ஒரு இணையதளமும் – அதிர்ச்சி உண்மையும்:

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

கோவிந்தராஜன் .கே


ஈராக் மேல் தொடுக்கப்பட்டுள்ள அமெரிக்க போருக்கான செலவு, எந்த விதத்தில் மற்றைய சில விஷயங்களுக்கு உபயோகித்திருக்கலாம்… ? உபயோகிக்கலாம்… ?

தோராயமாக, 21 செப்டம்பர் 2004, 12.53 பசிபிக் நேரப்படி,

ஈராக் போர்ச் செலவு: $136,218,082,313

கலிபோர்னிய மாநிலத்தின் பங்கு மட்டும்: $15,636,546,442

அதற்கு பதில், 6,603,562 நபர்களுக்கு நாலு வருட பொது கல்லூரிச் செலவிற்கு தந்திருக்கலாம்.

இல்லையெனில், 1,226,518 நபர்களுக்கு வீடு கட்டித் தந்திருக்கலாம்.

இல்லையெனில், ஐந்து வருடத்திற்கான உலக பசி நீக்கும் முயற்சிகள் அத்தனையையும் நடத்திருக்கலாம்.

கேட்க கேட்க நெஞ்சு குமைகிறது.

ஆனால், அதே சமயத்தில் ஒரு விஷயம் இந்த இணையதளம் தந்தவர்கள் சொல்லவில்லை.

தீவிரவாதத்தை வளரவிட்டால் அது எத்தகைய அழிவைத் தரும் அதிலிருந்து மீள உலகம் எவ்வளவு இழப்புகளைச் சந்திக்க வேண்டி வரும் என்ற விவரமே அது…!

ஒரு விதத்தில் இந்த போரால் இந்தியா காப்பாற்றப்பட்டிருக்கிறது. பற்றி எரியும் காஷ்மீரமும், கடத்தப்பட்ட விமானம் காக்க காந்தகாருக்கு தீவிரவாதியை கொண்டு சென்ற இந்திய மந்திரியும்.. சிதறிய பம்பாயும், பயந்து கிடந்த பல இந்திய நகரங்களும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுகின்றன.

அமெரிக்காவும் தீவிரவாதத்தின் வீச்சை தற்போது உணர்ந்துள்ளது.

kgovindarajan@gmail.com

NB: நான் சொன்ன விவரங்கள் உள்ள இணைய தளம்: http://www.costofwar.com

Series Navigation

கோவிந்த ராஜன். கே

கோவிந்த ராஜன். கே