கடிதம் ஜூலை 22, 2004 : வஹாபி இயக்கமும் வர்னாஷிரம லோகஸ்டுகளும்

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

பிறைநதிபுரத்தான்


‘வஹாபிசம் ‘ என்ற வார்த்தை இஸ்லாமிய எதிர்ப்பாளர்களிடையே, பல்லாண்டு காலமாக அவசியமற்ற கலக்கத்தையும் பயத்தை உருவாக்கி மிகவும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது. இத்தகைய தவறான புரிதல்வாதிகளின் மதி கலக்கத்தையும் கதி கலக்கத்தையும் போக்கும் வண்ணம் ‘வஹாபிசம் ‘ என்றால் என்னவென்று எண்னற்ற இஸ்லாமிய அறிஞர்களால் பல்வேறு காலக்கட்டங்களில் தெளிவுபடுத்தப்பட்டது. ஆனால், அத்தகைய விளக்கத்துக்கு பிறகும் கூட ‘வஹாபி ‘ இயக்கத்தை புரிந்துக்கொள்ளமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அறி(ழி)வுஜீவிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது கடந்த வாரம் திண்ணையில் வெளியான கடிதம் மூலம் தெளிவானது.

‘வஹாபி ‘ இயக்கம் தோன்ற காரனங்கள்:

ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன்பாக, இஸ்லாத்தின் பெயரால் – உலகெங்கும் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முற்றிலும் எதிரான – நூதனமான வணக்க-வழிபாட்டு முறைகள் புகுத்தப்பட்டன. யாரால் தெரியுமா ? தெளிவான இஸ்லாமிய அறிவில்லா முஸ்லிம்களால், சாதி மற்றும் சமூகக்கொடுமைக்கு பயந்து பிறந்த மதத்தை கைவிட்டு இஸ்லாத்தில் அடைக்கலம் புகுந்த பிறகும் தங்களின் மூதாதையரின் வணக்க வழிபாடுகளை முழுவதும் விட்டொழிக்க முடியாதவர்களால். இத்தகையவர்களால் மார்க்க வழிகாட்டிகள்- இறைநேசர்கள்-ஆன்மீக வாதிகள் – ஆலிம்கள் என்று கருதப்பட்டவர்கள் இவர்களை வழிகேட்டிலிருந்து திருப்புவதற்கு பதிலாக – இஸ்லாமிய ஏகத்துவ கொள்கை சீரழிய காரணமாக அமைந்தனர்.

இந்து மதத்தில் இன்னும் நடைமுறையில் இருக்கும் ‘புரோகிதத்துவம் ‘ போல், உலக முஸ்லிம்களிடமும் ‘புரோகிதத்துவம் ‘ தோன்ற ஆரம்பித்தது. இந்து மதத்தில் அந்தனர்களுக்கும் – பூசாரிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது போல், முஸ்லிம்களால், அரபு மொழியறிந்த ஆலிம்களுக்கும்- ஹஜ்ரத்களுக்கும்- முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சம்ஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்ற உயர்சாதி ‘பெரியவாள் ‘ ‘சின்னவாள் ‘ தங்களை சமுதாயம் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு மதிக்கவும் துதிக்கவும் வேண்டுமென்று எதிர்பார்ப்பது போலவே அரபு மொழி தெரிந்த ஆலிம்களும்- ஹஜ்ரத்களும் முஸ்லிம்களிடம் எதிர்பார்த்தனர்.

யாகம் – பூசை-புனஷ்காரங்கள்-தீட்டு-பரிகாரம் என்ற பெயரில் மக்களை குழப்பி காசுகளைப்பறிக்கும் பூசாரி-புரோஹிதர்கள் போல் முஸ்லிம்கள் மத்தியிலும் சிலர் உருவாகி ஹத்தம்-பாத்திஹா என்ற பெயரிலும், அரபு மொழியும் – குர் ஆன் வசனங்களும் எழுதிய தாயத்து, நூல், தகடுகள் போன்றவைகளை விற்று பணம் சுருட்ட ஆரம்பித்தனர். சமாதி வழிபாடு களைகட்ட ஆரம்பித்து ஊருக்கொரு தர்காவும் – தெருவுக்கொரு கொடிக்கம்பமும் எழுந்து இஸ்லாத்தை கொச்சைப்படுத்த ஆரம்பித்தன.

நடமாடும் தெய்வங்களான – ரிஷிகள், முனிகள், பாபாக்கள் தொட்டாலே பாபங்கள் கழிந்து பரிசுத்தமாகிவிடுவோம் என்ற நம்பிக்கை இந்து மக்களிடம் இருப்பதுபோல், முஸ்லிம்கள் மத்தியிலும் மெய்ஞானிகள் என்ற பெயரில் பொய் ஞானிகளும், ஆன்மீக தேடலுக்கு வழிகாட்டி களாக பல ‘செய்குமார்கள் ‘ உருவாகினர். தெளிவான இஸ்லாமிய அறிவில்லாதவர்கள் அவர்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். அதனால், இறையில்லங்கள் புறக்கணிக்கப்பட்டு – செய்கு மார்களும் -பீர்களும் வசிக்கும் இடங்களும் – மடங்களும் மற்றும் தர்காக்களும் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. இஸ்லாமிய நெறிக்கு முரனான துறவு நிலையை மேற்கொண்ட ‘இஸ்லாமிய துறவிகளும் ‘ ‘பீர்களும் ‘ இறைநேசர்களாக கருதப்பட்டதோடு மட்டுமல்லாது, இறைவனால் ஹராமென்று எச்சரிக்கப்பட்ட கஞ்சா- அபீனை அடித்துவிட்டு ‘மோன ‘ நிலையிலிருப்பதாக புருடா விடும் போலி சூபிகளின் உளறல்களும் – புலம்பல்களும்- இறைவேதத்தையும் நபி மொழியையும் போல புனிதமாக கருதப்பட்டது.

தான் மறைந்த பிறகு தனது சமாதி உயர்த்திக்கட்டப்படக்கூடாது அங்கே வணக்க வழிபாடுகள் நடத்தப்படக்கூடாது என்ற முகம்மது நபி (ஸல்) அவர்களின் வார்த்தையை உதாசீனப்படுத்தி – இறந்த இறைநேசர்களுக்காக சமாதி எழுப்பி – பச்சை நிற ஆடைகளால் போர்த்தி – பூக்களால் அலங்கரித்து – ஊது பத்திகள் கொழுத்தி (சூடத்திற்கு பதிலாக) – சாம்பிரானி புகைபோட்டு சமாதிக்கு சந்தனம் பூசப்பட்டது. மறைந்த இஸ்லாமிய பெரியோர்களில் சிலரை இறைவனுக்குரிய படைத்தல்-காத்தல்-அழித்தல் தன்மைகளை பெற்றவர்களாக கருதப்பட்டு ‘பெரிய எஜமான் ‘ ‘சின்ன எஜமான் ‘ என்று அழைக்கப்பட்டனர். இத்தகைய மனிதர்களின் சமாதிகளில், திருமறைக்கும் – நபிமொழிக்கும் மாற்றமாக முஸ்லிம்களால் பிரார்த்தனை செய்யப்பட்டு இறைவனுக்கு மட்டும் உரிய ‘சஜ்தா ‘ வும் (தலை வணங்குதல்) செய்யப்பட்டது. காலப்போக்கில், தர்கா வழிபாடு இஸ்லாத்தின் ஒரு முக்கிய அங்கமாக வளரத்தொடங்கியது. மறைந்த இஸ்லாமிய பெரியவர்களின் பெயரில் கந்தூரி விழா நடத்தப்பட்டது – விழாவின் போது -விசில்- கூத்து – கும்மாளம் – கச்சேரி – மற்றும் ரிகார்ட் டான்ஸ் போன்ற இழிவான – கழிசடையான பொழுது போக்கு அம்சங்கள் வளரத்தொடங்கியது.

தன்னிடம் இறைஞ்சிக்கேட்கும் சாமான்ய முஸ்லிமின் கோரிக்கையை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்றும், அல்லாவின் அருளை பெறுவதற்கான வழிமுறைகள் அறிந்த புரோகித இடைத்தரகர்களான தங்களின் சிபாரிசு இல்லாமல் சாமான்யன், நல்லடியானாக மாறமுடியாது என்ற தவறான பிரச்சாரம் வலுப்பெற ஆரம்பித்தது. சம்ஸ்கிருதம் தேவ பாஷை என்று புருடாவிட்டு, அம்மொழி அறிந்த ‘ அரை டிரவுஷர்களெல்லாம் ‘ தெய்வத்தின் கொடுக்குகளாக சுய பிரகடனப்படுத்திக் கொண்டு பக்தர்களிடம் பொருள் ‘வாங்கி ‘ – அருள் வாக்கு ‘விற்பது ‘போல, முஸ்லிம்களில் சில பச்சை நிற ‘பாபாக்கள் ‘ தோன்றி அருள்வாக்கு விற்றார்கள்.

அரபு பாஷையறியாதவர்கள் தங்களின் தாய் மொழி வழியாக குர் ஆனை படிப்பது ‘அல்லாவுக்கு அடுக்காது ‘ என்றும் தடுக்கப்பட்டனர். அதாவது, ஆலயங்களில் தமிழ் மொழியில் வழிபாடு கூடாது என்று எதிர்க்கும் சமஸ்கிருத சரனாகதிகளைப்போல் – முஸ்லிம்கள் மத்தியிலும் அரபு மொழியை வைத்து பிழைப்பு நடத்தும் மெளட்டாக கூட்டம் வளர ஆரம்பித்தது.

இந்து மதத்தில், இறைவனை அளித்த வேதங்களை சாமான்யர்கள் ‘கண்ணால் பார்க்கபடாது – கையால் தொடப்படாது – நாவால் படிக்கப்படாது – காதால் கேட்கக்படாது ‘ என்று கதைவிட்டு, குறிப்பிட்ட சாதியினரின் ‘அப்பன் வீட்டு ‘ சொத்தாக ஆக்கியது போல – அரபு மொழி மட்டும் தெரிந்த ஆலிம்களும் – செய்குமார்களும் – குர்ஆனுக்கு குத்தகையாளராகவும் – அதன் விளக்கத்துக்கும் உரிமையாளராக மாற முயற்சித்தனர்.

அப்பாவி மக்களின் வாயில் வயிற்றில் அடித்து பிடுங்கி திண்ணுவதற்காக எல்லோருக்கும் வேத வரிகள் புரியாது என்று ‘கலாய்த்து ‘விட்டு காமிக்ஸ் கருத்துக்களையெல்லாம் கதாகாலஷேபமாக்கி காசுபண்ணும் கயவர்கள்ப்போல – குர் ஆனின் வார்த்தைகளை சாமான்ய முஸ்லிம்கள் புரிந்துக்கொள்ள முடியாது, ஏனென்றால், அதற்கு உள் அர்த்தம் உண்டு – வெளி அர்த்தம் உண்டு என்று பயமுறுத்தி, எளிமையான – தெளிவான இறைவேதத்தை சாமான்ய முஸ்லிம்கள் சுயமாக அறிந்தும் புரிந்தும் கொள்வதிலிருந்தும் தடுத்தனர்.

மனிதர்களை பக்குவப்படுத்துவதாகவும் – ஆன்மீக தேடலுக்கு வழிகாட்டுவதாகவும் கூறி – அரசியல்வாதிகளிலிருந்து – விஞ்ஞானிகள் அனைவரையும் காலில் விழச்செய்யும், Air-Condition இந்றி சிலமனிநேரங்கள் கூட வாழ முடியா நடமாடும் தெய்வங்களைப்போல் இஸ்லாமிய சந்நியாசிகள் உருவானார்கள். அவர்கள் சொன்னது என்ன ? ‘இறைவனை ஐவேளையும் வணங்கவோ – நபி (ஸல்) அவர்களின் வாழ்வு முறையை பின்பற்றவோ – நோன்பு நோற்கவோ – ஏழைகளுக்கு ஜகாத் கொடுக்கவோ- ஹஜ்ஜுக்கு புனிதயின்யாத்திரை செல்லவோ அவசியமில்லை. ஆனால், என்மீது மட்டும் நம்பிக்கை வைத்து உன் ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்டால், இறைவனிடம் உனக்காக வாதாடி உன் பாவங்களை போக்கி சொர்க்கத்துக்கு அனுப்புகிறேன் ‘ என்று ‘முரீத் ‘ மற்றும் ‘பை அத் ‘ கொடுக்கும் ஆண்மீக வாதிகளின் கூட்டத்திற்கு மவுசு கூட ஆரம்பித்தது.

செய்கு முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்:

இத்தகைய மூடநம்பிக்கைகளும்-அனாச்சாரங்களும் பரவி காணப்பட்ட இத்தகைய காலக்கட்டத்தில்தான், இறைவேதத்தில் ஆழந்த பற்றுகொண்டு – உண்மையான இஸ்லாத்தை அறிந்துக்கொள்ளவேண்டுமென்ற ஆய்வு மனப்பான்மையோடு குர் ஆனையும் நபி மொழியையும் சிலர் அனுகினர். அவர்களில் ஒருவர்தான் செய்கு முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (அப்துல் வஹாபின் மகன் செய்கு முகம்மத்). இவர் சவுதி அரேபியாவில் இருக்கும் நஜ்த் என்ற பகுதியில் வாழ்ந்த மார்க்க பற்றுள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இஸ்லாமிய அறிஞரான அவருக்கு, முஸ்லிம்களின் நடைமுறைகளில் கானப்பட்ட சடங்குகளும் – கடைப்பிடிக்கப்பட்ட சம்பிரதாயங்களும் மிகவும் வினோதமாக தோன்றியது.

குரானில் இல்லாதவற்றையும் நபி (ஸல்) சொல்லிக் கொடுக்காதவற்றையும் பின்பற்றி இஸ்லாத்தின் தூய்மைக்கு கேடு விளைவிக்கும் மேற்கண்ட பழக்கவழக்கங்களை அழித்தொழிக்க எண்ணினார். மடமையில் மூழ்கி திளைத்த மக்களை மாற்றுவதற்காக ‘இஸ்லாமிய கொள்கைகளை தெளிவுபடுத்தல் ‘ என்ற குறிகோளோடு ஒரிறை கொள்கையை தவிர வேறு எதையும் முஸ்லிம்கள் பின்பற்றக்கூடாது என்று அறிவுறுத்தினார். அதனால் இஸ்லாத்துக்கு முரனான மூடப்பப்பழக்க வழக்கங்களை பின்பற்றும் முஸ்லிம்களை வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்தார்.

கலப்படமில்லாத இஸ்லாத்தை போதித்தவரை, இஸ்லாமிய எதிரிகள் பல துன்பம்- துயரங்கலுக்கு ஆளாக்கி அவரை படுகொலை செய்யவும் முயற்சித்தனர். இன்னல்களுக்கெல்லாம் பயந்து ஒடி ஒளிந்துக்கொள்ளாமல் – குழப்பவாதிகள் மற்றும் எதிரிகளின் கேள்விகளுக்கும்- விமர்சனங்களுக்கும் குர் ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு பதிலளிக்கப்பட்டன. தடையற்ற இத்தகைய வழிமுறையின் விளைவாக, குர்ஆனில் கூறப்படாத – நபி மொழியில் சொல்லப்படாத எதுவும் இஸ்லாம் அல்ல என்ற எண்ணமும் பேச்சும் தீவிரமாக மக்களின் சிந்தனையில் எழ ஆரம்பித்ந்து அரபு நாடுகள் முழுவதும் பரவ ஆரம்பித்தது. ஓரிறை கொள்கை வெற்றி பெற அரபகத்தின், அப்போதைய ஆட்சியாளன இப்னு சவ்தும் அவரது மகன் அப்துல் அஜீஸும் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களின் துணையோடும் ஆதரவோடும் அரபகம் முழுவதும் உண்மையான இஸ்லாம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

வஹ்ஹாபி : பெயர்க்காரணம்

இந்தக்கொள்கையையால் ஈர்க்கப்பட்டவர்களை ஆரம்பகாலத்தில் ‘முகம்மதிகள் ‘ என்று பிறர் அடையாளப்படுத்தினர். அதாவது முகம்மதை பின்பற்றுபவர்கள், சார்ந்தவர்கள், ஏற்றுக்கொண்டவர்கள் என்றனர். பின்னர் அவர்களாகவே சிந்தித்து முகம்மது என்றால் இறுதி இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் பெயர், அதனால் முஹம்மதி என்றழப்பதன் மூலம் – இறைவழியை பின்பற்றுகிற தாங்கள் முகம்மதை பின்பற்றுபவர்கள் என்று தவறாக புரியப்பட்டு விடுவதிலிருந்து தவிர்க்க பெயரை மாற்றி வஹ்ஹாப் என்ற அவரின் தந்தையின் பெயரால் அழைக்கப்பட்டனர். வஹ்ஹாப் என்பது இறைவனின் 99 திருநாமங்களில் ஒன்று. இறைவேதத்தையும் – நபி வழிமுறைகளை மட்டும் பின்பற்றி நடக்கும் முஸ்லிம்களை ‘வஹ்ஹாபிகள் ‘ ‘நஜாத்திகள் ‘ மற்றும் ‘ஸலபிகள் ‘ என்று பிறர் அழைத்தாலும், இறைவன் இட்ட பெயரான ‘முஸ்லிம்கள் ‘ என்று தங்களை அடையாளம் காட்டி அழைப்பதைத்தான் இஸ்லாமியர்கள் விரும்புகிறார்கள்.

இந்தியாவில் வஹ்ஹாபி இயக்கம்:

1880 களிலேயே வஹ்ஹாபி இயக்கம் பற்றி இந்திய முஸ்லிம்கள் அறிய ஆரம்பித்திருந்தாலும், இந்த இயக்கம் பற்றிய தெளிவு பல ஆண்டுகளுக்கு பிறகுதான் ஏற்பட்டது. 1960 களில் அரபு நாடுகளுக்கு பணிபுரிய சென்ற இந்திய குறிப்பாக தென் இந்திய முஸ்லிம்கள் அரபு நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த கலப்படமில்லாத இஸ்லாத்தை, நேரடியாக கண்டு, தெளிவு பெற்றனர். இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், 1980- ன் ஆரம்பகாலத்தில்தான் தெளஹீது பிரச்சாரம் பரவத்துவங்கியது. அர்த்தம் தெரியாமல் குர் ஆனை மனனம் செய்துவந்த தமிழக முஸ்லிம்கள் தாய்மொழியில் அர்த்தம் விளங்கி குர் ஆனை புரிந்துக்கொள்ள ஆரம்பித்தனர். அரபு மொழியில் மட்டும் இருந்த ஹதீஸ்கள் தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டன. தமிழக முஸ்லிம்களிடையே நடைமுறையில் இருந்த இறந்தவர்களுக்காக ஓதப்படும் ஹத்தம்-பாத்திஹா, தர்கா வழிபாடு, கந்தூரி, ஒடுக்கத்தி புதன், ஹாஜா பாத்திஹா, பூரியான் பாத்திஹா போன்ற இஸ்லாமிய அடிப்படையில்லாத சடங்குகளும் – பழக்க-வழக்கங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு ஒதுக்கப்பட்டது. இந்த இயக்கத்தினரை ஆரம்பகாலங்களில் ‘முஸ்லிம் தி.க (திராவிடர் கழகம்) ‘ என்று முஸ்லிம்களே கேலியாக அழைத்ததுண்டு.

வர்னாசிரம ‘Locust ‘ களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில்:

கைபர்-போலன் வழியாக வந்த கள்ளக்குடியேறிகளை ‘மண்ணின் மைந்தர்கள் ‘ என்று நாமகரணம் சூட்டி புரட்டுவாதம் பேசும் உண்மை விளம்பிகளிடமும் – தில்லுமுல்லு பண்ணி ‘இந்திய வரலாறையே ‘ திருத்த முயன்று தேர்தலில் ‘பட்டை நாமம் சாத்தப்பட்ட ‘ பிரிவினைவாதிகளிடமும் நன்னடத்தை சான்றிதழ்வாங்க வேண்டிய நிலையில் இஸ்லாம் இல்லை.

குந்தி இருந்தே புரோஹிதம் பண்ணி தொந்தி வளர்க்க வாய்ப்பளித்த அப்பாவி – ஏமாளி மக்களையே Low Caste என்றழைக்கும் மனுவாத Locust கள்- சாதீயத்துக்கு சமாதி கட்டச்சொன்னதால்தான் இஸ்லாத்தை எதிர்க்கிறார்கள். அதனால்தான், இந்த ‘சுதேசி Locust-கள் ‘ இஸ்லாத்திற்கெதிரான இவர்களின் மேலைநாட்டு எஜமானர்கள் எழுதிய புருடாக்களையே version மாற்றி – ‘பழைய கள் புதிய மொந்தை ‘ பாணியிலேயே விடுகிறார்கள்.

இந்திய சமூகத்தில் சாதீய ‘புற்று நோய் ‘ பிடிக்க காரணமான ‘கேன்சர் கிருமிகள் ‘ – சக மதத்தவனின் சுயமரியாதை மற்றும் தன்மானத்தை வேதங்கள்-கடவுள்கள் பெயரால் அழித்தொழித்த வர்னாஷிரம Locust கள், நிறத்தின்-பிறப்பின் அடிப்படையில் மனிதர்களில் பேதம் கூடவே கூடாது என்ற இஸ்லாம் பற்றி எச்சரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

பகுத்தறிவையே மூட நம்பிக்கையென்னும் மனநோய் பிடித்த ‘பண்டார-பரதேசிகளுக்கும் ‘ – சமஸ்கிருதத்தின் வாலையும் – சங்கராச்சாரியரின் காலையும் பிடித்து – உருண்டு-புரண்டு சாஷ்டாங்கம் செய்துகொண்டே முற்போக்குவாதம் பேசும் முகமூடி மனிதர்களுக்கு, மனிதனை மனிதன் வணங்கக்கூடாது என்ற சுயமரியாதை கருத்துக்கள் கொண்ட ‘இஸ்லாமிய மாமருந்து ‘ நோயாகத்தான் தெரியும்.

இஸ்லாம் என்னும் பயிரில் ஊடுருவி வளர்ந்த களை-புல்-பூண்டு- போன்றவைகளை அழிக்க வந்த களைக்கொல்லி மருந்துதான் வஹ்ஹாபி இயக்கம். பயிர்போல காட்சியளிக்கும் விஷ செடிகளை ஊடுருவி வளரவிட்டு – நாசம் செய்ய எத்தனித்த இஸ்லாமிய பெயர் தாங்கிய போலிகளையும் நரிகளையும் ஏகத்துவ வாள் கொண்டு எதிர்த்ததுதான் வஹாபி இயக்கம்.

முஸ்லிம்கள் மத்தியில் நடைமுறையில் இருக்கும் மூடப்பபழக்க வழக்கக்களும் சீரழிவு செயல்பாடுகளும் இறை மறையாலோ, நபி மொழியாலோ ஒருபோதும் அங்கீகரிக்கப்பட்டதில்லை – பிறப்படிப்படையில் பேதம் காண்பிக்கும் வர்னாசிரமம், புரோஹிதம் மற்றும் பென்களை பொட்டுக்கட்டி தேவதாசியாக்குதல் சமூக சீர்கேடுகள் இந்து வேதங்களில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது போல..

பொருளாதார தடை விதித்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை கொன்றதோடு மட்டுமல்லாது- பேரழிவு ஆயுதங்களோடு ஈராக்கில் நுழைந்து, சின்னாபின்னமாக்கி, போர்க்கைதிகளை விலங்கினும் கேவலமாக நடத்திய ஆதிக்க சக்திகளை அங்கீகரிக்கிற இவர்களுக்கு – ஈராக்கில் தனது ஆண்டையின் ஆட்களில் சிலரின் தலைகள் வெட்டப்படுவது (பேரழிவு ஆயுதங்களால் அல்ல) கண்டு கலக்கம் வர காரணம் என்ன ?

முஸ்லிம்களிடம் புரையோடிக்கிடந்த அனாச்சாரம் – புரோஹிதம் – போன்ற மூடப்பழக்க வழக்கங்களை வஹ்ஹாபி இயக்கம் ஒழித்தது போல் – மீதம் இருக்கின்ற அறியாமையையும் பிரிவினைகளையும் போக்கும் காலம் வெகுதூரத்திலில்லை. இஸ்லாத்தில் நடக்கும் இது போன்ற சீர்திருத்தங்களின் வழியில் மீண்டும் ஒரு முறை இந்து மதத்தில் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு இயக்கங்கள் தோன்ற ஏற்பட வஹ்ஹாபி இயக்கம் காரணாமாகி, விழிப்புணர்வின் காரணமாக ‘அடிமைகளின் கூடாரம் ‘ காலியாகி விட்டால் ‘மீண்டும் கால் நடைகளோடு ‘ கைபர் -போலன் வழியாக திரும்பி செல்லக்கூடுமே என்ற இவர்களின் பயம்தான் இஸ்லாத்தை பூச்சாண்டியாக்கி மக்களை பயமுறுத்த தூண்டுகிறது.

இறுதியாக

நீங்கள் வேண்டுமானால் ‘வர்னாஷிரம குட்டையிலே ‘ ஊறி மகிழ்ந்து வாழுகின்ற முதலைகளாக இருந்துவிட்டு போங்கள் – உங்களின் வர்னாஷிரம வாளுக்கும் – வாய்க்கும் பலியாகி உணவாக ஏராளமான பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்டவர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், இறைமறைக்கு- நபி மொழிக்கும் முரனான மூடப்பபழக்க வழக்கங்கள் ஒழிக்கப்பட்ட கலப்படமில்லாத புனித நீர் நிறைந்த கிணறாக இஸ்லாம் இருப்பதிலும் – அதில் முஸ்லிம்களான நாங்கள் தவளையாக இருப்பதிலும் பெருமைப்படுகிறோம்.

செங்கோட்டையை காவிகோட்டையாக்க எத்தனிப்பவர்களை அடையாளம் வெட்டுக்கிளிகளாக இஸ்லாம் செயல்பட நியாயமான நிறைய காரனங்கள் இருக்கிறது.

பிறைநதிபுரத்தான்

say_tn@hotmail.com

pirainathipurathan@yahoo.com

—-

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation