கடிதம் ஜூலை 29,2004 – வஹ்ஹாபிசம், வெட்டுக்கிளி கட்டுரைப்பற்றி ..

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

பொறையாறு நந்தன்


‘ராம ஜென்ம பூமியையும் – சோனியா ஜென்ம பூமியையும் ‘ வைத்து ஏமாற்று அரசியல் நடத்தி வந்த சங்க் பரிவாரத்தின் ‘சங்காக ‘ ஒலித்து வருபவர் ஆசாரகீணன். இவருடைய பெரும்பாலான கட்டுரைகள் திராவிடர் எதிர்ப்பு அல்லது இஸ்லாமியர் எதிர்ப்பு கருத்துக்களை உடையதாக மட்டும் இருக்கும். தந்தை பெரியார் தமிழ் மொழி பற்றியும், தமிழர் பற்றியும் செய்த விமர்சனங்களை பெரிது படுத்தி, திராவிட தமிழர்களிடம் பெரியார் பற்றி ‘சிண்டு ‘ முடித்துக்கொண்டிருந்தார். கடந்த காலங்களில், அவருடைய ‘தட்டச்சில் ‘ உருவாகி இதுவரை திண்ணையில் வெளியான கட்டுரைகள் அதை மெய்பிக்கும். தமிழர்கள், தமிழ் மொழி பற்றிய பெரியாரின் கருத்துக்களை திண்ணை வாசகர்களுக்காக தந்தவர் இராமாயனம், மகாபாரதம் போன்ற புராணங்களை பற்றிய பெரியாரின் கருத்துக்களை ஏன் திண்ணையில் எழுத முனையவில்லை என்பதிலிருந்தே இவருடைய உண்மையான ‘முற்போக்குத்தனமும் ‘ ‘சீர்திருத்தகுனமும் ‘ என்னெவென்று விளக்குகிறது.

அதே ஆசாரகீணன், தற்போது சீர்திருத்தவாதி-முற்போக்குவாதி என்ற போர்வையில் புகுந்துக்கொண்டு இஸ்லாம், மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான, சங்க் பரிவாரத்துக்கும் இவருக்கும் ஒத்தக்கருத்துடைய மேல் நாட்டினரின் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்களை மொழிபெயர்த்து வருகிறார். கேட்டால், தனக்கு தெரிந்த உண்மைகளை பரப்புவதாக எதிர்வாதம் செய்கிறார். மாற்றுமதமான இஸ்லாத்தைப்பற்றிய ‘உண்மைகளை ‘ அறிந்திருப்பதாக பீற்றுகிற இவர் ‘முழு நீள கற்பனை கதையை ‘ மட்டும் அடிப்படையாகக்கொண்டு, நிற-சாதி வெறியை அடிப்படையாக கொண்ட சனாதன மதத்தைப்பற்றியோ, தாழ்த்தப்பட்டவனை விலங்கினும் கேவலமாக கருதும் – கடவுளாக தன்னை திணிக்கும் சங்கரர் பற்றியோ இதுவரை ஒரு கட்டுரை கூட எழுதியதில்லை. இஸ்லாத்தை மட்டும் தாக்கவில்லை என்று காட்டிக்கொள்வதற்காக, தற்காப்புக்காக தீண்டாமை மற்றும் சாதிக்கொடுமை பற்றி இரண்டொரு வார்த்தைகளை தனது நீண்ட இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சார கட்டுரைகளில் குறிப்பிடுவார்.

இஸ்லாத்தை இவர் தாக்குவதற்கு மிக முக்கிய காரணம், இந்தியாவில் சங்க பரிவாரத்திற்கெதிரான வலுவான ஒரே எதிர்ப்பு சக்தியாக இந்திய முஸ்லிம்கள் இருப்பதுதான். சீக்கிய, ஜைன மற்றும் புத்த மதத்தை போல இஸ்லாமிய மதத்தையும், இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் என்று முத்திரைகுத்தி தனது முதலை வாய்க்குள் சிக்கவைக்க இயலாமல் போனதும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.

இணையத்தின் மூளை முடுக்கெல்லாம் சென்று எங்கேயாவது எவனாவது இஸ்லாமிய எதிரிகளை பற்றி எழுதியிருக்கிறானா என்று தேடிப்பிடித்து மொழிப்பெயர்ப்பு செய்யும் இவருக்கு, சமீபத்தில் BBC தயாரிப்பில் உருவான புலனாய்வு செய்திப்படமான ‘Secrets of Saibaba ‘ என்ற இரண்டு மனிநேர படம்பற்றி கேள்விப்படவேயில்லை போலிருக்கிறது. அத்வானி, வாஜ்பாயிலிருந்து – இல.கனேசன், ராஜா வரை காலில் விழுந்து வணங்கிய சாய்பாபா தன் அருள் கடாட்சம் பெற வந்த ‘விதேஷி ‘ பக்தர்களுக்கு ‘எந்த ‘ முறையில் ஆண்மீக நிவாரணம் அளித்தார் என்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. (விவரங்களுக்கு: http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/06/040621_saibaba.shtml). இதையெல்லாம் எழுதி விழிப்புணர்வை தூண்டி, இந்து மதத்தில் இருக்கும் மூட நம்பிக்க்கைகளையெல்லாம் ஒழித்துவிட்டு அடுத்தவன் மதத்தை சிர்திருத்தம் செய்ய போகலாம். (ஒரு வேளை மூட நம்பிக்கைகளையெல்லாம் ஒழித்துவிட்டால் இந்து மதமே இல்லை என்று தெரிந்துவிட்டது போலிருக்கிறது!).

அமெரிக்காவுக்கும் RSS க்கும் பல ஒற்றுமை உள்ளது. அவற்றுள் முதன்மையானது, தங்களின் ஆதிக்க மனப்பாண்மையை, அடங்காபிடாரி தனத்தை எதிர்ப்பவர்களை உலகத்தின் மற்றும் மனித குலத்தின் எதிரிகளாக சித்தரித்து, தங்களை ‘அமைதி நேசர்களாக ‘ கூறிக்கொள்வது. ஒன்றுபட்ட ரஷ்யா, இருக்கும் வரை அமெரிக்க அவர்களை உலகின் எதிரியாக சித்தரித்து காட்டி துண்டாடும் முயற்சியில் வெற்றிபெற்று ரஷ்யா உடைந்து சின்னாபின்னமாகியதும் இஸ்லாத்தை தனது எதிரியாக குறிவைத்தது. தனது எதிரிகளை அழிப்பதற்கு இஸ்லாமிய வன்முறையை ஊக்குவித்து, பாகிஸ்தான் மதரசாக்களில் பயிற்சியளித்து, ரஷ்யர்களை எதிர்த்து போரிட்ட ஆப்கானிய முஜாஹிதீன்களை ‘விடுதலை போராட்ட வீரர்களாக ‘ சித்தரித்த அமெரிக்கா, இன்று அவர்களை தீவிரவாதிகளாக முத்திரை குத்தியது. அமெரிக்காவின் மூக்கை உடைத்த ஈரானை அடக்க ‘சதாம் ‘ என்ற காளைக்கு கொம்பு சீவி – எண்ணை தடவிய அமெரிக்கா இன்று சதாமை உலக அமைதியின் எதிரி என அழைக்கிறது. இன்று அமெரிக்கா உலகின் எதிரிகளாக சித்தரிக்கும் அனைவருமே ஒருகாலத்தில் தனது சுய நலனுக்காக அவர்களால் உருவாக்கப்பட்டவர்கள்தான். இது தெரியாமல் ஆசாரகீணன் இஸ்லாமிய வன்முறைவாதம் உருவானதற்கு புதுப்புது காரணங்களை மொழிபெயர்த்து நம்பச்சொல்கிறார்கள்.

உலக நாடுகளெல்லாம் தீர்மானம் போட்டு, எதிர்ப்பு பேரனி நடத்தி ஈராக் மீது படையெடுக்க வேண்டாம் என்று சொன்னதையெல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு, பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா கூறிய பொய்யை நம்பி, இராக் மீது படையெடுத்த அமெரிக்க கைகூளிகள், பேரழிவு ஆயுதங்கள் இல்லையென்றதும் திரும்பி வராமல், திருடப்படும் எண்ணெயில் பங்கு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தங்கியதை கண்டிக்க துணிவில்லாத ஆசாரகீணன், அமெரிக்க கையாட்களில் சிலர் தலையிழந்து முண்டமாகியவுடன், துண்டைக்கானோம் துணியை கானோம் என்று கைகூலி படைகளை நாட்டை விட்டு வெளியேற்ற செய்த ஈராக்கிய விடுதலை வீரர்களை, நடுநிலை வாதிகள் பாராட்டும்போது, அதை ஆசாராகீனன் விமர்சனம் செய்வது அம்பட்டமான RSS தனமாகத்தான் தெரிகிறது. ஈராக்கியர்கள் ஏதோ அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் புகுந்து அங்கிருக்கிறவர்களின் தலையை வெட்டுவதை போல ஒப்பாரி வைப்பது ஏன் ? தனது நாட்டுக்குள் புகுந்து துவம்சம் செய்கிறவர்களை ‘விருந்தோம்பல் ‘ செய்வதற்கு இராக்கில் இருப்பவர்கள் எல்லாம் ஆசாராகீனன்கள் அல்ல.

இந்தியாவை பொறுத்தவரை, இஸ்லாத்தை வன்முறையின் ஊற்றுக்கண்ணாகவும், இந்து மதத்தை மிகவும் சகிப்புத்தன்மை மிகுந்ததாக திரும்ப திரும்ப சில அறிவு ஜீவிகள் சொல்லி வருகிறார்கள். இவர்கள் எழுதும் கட்டுரைகளை படித்துவிட்டுத்தானோ என்னவோ ‘செல்வி.செயலலிதா ‘ மதமாற்றம் தடைசட்டம் கொண்டு வந்து – பிறகு ‘வெற்றுக்கூச்சல் ‘ என்ற உண்மை உணர்ந்து சட்டத்தை தூக்கி குப்பையில் தூக்கி போட்டார் போலிருக்கிறது!.

இந்திய முஸ்லிம்களை தீவிரவாதி, வன்முறைவாதி, அடிப்படைவாதி என்றெல்லாம் அழைத்து அலுத்துப்போய் புதிதாக ‘Locust ‘ என்று நாமகரனம் சூட்டியிருக்கிரீர்கள். இணையத்தில் தேடிப்பாருங்கள் இன்னும் புதிதாக எத்தனையோ மிருகங்கள், புழு, பூச்சிகள், கிருமிகள் பெயர்கள் கிடைக்கும்..அடுத்த கடிதத்திலோ அல்லது கட்டுரையிலோ அவர்களுக்கு சூட்டி மகிழுங்கள். ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள் தயவு செய்து எங்களையெல்லாம் பெருந்தன்மையாக ‘ஹிந்துக்கள் ‘ என்று அழைப்பதுபோல், முஸ்லிம்களையும் ஹிந்துக்கள் என்று அழைத்துவிடாதீர்கள்.

ஒரு வேண்டுகோள், அடுத்த முறை நேரம் கிடைத்தால் இணையத்தில் ‘சூத்திரன் ‘ ‘மிலேச்சன் ‘ போன்றவைகளுக்கு பதிலாக கொஞ்சம் ‘ஸ்டைலாக ‘ ஏதாவது பெயர் தேடிப்பாருங்களேன்..பல நூற்றாண்டுகளாக, முப்பாட்டன் காலத்திலிருந்தே மேற்கண்ட பெயரிலேயே தொடர்ந்து கொண்டிருப்பது..போரடிக்கிறது..

இறுதியாக: ஹம் கர்வ சே கஹே ஹம் ஹிந்து ஹைங்! (மகிழ்ச்சிதானே!)

ஜெய் ஹிந்த் (தேசப்பற்றை குறிக்க!)

(வேறு எதுவும் சங்க் பாடல்களோ, RSS பஜனைகளோ தெரியாததால்..இத்துடன் முடிக்கிறேன்).

நட்புடன்

பொறையாறு நந்தன்

ananthakumaran@hotmail.com

Series Navigation

பொறையாறு நந்தன்

பொறையாறு நந்தன்