ஒருவிதம்

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

மதியழகன் சுப்பையா


லூசு! என்கிறாள் தோழி

‘கோட்டி பிடிச்சவன்’
அம்மா கத்துகிறாள் அடிக்கடி

பைத்தியமாடா நீ!
எரிச்சலடைகிறான் தோழன்

சரியான கிறுக்கு
என்கிறார்கள் சகபணியாளர்கள்

ஆள் ஒரு மாதிரி
தீர்வு சொல்கிறார்கள் தெரிந்தவர்கள்

அவன் சைக்கோப்பா!
அடுத்த வீட்டாரின் அபிப்ராயம்

பித்து முத்திடிச்சி
முன் வீட்டாரின் முடிவு

சிதடன் என்கிறார்கள்
இன்னும் சிலர்

பிச்சி என்கிறார்கள்
மேலும் பலர்

உன்மத்த நிலையும்
ஒருவித நிலையும்
தனித்தன்மையென்பது
யாருக்குப் புரியும்

மதியழகன் சுப்பையா.
மும்பை.

madhiyalagan@rediffmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா