ஒரு கிராமத்து இளைஞனும் புலமைப் பரிசிலும்

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

மட்டுவில் ஞானக்குமாரன்


அந்த நேர்முகத்
தேர்விற்க்கான முடிவை
முன்னரே தெரியுமெனக்கு ஸ

ஆனாலும்
வரிசையிலே நிற்க்கின்றேன்
ஒரு நப்பாசையிலே

வெள்ளைக்காரனின் எச்சங்களை
உடலிலே
தரித்ததவர்களே
கேள்விக்கணைகளை வீசினார்கள்

அவர்களில்
ஒருவனோ
என் சான்றிதள்களை
சரிபார்க்கிறான்

வாயிலே
வருவதை எல்லாம்
கேள்விகளாக்கினான் இன்னொருவன் ..

இலக்கியம் தெரியுமா
ஆங்கிலத்திலே
அளந்தான் ஒருவன் ஸ ?

தமிழ்
இலக்கியம் தெரியுமென்றேன்
இழக்காரமாக சிரித்தான்

என்
அதி மதிப்பெண்களுக்கு
இங்கே
மதிப்பிருக்கவில்லை ஸ

அமைச்சர்களின் நெருக்கத்திற்கும்
மேசைக்கு அடியிலே கொடுத்தவருக்குமே
தேர்விலே
தெரிவு என்ற பின்னே

காயப்பட்ட
மனது வடித்த கண்ணீரிலே
உருசிய புலமைப் பரிசில்
கரைந்தது

கம்யூனிச நாடு போவதற்க்குக் கூட
சிபாரிசுகள்
தேவையாகிய பின்னாலே
என்ன செய்வேன் ஏழை நான்
ஊர் திரும்புகின்றேன் வெறுங்கையோடு ஸ.

கவிதை மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி)

Series Navigation

மட்டுவில் ஞானக்குமாரன்

மட்டுவில் ஞானக்குமாரன்