ஹிதாயத்துல்லா
பித்தன் அவர்களுக்கு
தங்கள் வாதத்தின் கடைசிப் பகுதியின் சில கருத்துக்களை முன்வைத்து
பர்தா அணிய முஸ்லிம் பெண்கள் கட்டாயப்படுத்தப்படுவதால், அது இஸ்லாம் பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக குறிப்பிடுகிறீர்கள். சுதந்திரம் என்பதற்கு உலகம் முழுவதிலும் ஒரேவிதமான அளவுகோள் உள்ளதா ?
சுதந்திரம் என்பதற்கு தாங்கள் கூறும் வரைமுறை என்ன ?. தாங்கள் கூறும் சுதந்திரத்திற்கு எல்லை உண்டா ?
அப்படி வரைமுறை இருந்தால் அது மேற்குலகு கூறும் சுதந்திரத்திற்கு இணையானதா ? ஏனென்றால் அங்கு Gay, Lesbian திருமணங்கள் செய்யக் கூடாதென்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. தயவுசெய்து மீண்டும் ‘வச்சா குடுமி.. ‘ என்ற பழமொழியை கூறாதீர்கள். தாங்கள் சுதந்திரத்திற்கு வைத்திருக்கும் அளவுகோள் பற்றி தெரிந்துகொள்ளவே இதனை குறிப்பிடுகிறேன்.
‘பெண்களை தெய்வமாக வணங்குகிறது ஒரு மதம். பெண்களைக் கோவிலுக்குள் கூட விட மறுக்கிறது இன்னொரு மதம் ‘
பெண்கள் மட்டுமா தெய்வங்கள் ?
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். இன்றும் சவூதி அரேபியாவில் எல்லா பள்ளிகளிலும் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கென்று தனி இட வசதிதானே ஒழிய, ஆண்களும், பெண்களும் ஒன்றாக கலந்து அல்ல. இந்தியாவில் அவ்வாறு இல்லாதது இந்திய முஸ்லிம்களின் தவறு. இதற்கு இஸ்லாம் எப்படி பொறுப்பாகும் ? இன்று இதனை முஸ்லிம் அறிஞர்கள் சிலர் குறிப்பிடத்தான் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் சில ஊர்களிலும் இது நடைமுறையில் உள்ளது.
பாபரி மஸ்ஜித் இடிப்பும் தாலிபனின் புத்தர் சிலை தகர்ப்பும்
இரண்டும் ஒன்றாக நான் கருதவில்லை.
புத்தர் சிலை இடிப்பினால் 2000-த்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலி வாங்கப்படவில்லை.
புத்தர் சிலைக்கு யாரும் சொந்தம் கொண்டாடவும் இல்லை.
தாலிபான்கள் எந்த அரசியல் ஆதாயத்தையும் எதிர்ப்பார்த்து புத்தர் சிலையை இடிக்கவில்லை.
மாறாக சிலையை தகர்க்காமல் இருந்திருந்தால் UNESCO-விடமிருந்து நிதியும் பெற்றிருக்க முடியும்.
அது நபிகள் யாரும் பிறந்த இடம் என்றோ, அங்கு முன்பு பள்ளிவாசல் ஒன்று இருந்தது, அதனால் இடிக்கிறோம் என்றோ சப்பை கட்டு கட்டவில்லை.
‘மதத்திற்காக தீவிரவாதிகள் உருவாகியிருப்பது இஸ்லாத்திற்காக மட்டும்தான். இந்துத்வா என்பதும் அதுபோல் மதத்தீவிரவாத்தத்தை நோக்கியே பயனப்படுவதை ‘ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
இந்து தீவிரவாதம் என்ற பதத்தை மிக சமயோசிதமாக தவிர்த்திருக்கிறீர்கள், அப்படி சொன்னால் முன் கூறிய கருத்துக்கு முரணாக அமைந்துவிடுமாதலால் ‘இந்துத்வா என்பதும் அதுபோல் ‘ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
மேற்குலமும், இந்திய வெகுஜன பத்திரிகைகளும் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தில் மயங்கித்தான் இவ்வாறு உங்கள் கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்
முஸ்லிம்கள் செய்தால் அது இஸ்லாமிய தீவிரவாதம், அதுவே மற்றவர்கள் செய்தால் அது அந்த மதம் சம்பந்தபட்டதல்ல. அதை செய்தவர்கள் சமூக விரோதிகள் என்று வெகுசன பத்திரிக்கைகள் மீண்டும் மீண்டும் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றன.
புனிதப் போர்(Crusades) என்ற பெயரில் நடந்தவை என்ன ? அது மதத் தீவிரவாதம் இல்லையா ?
கிரஹாம் ஸ்டெயின்ஸை தீயிட்டு கொழுத்தியது மதத் தீவிரவாதம் இல்லை, ஒரு சமூக விரோதி.
பாபரி மஸ்ஜிதை இடித்த யாரும் தீவிரவாதிகள் கிடையாது, சமூக விரோதிகள்.
அதற்குப் பின் பம்பாயில் ஏற்பட்ட கலவரத்தில் 2000-த்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று குவித்தது தீவிரவாதிகள் அல்ல, சமூக விரோதிகள்தாம், இல்லையா ?
கோயம்புத்தூரில் ஒரு காவலாளியை கொன்றதற்காக, பல முஸ்லிம்களை கொன்று, மேலும் அவர்களுக்கு கோடிக்கணக்கில் பொருள் சேதத்தை விளைவித்தது தீவிரவாதம் அல்ல, சமூக விரோதிகளே, இல்லையா ?
குஜராத்தில் ஆயிரமாயிரம் முஸ்லிம்களை, கர்ப்பினிப் பெண்கள், குழைந்தைகள் என்றுகூட பார்க்காமல் கொன்று, இலட்சக்கணக்கானவர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கியது தீவிரவாதம் அல்ல. அதற்காக ஒருத்தர்கூட தண்டிக்கப்படமாட்டார்கள், அப்படித்தானே ?
இதுபோல் உலகெங்கிலும் முஸ்லிம்கள், தங்களுக்கு எது நேர்ந்தாலும், எப்பொழுதும் சகித்து கொண்டே இருக்க வேண்டும் ?
—-
-ஹிதாயத்துல்லா.
hidha@sify.com
(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)
- கடிதம் 4, மார்ச் 2004
- எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி!
- இலக்கியத்தில் வாழ்வின் தரிசனங்கள் :எனக்குப் பிடித்த கதைகள் -வாசிப்பனுவபம்
- முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்
- யுகபாரதியின் ‘தெப்பக்கட்டை ‘
- Frontend – Backend
- கடிதம் – மார்ச் 3,2004
- கடிதம் – மார்ச் 4,2004 – இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் – இன்னும் சில சந்தேகங்கள்
- கடிதம் – மார்ச் 4,2004
- கடிதம் – மார்ச் 4,2004
- கடிதம் மார்ச் 4,2004
- திசைகள் மின்னிதழ் அரும்பு சொல் வெளிஇணைந்து வழங்கும்
- மறு வாசிப்பில் திருப்புகழ்
- நிராகரிப்பு
- அருகிருக்கும் மெளனம்
- பாசமே நீ எங்கே ?
- பூ வண்ணம்
- என்னால் முடியும்
- எல்லாம் சுகமே..
- சூட்சும சொப்னம்
- முடிவுக்காலமே வைட்டமின்
- வேண்டாம்.. வேண்டாம்..ஆனால்..
- ‘கானா ‘ தாலாட்டு
- சிறகுகள்
- கண்ணகி கதை இலக்கியமா ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தெட்டு
- பாதை எங்கே ?
- வாப்பாக்காக…
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -15)
- விடியும்!- நாவல் – (38)
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 9
- முதன் முதலாய்
- கோஷா முறை
- பாஜக ஒளிர்கிறதா ?
- வாரபலன் – மார்ச் 4,2004 – காலங்கள் தோறும் – வல்லம்பர் சங்கம் – வந்ததா வரவில்லையா ? – கணையாழித் தொகுதி – ரங்கா டியர்
- பிளாஸ்டிக்
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 2
- புத்த களமா ? யுத்த களமா ?
- திரிசங்கு சொர்க்கம்
- நெருடல்களற்ற சுகம்
- ஐம்பூதங்களின் அழுகுரல்
- கரும்பும் கசந்த கதை
- அன்னை
- தனிமை விரும்பிகள் ரேடியோ அலைவரிசை (RFID) தொழில்நுட்பத்ததை ஏன் எதிர்க்கிறார்கள் ?
- பூகோளச் சுழற்சியால் அசுர ஹரிக்கேன்களை உருவாக்கும் கொரியோலிஸ் விளைவு (Coriolis Effect)
- சுற்றுச்சூழல் அழிவால் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்குகின்றன.