கடிதங்கள் ஜூலை 1,2004

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

சின்னக் கருப்பன் – பி கே சிவகுமார்


சூடான் – டார்ஃபார் பற்றிய கட்டுரையில் தவறாக ‘சூடானில் எண்ணெய்

இல்லை ‘ என்று எழுதியிருந்தேன். அதனை நண்பர் ரவி அவர்கள் குறிப்பிட்டு என்

தவறைச் சுட்டிக்காட்டியிருந்தார். அவருக்கு நன்றி. சூடானில் எண்ணெய்

இருக்கிறது. ஆனால் டார்ஃபார் பகுதியில் இல்லை. ஆகவே ‘டார்ஃபாரில்

எண்ணெய் இல்லாததால் ‘ என்று திருத்தி வாசித்துக்கொள்ளும்படி

கேட்டுக்கொள்கிறேன்.

சின்னக்கருப்பன்

karuppanchinna@yahoo.com


திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். நான் எழுதி, திண்ணையில் பிரசுரமான ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 9 தொடரில் உள்ள ‘கறை படிந்தவர்கள் அமைச்சர்கள் ஆகலாமா ? ‘ என்னும் கட்டுரையில், ‘உதாரணமாக, முதல் தகவல் அறிக்கை ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் ‘ என்கிற வரி உள்ளது. அவ்வரியை, ‘உதாரணமாக, குற்றப் பத்திரிகை (Charge Sheet) ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் ‘ என்று திருத்தி வாசிக்குமாறு உங்கள் மூலம் வாசகர்களை வேண்டுகிறேன். தவறுக்கு வருந்துகிறேன்.

அன்புடன்,

பி.கே.சிவகுமார்

pksivakumar@att.netSeries Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்