கடலில் வீசப்பட்ட குழந்தை

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

ஹெச்.ஜி.ரசூல்


எறும்பொன்று உருமாறுகிறது
கடலில் வீசப்பட்ட குழந்தையாய்
அலைகளினூடே மூழ்கியெழுந்து மிதக்கிறேன்.
மயிலிறகு தூக்கமுடியாத சுமையாகிட
நினைத்த நேரத்தில்
எல்லாதிசைகளிலும் என்னுருவம்.
இறந்துபோன உப்பாவின் உயிர்
ஒரு கிளியின் உடம்பில் நுழைகிறது.
பலதுண்டுகளாய் வெட்டப்பட்டு
கொல்லப்பட்ட பறவை
ஜஹன்ன நெருப்பிலிருந்து
திரும்பவும் உயிர் பெற்று பறக்கிறது.
மிரண்டுவந்த கொம்பானையை
கைகாட்டி நிறுத்திவிட்டு
பறவைகளோடு பேசிப்பார்க்கிறேன்.
கருவண்டாய் பறந்து போகையில்
எனக்கெதுவும் நேர்ந்து விடவில்லை.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்