கடிதம் நவம்பர் 4, 2004 – வளமான பாதையில் திருமாவளவன்

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

மயிலாடுதுறை சிவா…


தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற புதியப் பாதையில் திருமாவளவன், திரு நெடுமாறன்

மற்றும் திரு இராமதாசு உடன் சேர்ந்து இருப்பது நல்ல பாதையே. அதுமட்டும் அல்ல

தமிழ் பாதுகாப்பு இயக்கம் அனைத்துப் போராட்டத்திலும் திருமாவளவனும், திரு இராமதாசும்

கை கோர்த்துக் கொள்வது மிக மிக நன்று. தமிழையும், தமிழ் மொழி வளர்ச்சியை பெரிதும்

விரும்புகிறவர்களும் இந்த இருத் தலைவர்களின் ஒற்றுமையை மனதாரப் பாராட்டத்தான்

செய்வார்கள். இவர்களுடைய இந்த ஒற்றுமை தமிழ் மொழியின் வளர்ச்சி மற்றும் தமிழ்

பாதுகாப்பிற்கு மட்டுமே, இது அரசியல் கூட்டணியா என்பதை காலம்தான் நல்ல

முடிவைச் சொல்லும். தமிழ் திரைப் படத்தில் ஆங்கில பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு,

தமிழ் நாட்டில் விளம்பர பலகைகள் தமிழில் பெயர் வைப்பது இதுப் போல் போராடுவதற்கு

திருமா, திரு இராமதாசு, திரு நெடுமாறன், திரு சேதுராமன் கைக் கோர்த்து

இருப்பது மனம் திறந்துப் பாராட்டப் பட வேண்டிய விசயம்.

திரு இராமதாசுக்கு, திருமாவளவன் மீது ஒர் தனிப் பற்றும், அன்பும், மரியாதையும்

வைத்து உள்ளார், அதற்கு ஓரே காரணம், திருமாவளவன் தலித் மக்களின் ஏகோபித்த

இளம் தலைவர் என்ற காரணமும், ஆரம்ப காலங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும், பிற்படுத்தப்

பட்ட மக்களுக்காக போராடும் பொழது சேர்ந்தே இருவரும் போராடி வந்தார்கள்.

ஒர் தாழ்த்தப் பட்ட நபரின் பிணத்தை மற்ற சாதி இந்துக்கள் வாழும் தெரு வழியாகக்

கொண்டு சென்ற பொழுது, திரு இராமதாசு தோள் கொடுத்து உதவியிருக்கிறார்.

அதற்காக திருமாவளவன் திரு இராமதாசுக்கு ‘குடிதாங்கி ‘ என்றப் பட்டத்ததை

வழங்கியுள்ளார். அப்படிப் பட்ட நட்பு தற்பொழுது மீண்டும் துளிர் விடுவதை தமிழ்

ஆர்வலர்கள் உற்று நோக்கிப் பாராட்டுகிறார்கள். பலர் தமிழ் அறிஞர்களின் ஆதரவோடு

திரு இராமதாசு திருமாவளவனோடு அனுசரித்துப் போவது இருவருக்குமே நல்லது

என பலர் நினைக்கிறார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திருமாவளவன்

அவர்கள் கிட்டதட்ட 2.75 லட்சம் ஒட்டுகளைப் பெற்று இருக்கிறார். இதில் குறிப்பிட

பட வேண்டிய விசயம் திமுக/அதிமுக/காங்கிரஸ்/பாஜாக/ கட்சிகளின் ஆதரவு இல்லாமால்

இவ்வளவு ஓட்டுகளை நாடாளுமன்ற தேர்தலில் வாங்கி இருக்கிறார் என்றால்,

திருமாவளவன் தலித் மக்களின் மிகபெரும் ஆதரவைப் பெற்று இருக்கிறார் என்று தெரிகிறது.

தலித் அல்லாத பல தலைவர்களும் திருமாவளனை ஓர் நல்ல இடத்தில்தான் வைத்து

இருக்கிறார்கள். எல்லாவற்றிக்கும் மேலாக தமிழ் நாட்டில் உள்ள ஏராளமான

தலித் இளைஞர்கள் திருமாவளவனுக்கு பின்னால் இருக்கிறார்கள். திருமாவளவனின்

மிகப் பெரிய பலம் அவரை பலமாக ஆதரிக்கும் இந்த இளைஞர் கூட்டம்தான்.

தமிழ்நாட்டில் ஒர் தலித் ஒருவருக்கு மறுக்கப் பட்ட, ஒடுக்கப் பட்ட, சமுதாய உரிமைகளை

திருமா கையில் எடுத்து போராடும் பொழுது அந்தப் பிரச்சினை சமுதாய மக்களால்

உற்று நோக்கப் படுகிறது. இதுவும் கூட திருமாவின் பலமே. திருமா கடைக்கோடி

கிராமத்திற்கு சென்று அடிமட்டப் பிரச்சினைகளைப் பற்றி பேசும் பொழுது அந்த

மாவட்ட ஆட்சியாளர் அதனை கேட்டுக் கொண்டு அதற்கு உதவுதாக உறுதி அளிக்கிறார்.

இதுவும் திருமாவின் பலமே. மேலும் அமெரிக்கா, கனடா, லண்டன், தென் ஆப்ரிக்கா,

மலேசியா, பிரான்சு மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள்

அவரைப் பேச அழைத்து உள்ளது. இதுப் போன்ற நாடுகளில் திருமா அடிப்படைப்

பிரச்சினைகளைப் பேசி புலம் பெயர்ந்த தமிழர்கள் இடத்தும் நல்ல மதிப்பைப்

பெற்று உள்ளார்.

தலித் மக்களின் மற்றும் தமிழ் அமைப்புகளில் திருமா சுய சிந்தனையோடு, சுயநலம்

இல்லாமல் போராடுவது அவரை நம் சமுதாயத்தின் ஓர் அங்கமான அரசியல் அவரை

வளமான பாதையில் இட்டுச் செல்லும் என்பது தமிழ் ஆர்வலர்களின் கணிப்பு.

நன்றி…

மயிலாடுதுறை சிவா…

sivaakumar@gmail.com

mpsiva23@yahoo.com

Series Navigation

மயிலாடுதுறை சிவா

மயிலாடுதுறை சிவா