கடிகை வழி பாதை

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

ராஜா



மறுவிநாடி தொட்டதும் மரணம்
என்றறிந்தவுடன்
மென்னுடல் நடுங்குகிறது
இருக்கும் நொடியில் இருந்து
இறக்கும் நொடி நோக்கி
நகர்கிறது
பாதி வழி கடந்ததும்
இறந்த நொடியிடமே
திரும்பிவிடுகிறது.
____________________________

சொல்வன்மை

புகைத்து விட்டு
வந்திருப்பவரிடம்
சொல்லக் கூடியது
பிணிகளின் பட்டியலல்ல
கைவிடுதலின் புத்திகூறல்ல
திசைதிருப்பலின் வழிமுறைகளல்ல
மாற்றுகளின் அறிமுகமல்ல
நன்றுகளின் உன்னதம் பற்றியதல்ல
வந்தவை போனவையின்
கணக்கு வழக்கல்ல

புகைத்து விட்டு
வந்திருப்பவரிடம்
சொல்லக் கூடாதது
யாரோ புகைத்துவிட்டு வந்திருக்கிறார்கள்
என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை.
____________________________________________________________

Series Navigation