ஒரு பாசத்தின் பாடல்

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

சாம்


அவன்
ஏமாற்றப்படும்
பொழுதுகளில்
விம்மிஅழுதுவிடுகிறான்
காத்திருப்புக்களுக்கு
தோல்வி காணும்
குணங்களில்
நிலை மாறியிருக்கிறான்
அவனுடைய
சுருதி கலைந்த சங்கீதங்கள்
இனிமையை தந்தனவல்ல
இருந்தும்
பாடிக்கொண்டிருக்கிறான்
தனது தனிமைக்காக
அவனுள் ஊடுருவியகத்திகள்
கூர்மையாகின
சுவாசங்கள்
இன்னும்
பிடுங்கப்படவில்லை
மரணித்தும் போகலாம்
அவன் பாடிக்கொண்டே
இருந்தான்
சமூகத் திரையை கிழித்து
அப்போது தான்
எட்டிப்பார்த்தார்கள்
அவன் குற்றுயிராய்ஸ..
இல்லை
இறுதி மூச்சாய்
அந்திச் சூாியனாய்
உறங்கிப்போகிறான்
எனினும்
பாடிக்கொண்டுதான் இருந்தான்
ஒரு பாசத்தின் பாடலை
தன் தேசத்தின் பாடலை

—-
samprem@btinternet.com

Series Navigation