை சற்று மழுங்கச் செய்திருக்கலாமே!
ஹிந்து கடவுள்களை நிர்வாண ஓவியமாக வரைந்ததால் தான், பரந்த நோக்குடைய ஏனைய பரந்த நோக்குடைய மதசார்பற்றோர், மிதவாதிகளின் கண்களுக்கு ஜனாப் ஹுசைனும் ஒரு மதசார்பற்றவராகக் காட்சியளிக்கிறார். இவரே ஹிந்துமதத்தவரைத் தவிர, வேறொரு மதத்தவர்களை கேலி சித்திரங்களைத் தீட்டி ஒரு தட்டு தட்டிப் பார்த்திருந்தால், இவரே ஒரு ”தீவிரவாத மனப்பாங்குடையவர்” என சித்தரிக்கப்பட்டு, இக்குற்றங்களுக்காகவே சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கலாம்.
ஆலோக் மேஹ்தா என்னும் பிரசித்தி பெற்ற பத்திரிக்கை ஆசிரியர், இந்திய அரசியல் சாசனம் அளித்த, கருத்து சுதந்திரம் என்ற உத்திரவாதத்தின் பேரில், முகம்மதுவைப்பற்றி ஏற்கனவே உலகம் முழுதும் வெளியான ஒரு டேனிஷ் கேலிச்சித்திரக்காரர் வரைந்த, ஓவியங்களில் சிலவற்றை அப்படியே தனது பத்திரிக்கையிலும் வெளியிட்டார். அவ்வளவுதான். இதற்கே, இவர் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, பல நாட்கள் சிறையிலும் அடைக்கப்பட்டார். ஹூசைன் தானே இட்டுக்கட்டி மிக அசிங்கமான, பால் உறவு உணர்வை கொச்சையாக தூண்டிவிடும்படியான, (ஹிந்து கடவுள்களை மட்டுமே) நிர்வாண ஓவியமாக வரைந்த கேலிச் சித்திரங்களைப் போலலாமல், ஆலோக் மேஹ்தா பிரசுரித்த படங்கள், யாரோ எப்போதோ முன்னர் வெளியிட்டது, மேலும் அத்தனைத்தும், ஹூசைன் சித்திரங்கள் போல், அவ்வளவு கொச்சையாக, வெறுக்கத் தக்கவைகள்தானா? ஆனால், ஆலோக் மேஹ்தா வழக்கில், அருந்ததி ராய், போன்றோர் இவர் சார்பாக, கருத்து சுதந்திரத்தைப் பற்றிக்கொண்டு, தங்கள் மார்புகளிலும் வயிற்றிலும் ’லபோ திபோ’ என் அடித்துக்கொண்டு தெருத்தெருவாக கூச்சல் குழப்பங்கள் செய்ய முன்வரவில்லை.
இப்போது அரசாங்க ஜனநாயக ஆட்சிப்படி பிரத்யேகமாக, ஹிந்துக்களின் உள் உணர்வுகளை நோகடிப்போருக்குத்தான் தங்குதடை ஏதுமின்றி, குற்றம் சுமத்த முடியாத, கருத்துரிமை போன்ற சட்ட அனுமதிகள், தாராளமாக வழங்கப்படும் போலிருக்கிறது. [மற்ற பாவப்பட்ட மக்களுக்கு, இந்திய அரசியல் சாசன சட்டங்களே அளித்த சுதந்திரங்கள் உபயோகப்படுமா? ஒரு முடிவாகச் சொல்வதற்கில்லை!. Everyone is equal under Law, but some privileged few are more than equal !]
பிறர் துன்பத்தில் இன்பம் துய்க்கும் குணம் பலருக்கு உண்டு, மற்றவர் பெண்டிரைப் நோக்கும் போது காமப்பார்வையுடன் கண்ணால் விழுங்கிவிடுவது போல பார்த்து, மேலும் தங்கள் கற்பனையையும் ஓடவிட்டு, அயோக்கியத்தனமான எண்ணத்தில் திளைப்பதென்பது பலருடைய பொழுதுபோக்கும் கூட. இப்படிப் பார்ப்பவர்-திளைப்பவர்களுடைய பெண்டிரையே, மற்றவர்கள் பார்த்தாலேயே, இவர்கள், பார்த்தவர் கண்கள் இரண்டையும் நோண்டி எடுத்து விடுவார்கள். இது கைகலப்பில் ஆரம்பித்து கொலையிலும் முடியலாம்.
ஹுசைனின் கேலிச்சித்திர சுதந்திரங்களுக்கு ஆதரவு அளிக்கும் பிரசித்தமான எழுத்தாளர்கள் / கலைஞர்கள், கும்பலில், அருந்ததி ராய், நந்திதா தாஸ், போன்ற பெண்களும் அடக்கம். இக்கும்பலில் உள்ளோர் தங்களையோ அல்லது தங்கள் குடும்பத்தாரையோ, எந்த ஓவியராவது, [ஜனாப் ஹூசைன், ஹிந்து கடவுள்களை வரைந்தது போன்று] அப்பட்ட-அம்மணமாக வரைந்த ஓவியங்களுக்கும், ”ஹூசைன் ஓவியங்களுக்கு இப்போலி-மதசார்பற்றோர் காட்டிய அதே கருத்து சுதந்திர ஆதரவை” நேர்மையுடன் அளித்து, தங்கள் நிர்வாண ஓவியங்களை எல்லோருடன் கூடிப் பார்த்து மகிழ்ச்சி பொங்க, தாங்களும் பெருமையுடன் ரசிப்போம் என பகிரங்கமாகக் கூற இயலுமா?
இந்த பகிரங்க பிரகடனத்தைப் பற்றி வெளிப்படையாகக் கூற, நானே இவர்கள் அனைவரையும் இதன் மூலம் அறைகூவி அழைகிறேன். அப்படி என் அறைகூவலை ஏற்காவிடில், தங்களுக்கு ஒரு நியமம், மற்றவர்களுக்கொரு நியமம் என்னும் இவர்களுடைய கபடநாடகம் அம்பலமாகிவிடும். தஸ்லிமா நஸரீன், சல்மான் ரஸ்டி, போன்றோருக்கு, ”“நம்? கலாச்சாரம் ……….. வெறிக்கும்பல் கலாச்சாரம்” ” என்னென்ன …… செய்தார்கள் என்பதை நினைப்பூட்டவும் தேவையா? அல்லது எங்கோ உலகின் ஒரு மூலையில், அதுவும் இந்திய நாட்டின் வெளியில் ஏற்கனவே வெளியான டேனிஷ் கேலிச் சித்திரங்களுக்கும், சத்தாம் ஹுசைனை இராக்கில் தூக்கிலிட்டதற்கும், இந்தியாவின் பல இடங்களில் வெடித்த வன்முறை வெறியாட்டத்தால் விளைந்த பொருள் நஷ்டங்களும், எதிலும் சம்பந்தப்படாத பல நிரபராதிகளான இந்திய மக்களின் உயிர்களையும் காவுகொண்ட ””நம்? கலாச்சார”” செய்கைகளுக்கு நேரிடையாவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தமில்லையா?
பரந்த நோக்குடன் இருத்தல், மனமிரங்குதல் இவ்விரண்டுமே, மிகச் சீரிய பண்புகள். ஆனால், வேணுமென்றே உண்மைக்குப் புறம்பாக, கீழ்த்தரமாக இட்டுக்கட்டி மற்றவர்களைப்பற்றி எண்ணுதல், எழுதுதல், ஓவியமாக வடித்தல், மேலும் இரு கண்ணிருந்தும், பாரபட்சமாக, ஒற்றைக்கண் அரக்கனாக, பிணமாக, ஊமையாக, குருடனாக வேண்டுமென்றே கிடப்பது தான் மாபாதகம்! [“சாதாரணமாக தூங்குபவனைக் கூடத் தட்டி எழுப்புவது சுலபம், ஆனால், தூங்குவதாக பாசாங்கு செய்து, கண்ணை இறுக்க மூடிக்கிடப்பவனை எழுப்புவதென்பது முடியாத காரியம்”].


மூலம்

http://voi.org/index2.php?option=com_content&task=view&id=240&pop=1&page=0&Itemid=214

Series Navigation

அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்

அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்