ஓட்டைவாயன் நறுக்குகள்

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

ஓட்டைவாயன்


* தொடர் வேலை நிறுத்தம்
பிளாட்பாரவாசிகள்…
——————-
* கூழைக் கும்பிடு போடும் சிறுவனை
கோபத்துடன் பார்த்தது –
கொழுத்த நாய் காரில்
——————-
* ஏசியில் படுத்த போதும்
வேர்த்தது அவனுக்கு
இன்கம்டாக்சை ஏமாற்றி
சேர்த்த பணம்..
——————-
*. வெளியூர் போனாலும் போனில்
திட்டுகிறாள் மனைவி –
எல்லை தாண்டிய பயங்கரவாதம்..
——————-
* தாத்தாத்கள் போராடி வாங்கிய
சுதந்திர நாட்டில் இன்றோ
தாதாக்கள் ஆட்சி..
——————-
* சைதாப்பேட்டையில் பேய் மழை –
சென்செக்ஸ் சரிந்தது * தள்ளாடி நிலையத்தை அடைந்த ரயில்
தண்ணி ஏற்றியதும்
சீராகக் கிளம்பியது…
——————-
*. அவன் கடிதம் அனுப்பினான்
நான் மனசையே அனுப்பினேன்
அவள் இரண்டையும் கிழித்துப் போட்டாள்..
——————-
*. இருட்டு அரங்கத்தில் உள் வேஷம் போட்டவன்
வெளிச்ச அரங்கத்தில் மீண்டும்
வெளி வேஷம் போடுகிறான் – ஓட்டு கேட்டு..
சினிமா நாயகன்.
——————-
*. பம்பரம் சின்னத்துக்கு ஓட்டு கேட்டு
பம்பரமாய்ச் சுழலும் பஞ்சைத் தொண்டர்கள்..
——————–
* பொறியியலில் மகனை சேர்த்து விட்டு
பொரியல் ஆயினர் தாய் தந்தையர்
——————–
*தாய்மாரே தாய் குலமே என்றவன்தான்
அவளை தாயாக்கிய பின்
தலைமறைவானான்..

ஓட்டைவாயன்
pbn1961@gmail.com

Series Navigation

ஓட்டைவாயன்

ஓட்டைவாயன்