ஒரு மரக்கிளையில் சில நூறு குருவிகள் – நாடகம்

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

கணேசன்


(மெல்லிய ஒளி மேடையில் பரவியிருக்க பின்னரங்கிலிருந்து சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்த இசை மேடையை வியாபித்துக்கொண்டிருக்கிறது. இசையில் தன்மைக்கேற்ப வெற்று மேடையில் வண்ண ஒளிக்கற்றைகள் மாறி மாறி ஒளிர்ந்துகொண்டிருப்பது ஒரு சில சமயங்களில் இரண்டலல மூன்று வண்ண ஒளிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து வண்ணக்குழைவு ஏற்பட்டு மேடையை உயிரூட்டுகிறது. சில சமயம் எல்லா விளக்குகளும் ஒளியூட்டுவதை நிறுத்தியிருக்க ஒற்றை வெள்ளை ஒளிக்கற்றை முழுவதும் மேடைக்குள் எதையோ தேடுவது போல் மேடையை அங்குமிங்குமாக அலைந்து அலைந்து ஒளியூட்டுகிறது. அது ஒரு நடன அசைவை ஒத்தும் இருக்கிறது. இசையில் ஒலி மெல்ல கறைய ஏதுமற்ற அந்த மேடையுள் ஒருவன் வருகிறான். ஒளிக்கற்றையின் சோர்வான அசைவோடு அவனது அசைவும் இயைந்து இருக்கிறது. ஒளியின் நகர்வு நிற்பதற்கான நிலைக்கு வந்ததும் அவன் முன்மேடைவிளிம்பில் சோர்ந்து அமர்கிறான். பின்)

மெல்ல ஒரு வானம் விரிகிறது. அவளது சொந்தக் கனவில் எனக்கு குந்த ஒரு இடம் கிடைக்கிறது.

மெல்ல ஒரு வானம் விரிகிறது. அவளது சொந்தக் கனவில் எனக்கு குந்த ஒரு இடம் கிடைக்கிறத.

குந்தக்கிடைத்த இடத்தில் மெல்ல ஒரு வானம் மெல்ல விரிகிறது. வரிந்த வானின் கனவில் அவளுக்கும் இடம் கிடைக்கிறது.

(அவன் எழந்து மீண்டும் அந்த முன்மேடை விளிம்பிலேயே அமர்ந்து)

நெஞ்சில் மேகம் திரள> கண்ணடிச் சாளரத்ின வழியே பளிங்குக்கண் கொண்டு ஈர்த்தவளின் எதை ? எது ? என்று சொல்ல.

(பின் மேடையிலிருந்து ஒரு பளிங்குக்கல் உருண்டு வருகிறது. அதனை அவன் மெல்ல அனைத்து நிறுத்தி அதனோடு அவன் மீண்டும்)

நெஞ்சில் மேகம் திரள> கண்ணாடிச்சாளரத்தின் வழியே பளிங்குக்கண் கொண்டு ஈர்த்தவனின் எதை ? எது ? என்று சொல்ல.

(பளிங்குக்கல்லை அவன் அனைத்தவாரே அதனோடு பலவிதமான அசைவுகளை மேற்கொள்கிறான். மேடையின் ஒளிக்கேற்ப)

பளிங்குக்கல் நிறமாறுகிறது.

பகலுக்கொரு நிறம்

இரவுக்கொரு நிறம்.

நித்தம் நித்தம் உன்னை நினைத்து ஏங்கித் தவிக்க விடும் எனக்கு ஒரு நிறம்.

என்னுள் தளும்பிக்கொண்டிருக்கும் உனக்கு ஒரு நிறம்.

நிறம் மாறி

நிறம் மாறி

நிலைப்படாமல் தாவும் குணம் ஒரு நிறம்.

(அவனிடமிருந்து பளிங்குக்கல் விலகி பின் மேடைக்குள் உருண்டு ஓடிவிடுகிறது. அதனைப் பிடித்துவிட துரத்துகிறான். மறைந்துவிடுகிறது அவனது கைக்குள் அகப்படாமல். சோர்ந்து மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பிவிடுகிறான்)

காதல் வசீகரத்தை ஏற்படுத்தினாலும்

வயோதிகத்தையும் உள்ளடக்கி உருமுகிறது.

காதல்

காதல்

பாரதியின் சாதல்

(மேடைக்குள் சென்று ஒரு கட்டிலை இழுத்துவந்து முன்மேடை மையத்தில் போட்டு சிறிது நேரம் அமர்கிறான். யோசித்தவனாக சிறிது நேரம் கிழித்தபின் கட்டிலில் படுத்துக்கொண்டு போர்வையாளல் தன்னை மூடிக்கொள்கிறான். பின்னரங்கிலிருந்து குரல்)

அல்லிமல்லி அலர்ந்த காலமு:

அந்திமக்குதிரை துள்ளும் காலம்

பனித்துளி உடலைவிட்டு எழ

பணிக்குப் பணிந்தது உடல்

பாதி துணிக்குள் துவளுது ஒரு கடல்

மெல்ல போர்வையை விலக்கி சுற்றுமுற்றும் பார்க்கிறான். பிறகு அவன் அந்த குரலுக்கு பதிலளிக்கிறான்.

கனவில் கலந்துவிட்ட விஷத்தை

நொடிக்கொருதரமாக சுவைக்கிறேன்.

இனிக்கிறது.

புளிக்கிறது.

(போர்வையை வீசியெறிந்துவிட்டு சட்டென எழுகிறான். சுற்றுமுற்றும் பார்க்கிறான். அவன் பார்வையாளர்களைப் பார்த்து திரும்பும்போது ஒரு பெண் மேடைக்குள் நுழைந்து அவனுக்குப்பின்னால் அவனுக்குத்தெரியாமல் நிற்கிறாள்.)

வாசம் மாறுகிறது. வாசல் அதிர்கிறது. வெளிப்புற செல்களணைத்தும் ஈர்ப்பை உணர்கிறது. நான் என்னை மறக்கிறேன். ஈர்ப்பை யோசிக்கிறேன். யாசிக்கிறேன். புசிக்கிறேன். பின் . . .பின் . . . புலம்புகிறேன்.

(அவள் தன் கூந்தலை அவிழ்க்கிறாள்)

கடலின் ஓசை. அதனுள் யுகங்களாக ஏற்பட்டுவரும் உயிர்புரட்சி. இப்போது நான். யோசிக்கும் நான். பரிகாசத்திற்குள்ளாகும் நான். நான் தான் புரட்சியின் விளிம்பு. என்னிலிருந்து எது வருமோ. வருவதை நான் எப்படி பார்ப்பேன். நான் என்னவாக இருக்க முயற்சிப்பேன். இருப்பேன். மாறவேண்டிவருமோ. மாறாமலும் இருப்பேனோ. யாரங்கே சன்னலை மூடுங்கள் மூச்சுமுட்டுகிறது.

(அவன் மேல் மட்டும் ஒளியிருக்க மற்ற இடங்களில் ஒளி குறைகிறது. அவள் சென்றுவிடுகிறாள்)

நன்றி

எனக்கு கைகால்கள் இருப்பதல் காது கேட்கிறது. கண்.

கண் பார்க்கிறது.

இருப்பதைத்தான் பார்க்கிறதா ?

மேடைக்குள் சென்று ஒரு அலமாரியை இழுத்து வருகிறான். மேடையின் மையத்தில் பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கிறான். பின் அதிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு மெல்ல அதைத் திறந்து வாசிக்கிறான்.

~~பயணக்கலைப்பில் ஒரு வீட்டுத்திண்ணையில் அமர்ந்தேன் பின் உறங்கிவிட்டேன். கண்விழித்துப் பார்த்துபோது என்னைச் சுற்றி சனங்கள் எல்லோரும் என்னைப் போலவே இருந்தார்கள். அவர்களில் ஒரு சிலருக்கு என் விரல்களைப்போல நீளமான விரல்கள் இருந்தது. ஒரு சிலரின் பார்வை என் பார்வையைப்பற்றி பல சொன்னதுபோல இருந்தது. அந்த காந்தப்பார்வை – அவர்களிடம் கண்டேன். சிலர் அப்படியே அச்சாக என்னைப்போலவே இருந்தார்கள். அதில் ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு.

அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த நான் அவர்கள் என்னையே பார்த்துக்கொண்டிருப்பதை பிறகுதான் உணர்ந்தேன். சுயநினைவுக்கு வர முயற்சித்தேன். அப்போது என் தோளில் மென்மையான ஐந்து விரல்கள் பதிய திரும்பினேன். ஒளி விரல்கள் மட்டுமே தெரியும்படியான ஒளி. நான் மிரண்டிருக்கவேண்டும். பயந்திருக்கவேண்டும். அவ்விடத்தைவிட்டே ஓடியிருக்கவேண்டும். ஆனால் நான் அப்படியெல்லாம் செய்யவில்லை. அந்த ஒளியையெ பார்த்துக்கொண்டிருந்தேன். ஒளியை வெகுநேரம் நேருக்கு நேராக பார்க்க முடியுமா. பார்த்தேன். எனக்கு ஒளி ஒளியாகத்தான் தெரிந்தது. என்னை தொந்தரவு செய்யவில்லை. தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கும் ஒரு தோரணையை ஏற்படுத்திய அந்த ஒளி இப்போது மெல்ல அசைந்தது. என் மீதிருந்த அந்த விரல்களில் நடுக்கம் ஏற்பட்டது. முத்துமுத்தாய் வியர்த்தது. அந்த கூடத்தின் பின்னாலிருந்து ஒரு சிசு தவழ்ந்து தவழ்ந்து என்னை நோக்கி வந்தது. என் முகத்தை நக்கியது. விநோதமான வசீகரிக்கக்கூடிய இசையில் குரலெழுப்பியது. மீண்டும் தூங்கிவிட்டேன்.

(புத்தகத்தை மார்பில் புறட்டிப்போட்டுக்கொண்டு மெல்ல கட்டிலில் சாய்கிறான். பின்னரங்கிலிருந்து பெண்குரல்)

ஊரு காடு வித்தியாசமின்றி உலவுகின்ற உயிரே

உன் இருப்புக்குள்ளே உருளுவதும் புரளுவதும் நானென அறிவோயோ

(அவன் படுத்துக்கொண்டே)

நீலக்காடு உன்னை காட்டியபோது> சாயமற்றிருந்தேன்.

சாயும்போது பெற்ற சாயத்தால் காமுற்றேன்.

தவறென்று ஒரு கனவும் எடுத்துரைக்கவில்லை.

காயம் பெற்றும் சாயும் எண்ம் அறுபடவில்லை.

(என்று சொன்னவன் மெல்ல உறங்கிவிடுகிறான். பின்னரங்கிலிருந்து குரல்கள் ஒன்றையொன்று முந்திக்கொண்டு0

அவனைத்தொடுவதும் அவனை நினைப்பதும் அவனை பற்றி யோசிப்பதும்

நம்மை நாம் இழந்துவிட நேரும் ஒரு தொடக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு ஒப்பாகும்.

அவனை நம்மிலிருந்து பிரித்துவிடவேண்டும்.

அவன் நம்மோடு வாழ்வதற்கான எந்த சாத்தியத்தையும் பெற்றிருக்கவில்லை.

ஒரு காலத்தில் அவன் நாமாய் இருந்திருக்கலாம்.

இப்பொழுது அவனை நாம் நம்மோடு இணைத்துக்கொள்ள முடியாத . . .

(சிறிது இடைவெளிக்குப்பின் ஒரு குரல் தடுமாறிக்கொண்டே)

அந்த நிலைக்கு ஆளாகிவிட்டான்

அந்த நிலை

அதுவும் அந்த நிலைக்கு

அதனால் அவனை….

சிறிது மெளனத்திற்குப் பிறகு எல்லாக்குரல்களும் ஒன்றாகச் சேர்ந்து

காதல்

காதலின் காதல்

காதலோடு காதலுக்காக காதல்

திரை

—-

கணேசன் பாண்டிச்சேரி

Series Navigation

கணேசன்

கணேசன்