ஒருமனத் தம்பதிகள் ?

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

சி. ஜெயபாரதன், கனடா.கண்ணதாசன் பாடிய
காதல் புறாக்களைத் தேடுகிறேன் !
அவன் பேச நினைப்ப தெல்லாம்
அவள் பேசுவதில்லை !
ஒருமனத் தம்பதிகள்
உலகில் எங்குள்ளார் சொல்வீர் ?
அங்கிங்கு எனாதபடி எங்கும்
என் விழி காண்பது
இருமனத் தம்பதி !

திருமணத் தம்பதியர் உள்ளோட்டம்,
தேடல்கள் என்ன ?
பெண்ணை உணர்ச்சிப்
பிழம்பாய் ஆட்டிப் படைப்பவை
காம சுரப்பிகள் !
ஆணைத் தர்க்க வாதியாய்
ஆக்குவது
அவனது சுரப்பிகள் !
நெஞ்சுக்கும், மூளைக்கும்
நிற்குமோ
ஆயிரமாண்டு போர் ?

ஒருமனத் தம்பதிகள் என்று
கவிதை புனையலாம் !
இவன் ஒன்று நினைப்பாள் !
அவள் ஒன்று நினைப்பாள் !
விதி விளையாடும் !
ஆயினும்
இடிமழை வரும் போது
இருவரும்
ஒரு குடைக்கீழ் நடப்பார் !

+++++++
S. Jayabarathan [jayabarat@tnt21.com] September 13, 2007

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா