கடிதம் : மார்ச் 11,2004 – பென்கள் பள்ளிவாசலுக்கு போவது பற்றி

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

கா.மெளலாசா


பென்கள் பள்ளிவாசலுக்கு செல்வது என்பது ‘குதிரைக்கு கொம்பு முளைத்தது ‘ போல BBCக்கு அதிசயமோ ஆச்சரியமோ ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சி அல்ல. அது போலவே அரைகுறையாக இஸ்லாத்தை அறிந்த தாடி மட்டும் வளர்த்த (மூளை வளராத) இஸ்லாமிய பெயர் மட்டும் தாங்கிய ‘ஆண் மெளட்டாகவாதிகளும் ‘ முஸ்லிமென்று அடையாளம் காட்ட முக்காடுக்கூட போடாத ‘பெண் முற்போக்குவாதிகளும் ‘ பென்கள் பள்ளிவாசலுக்கு செல்வது பற்றி வீண் சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர்.

முழுமையான இஸ்லாமிய அறிவும் தெளிவும் பெறாத இஸ்லாமிய சமுதாயத்தின் இரு சிறுபான்மை துருவங்கள்தான் இப்பொழுது (எப்பொழுதும்) முஸ்லிகளின் பிரச்சினகளுக்கு காரணமாக உள்ளனர். அதில் ஒரு சாரார் பென்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று அடம்பிடிக்கின்றனர், மற்றொரு சாராரோ பள்ளிவாசலுக்கு போயே தீருவேன் என்று முரண்டுபிடிக்கின்றனர். இஸ்லாம் பற்றி எதுவும் தெரியாத இவர்கள் ஒரு சாரார் மற்றவர் மீது வீசியெறியும் புழுதிகள், புயல் என்ற அடைமொழியோடு முக்கியத்துவம் பெற்று செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் இடம் பெறுகிறது.

குழப்பமான நிலையில் இருக்கும் இருசாராரும் செய்யவேண்டியது என்னவென்றால் தங்களின் வீண் பிடிவாதத்தை கைவிட்டு குர் ஆன், ஹதீஸ்-லிருந்து ஆதாரங்களை உற்று நோக்கியோ அல்லது இறைத்தூதர் காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வுகாணப்பட்டது என்று ஆராய்ந்தோ அல்லது மார்க்க அறிஞர்களை கலந்தாலோசித்து பிரச்சினைக்கு முடிவு தேடவேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு இஸ்லாம் பற்றி abc தெரியாத BBC யிடம் போய் புலம்புவது வேடிக்கை. அதைவிட வேடிக்கை என்னவென்றால் இந்தியாவில் இருக்கின்ற பள்ளிவாசலையெல்லாம் இடிக்கவேண்டுமென்ற கூட்டத்தை சேர்ந்தவெர்களேல்லாம் இந்த புரட்சிக்காரர்களுக்கு கொடி பிடிப்பது போன்று பாவனை காட்டுவதுதான்.

பள்ளிவாசலுக்கு பென்கள் செல்லலாமா ?

பென்கள் பள்ளிவாசலுக்கு சென்று சமுதாய நிகழ்ச்சிகளிலும், மத சம்பந்தமான நிகழ்ச்சிகளிலும் பங்கெடுப்பதன் மூலம் மற்ற சகோதரிகளை சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பை பெறுகிறார்கள். பள்ளிவாசலில் நடைபெறும் மத விளக்கம் மற்றும் உரைகள் மூலம் இஸ்லாமிய நடப்புக்களையும், சட்டநெறிமுறைகளையும், உரிமைகளையும், கடமைக்களையும் அறிந்துக்கொள்ள உதவும். பள்ளிச்சென்று கல்வி கற்காத, இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் மார்க்க கல்வி பயிலாத பென்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள இதுபோன்ற வாய்ப்புக்கள் பயன்படும் அதனால் பென்கள் பள்ளிவாசல் செல்வதை தடை செய்ய முஸ்லிம்களில் யாருக்கும் அனுமதியில்லை.

பள்ளிவாசலுக்கு பென்கள் அனுமதிக்கப்பட்டது எப்போது ?

ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இறுதி இறைத்தூதர் (ஸல்) காலத்தில் பென்கள் பள்ளிவாசல் சென்று ஐவேளை இறைவனை தொழுது வந்தனர். பள்ளிவாசலுக்கு வந்து தொழ விரும்பும் பென்கள் பற்றி நபித்தோழர்கள் வினவிய பொழுது, ‘பள்ளிவாசலுக்கு வந்து தொழ விரும்புகிற பென்களை யாரும் தடுக்கக்கூடாது ‘ என்றே நபியவர்கள் மறுமொழி கூறினர். அப்பொழுதெல்லாம் பென்கள் தங்களை அடையாளம் தெரியாதவாறு முகத்தையும் கைகளையும் தவிர உடலின் மற்ற பாகங்களை மறைக்கும் இறுக்கமில்லாத ‘ஹிஜாப் ‘ அனிந்து தொழுகை முடிந்தவுடன் ஆண்களுக்கு முன்பாக பள்ளிவாசலை விட்டு வெளியேறுபவராக இருந்தனர். மேலும் பல பெண்கள் பள்ளிவாசலுக்கு தங்களின் குழந்தைகளையும், சிறுவர்களையும் அழைத்தும் வந்தனர். இறைத்தூதர் (ஸல்) பென்கள் பங்கேற்கும் தொழுகையை வழிநடத்தும்போது நீள்மான குர் ஆன் வசனங்களை தவிர்த்து சிறுசிறு வசனக்களை ஓதி தொழுகையை நடத்தினார். இதற்கு நபி (ஸல்) கூறிய விளக்கமென்ன தெரியுமா ? நீளமான குர் ஆன் வசனங்களை ஒதி தொழுகையின் நேரத்தை நீளமாக்குவதன் மூலம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் சிரமப்பட வேண்டியிருக்கும் மற்றும் தாய் மற்றும் சகோதரிகளோடு பள்ளிவாசலுக்கு வந்திருக்கும் குழந்தைகளும் சிறுவர்களுக்கும் நீண்ட நேரம் தொழுகையென்றால் அழுது கூச்சலிட்டு பென்களின் கவனத்தை தொழுகையிலிருந்து திருப்பிவிடும் என்பதால் சிறிய குரான் வசனங்களை தேர்ந்தெடுத்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து இறைவனைத்தொழலாம் என்பதையும், இந்த நடைமுறை இறைத்தூதர் காலத்திலேயே நடைமுறையிலிருந்ததையும் காட்டுகிறது.

இந்தியாவில் நடப்பதென்ன ?

இந்தியாவில் பெண்களில் பெரும்பாலானோர் பள்ளிவாசலுக்கு செல்லாமல் வீட்டிலேயே தொழுகின்றனர். ஆண்களில் பெரும்பாலானோர் பள்ளிவாசலுக்கு சென்றே தொழுகின்றனர். பெண்கள் வீட்டில் தொழலாமா ? அவர்களும் ஏன் ஆன்களைப்போல் இறையில்லத்துக்கு வந்து ஐவேளையும் தொழக்கூடாது ? ஆன்கள் வீட்டில் தொழலாமா ?அவர்களும் ஏன் பெண்களைப்போல் வீட்டிலேயே ஐவேளையும் தொழக்கூடாது ? இந்த கேள்விகளுக்கு பதிலைப்பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆண்கள் அனைவரும் பள்ளிவாசலுக்கு வந்துதான் (கட்டாயமாக) ஐவேளை தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இது ஒவ்வொரு முஸ்லிம் ஆணின் கடமை. பள்ளிவாசல் சென்று ‘ஜமாத் ‘துடன் சேர்ந்து தொழ வாய்ப்பிருந்தும் வீட்டிலேயே தொழுபவர்களுக்கு அத்தொழுகைக்கான பலன் குறைந்த அளவிலேயே கிடைக்கிறது. ஆனால் அடைமழை, அதிக குளிர் மற்றும் கடுமையான வெயில் காலங்களில் மட்டுமே ஆண்கள் தொழுகையை வீட்டிலேயே நிறைவேற்றிக்கொள்ள அனுமதியளித் திருக்கிறார்கள். இவ்வாறு ஆண்களை கட்டாயமாக பள்ளிவாசலுக்கு வந்து ஐவேளை தொழுகையை நிறைவேற்ற சொன்ன நபி (ஸல்) பெண்களுக்கு இவ்வாறான கட்டளைகளை பிறப்பிக்கவில்லை. இதற்கு காரணம் பெரும்பாலான பெண்கள் நடமுறையில் சந்திக்கும் பிரச்சினைகளின் காரணமாகத்தான். பென்கள் கட்டாயம் பள்ளிவாசலுக்குத்தான் வந்து தொழ வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் தினமும் ஐந்துவேளையும் தங்களை தயார் செய்துகொண்டு, முறையான ‘ஹிஜாப் ‘ அணிந்து பள்ளிவாசலுக்கு சென்று வரவேண்டும். ஏற்கனவே வீடு மற்றும் குழந்தை பராமரிப்பையும் மேற்கொண்டுவரும் இந்திய முஸ்லிம் பென்களுக்கு தினமும் ஐவேளை தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு சென்றுவருவது இயலாத காரியம் அதனால்தான் அவர்களின் வசதி கருதி பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே இறைவணக்கத்தில் ஈடுபட்டு விடுகிறார்களே தவிர இஸ்லாமிய கோட்பாடுகளும் கொள்கைகளும் பெண்கள் இறையில்லத்துக்கு வந்து தொழ ஒருபோதும் தடையாக இருந்ததில்லை..

தமிழகத்தின் முஸ்லிம்கள் வசிக்கும் பெரும்பாலான இடங்களில் பென்களுக்கென்று ‘பள்ளிகள் ‘, மதரசாக்கள் மற்றும் markazh கள் நிறுவப்பட்டிருக்கிறது. இவைகளில் பகல் நேரங்களில் பென்குழந்தைகளுக்கு குர் ஆன் ஒத பயிலவும், மற்றும் நோன்பு நேரங்களில் இரவில் சிறப்பு தொழுகையும் (பென்களின் தலைமையில்) நடந்து வருகிறது. பென்கள் தலைமையில் நோன்பு மற்றும் ஹஜ் பெருநாள் சிறப்புதொழுகையும் நடைபெறுகிறது. சிறிய மற்றும் பெரிய நகரங்களில் பென்களுக்கான இஸ்லாமிய உரைகளும், சிறப்பு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் ஆன்களால் நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பென்களும் உரையாற்றுவதை ‘புதுக்கோட்டையில் ‘ புயலை (புழுதி!) கிளப்பும் புரட்சி சகோதரிகள் அறியாமல் இருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

அவர்களின் அடுத்த குற்றச்சாட்டான ‘முஸ்லிம் பென்களுக்கு ‘ அநீதி வழங்கப்படுகிறது என்பதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. விதிவிலக்குகள் இருக்கும். அதை களைய வேண்டியது ஒவ்வொரு உண்மையான முஸ்லிமின் கடமை. ஆண்கள் பஞ்சாயத்து தலைவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் தாய், மனைவி, சகோதரிகள் மற்றும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் அதனால் அவர்களுக்கு பெண்களின் உணர்வுகள் தெரியும். பெண்கள் சம்பந்தமான விவாகரத்து போன்ற பிரச்சினைகளில் ஜமாத் தலைவர்கள் பெண்ணின் கருத்தையும், முடிவையும் அவளின் தாய் மற்றும் சகோதரிகளை கலந்தாலோசித்து உண்மை என்னவென்றறிந்து, பெண் துனை இல்லாத பட்சத்தில் அவளின் தந்தை மற்றும் சகோதரர்களின் கருத்தை அறிந்தே முடிவெடுக்கின்றனர். இதுதான் நடைமுறை உண்மை. சகோதரிகள் சொல்வது போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நடக்கவில்லை.

போலிமுற்போக்கு வாதிகள்தான் ‘ஒரு மதத்தில் பென்கள் தெய்வமாக வணங்கப்படுகிறார்கள் ஆனால் மற்றொரு மதத்திலே பென்கள் இறையில்லத்துக்கு அனுமதிக்கப்படவில்லை ‘ என்று இஸ்லாத்தைப்பற்றி அலுத்துக்கொள்கிறார்கள். ( ‘குஷ்பு ‘ வுக்கு கோவில் கட்டியதன் பின்னனி இப்பொதுதான் புரிகிறது என்று சொல்லவோ அல்லது ஷகிலாவுக்கு எப்போது கோவில் கட்டப்போகிரீர்கள் என்றோ கேட்கப்போவதில்லை). இஸ்லாம் மதத்தில் இறைவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் தெய்வமில்லை. இறைவன் ஒருவன் தான் அவனுக்கு ஈடு இணையில்லை. அவனுக்கு மட்டும்தான் தலை வணங்குவோம் (விதிவிலக்கு அன்வர் ராஜாக்களும்..ரகுமான் கான்களும்.)..

இறுதியாக ‘தூங்கி வழியும் புதுக்கோட்டையில் சிவப்பு செங்கல் கட்டட ஆபீசிலிருந்து ‘ (நன்றி யாழினி:http://www.thinnai.com/ pl0219041.html) இயங்கும் சகோதரிகளுக்கு ‘ ஒரு வேண்டுகோள்..தமிழகத்தில் மற்ற பாகங்களில் இஸ்லாமியர்கள் மத்தியில் என்ன நடைபெறுகிறது விழித்து பாருங்கள்..கிணற்று தவளையாக இருக்காதீர்கள்…

இஸ்லாம் முக்காடுபோட்டு உங்கள் உடம்பையும், முகத்தையும் தான் மூடச்சொன்னதே தவிர..மூளையை அல்ல..தவறாக இஸ்லாத்தை புரிந்துக்கொள்ளாதீர்கள்..பென்னுரிமை சம்பந்தமாக தெளிவு பெற எத்தனையோ பென் அறிஞர்கள் இருக்கிறார்கள். பல இஸ்லாமிய அமைப்புக்கள் இருக்கிறது..அவர்களை அனுகுங்கள்.

தவறும் அநீதியும் செய்கின்ற ஜமாத் அமைப்புக்களை தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் போன்ற சமுதாய அமைப்புக்களின் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்..

இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்ற தங்களின் தலைமையில் இருக்கும் 3000 சகோதரிகளுக்கும் அறிவுறுத்துங்கள்..நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழியில் வாழ்க்கை நடத்த முயற்சியுங்கள். இறைவன் மீது (மட்டும்) நம்பிக்கை வைத்து செயல்படுங்கள். இறைவன் அளித்த உரிமையை யாரும் தடுக்க இயலாது. இறைவனொடு சேர்ந்து சமுதாயம் உங்கள் வெற்றிக்கு உறு துனையாக நிற்கும்

அன்புடன்

கா.மெளலாசா

—-

moulasha@hotmail.com

Series Navigation

கா.மெளலாசா

கா.மெளலாசா