ஓர் இரவு

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

ப.மதியழகன்எல்லா கதவுகளும்
தாழிடப்பட்டுவிட்டன
அவன் உள்ளே நுழைந்த
நுழைவாயில் இருள் கவிந்திருந்தது
எங்கிருந்தோ
சர்ப்பத்தின் மூச்சுக்காற்று
ஷ்…ஷ்…ஷ்… வென்று வந்து கொண்டிருந்தது
சிலந்தி வலைகள்
மனிதர்களை சிறைப்படுத்தும்
வகையில் கம்பியைப் போன்றிருந்தது
பல்லிகள் கரப்பான்பூச்சிகளை
விழுங்கி விட்டு
பாம்பு போல் நெளிந்தன
வீட்டின் உத்திரமெங்கும்
வெளவால்கள் தலைகீழாக
தொங்கிக் கொண்டிருந்தன
அச்சமூட்டும் நிசப்தத்தில்
அருகாமையிலிருந்து
சலங்கை ஒலி கேட்டது
சற்று நேரம் கழித்து
கோரச் சிரிப்பொலி அறைச்சுவர்களில்
பட்டு எதிரொலித்தது
பயம் அவனை
மென்று தின்றுகொண்டிருந்தது
இங்கிருந்து தப்பிக்க முடியாது என்ற
உறுதிமட்டும் அவன் மனத்தை வியாபித்திருந்தது.

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்