கடிதம் 23,2004 – ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை!

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

மாயவரத்தான்


தமிழகத்தில் ஜாதி அரசியல் இல்லாவிட்டால் பல அரசியல்வா(ந்)திகளுக்கு பிழைப்பே கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே.

அதே போன்று, பிராமணர்களையும், பிராமணியத்தையும் மூச்சுக்கு முன்னூறு தடவை தாக்கி எழுதாவிட்டால் ஒரு சில ‘ஞானமற்றவர்களுக்கு ‘ பிழைப்பே கிடையாது போல!

ஜெயலலிதா அரசின் ஏதாவது ஒரு முடிவு பிடிக்கவில்லையா…உடனே ஜெ.வின் ‘பார்ப்பனிய ‘ தன்மையை சாடு! சங்கராச்சாரியார் கைதா…அதற்கும் பார்ப்பனியத்தை தான் தாக்க வேண்டும். அப்போது கைதை தைரியமாக நடத்திய தைரியலட்சுமியின் ‘பார்ப்பனிய ‘ பின்புலத்தை வசதியாக மறைத்து விடுவார்கள்.

அட…ஈ.வெ.ராமசாமியின் பிறந்த, இறந்த நாள்களுக்கு கட்டுரை எழுத வேண்டுமா ? உடனடியாக அவரது சாதனைகள் எதுவும் இருந்தால் அதை கூறுவதை விட்டு விட்டு, பார்ப்பனியத்தை தாக்குவது தான் முழுமுதல் கடனாக செய்து வருகிறார்கள்.

எல்லாவற்றிலும் ‘உள்நோக்கம் ‘ என்று இல்லாத ஒன்றை தானாகவே எழுதி வரும் இவர்களது இந்த மாதிரியான தாக்குதலுக்கு உண்மையான உள்நோக்கம் என்ன தெரியுமா ? ‘இயலாமை ‘ தான்!

வெகுஜனப்பத்திரிகைகள் என பலவற்றிலும் புகுந்து பார்த்தாகிவிட்டது. ஆனாலும் எதுவுமே கை கொடுக்கவில்லை. வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த ஒரு வாரப் பத்திரிகையை ஒரே வருடத்தில் மூடு விழா நடத்தி தலை தெறிக்க ஓடி வந்தாகி விட்டது. அதற்குப் பிறகும் எந்தப் பத்திரிகை தான் தைரியமாக இவரை வைத்து பத்திரிகை நடத்த முன் வருவார்கள் ? இந்த இயலாமை எல்லாம் சேர்ந்து தான் வெறியாக மாறி ஒட்டு மொத்தமாக சீற வைக்கிறது.

இப்படி எழுத ஆரம்பித்து, அது தொடர்ந்து இப்போதோ கண்ணில் படுகிற காட்சிகளனைத்தும் கெட்டதாகவே படுகிறது. தனது பார்வையில் குறையை வைத்துக் கொண்டு காட்சியில் பிழை காணுகிற இந்த மாதிரியான நபர்களிமிருந்து ஏக்கங்களையும், வசவுகளையும், பொருமல்களையும் தவிர வேறு எதையும் தமிழ் இலக்கியம் எதிர் பார்க்க முடியாது என்பது மட்டும் உண்மை!

– மாயவரத்தான் (info@mayiladuthurai.net)

Series Navigation

மாயவரத்தான்

மாயவரத்தான்