ஒரு உச்சிப்பனிக்காலத்தில்
அருண்பிரசாத்

ஒரு உச்சிப்பனிக்காலத்தில்
இடம்பெயர்ந்தன பறவைகள்
இலை இழந்த கிளைகளுக்கு
வெற்றுக்கூடுகளை மட்டும் தந்துவிட்டு.
போர்த்திய பனியுறையின் கீழ்
மட்கும் சருகுகளோடு
வலியுடன்புதையுண்டன
துரோகங்கள்.
தூரத்தே வரவேற்கும்
வசந்தத்தின் புத்துயிர்ப்பு
இன்றுகளை மென்றபடி.
everminnal@yahoo.com