ஐஸ்கிரீம் வகைகள்

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

தேன் ஐஸ்கிரீம் – சாக்கலேட் துண்டுகள் ஐஸ்கிரீம் – வாழைப்பழ ஐஸ்கிரீம் – வெண்ணிலா ஐஸ்கிரீம் –


தேன் ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்

5 முட்டை வெள்ளைக்கரு

500 மில்லி பால்

250 மில்லி கிரீம்

1/2 கோப்பை தேன்

1 தேக்கரண்டி வெண்ணிலா எஸ்ஸென்ஸ்

செய்முறை

முட்டையையும் தேனையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும். பாலை ஒரு பாத்திரத்தில் அது கொதிநிலை வரும் வரை சூடாக்கவும். அதன் பின்னர் மெதுவான தீயாகக் குறைத்து விடவும். இதில் பால் தேன் கலவையைக் கொட்டி கெட்டியாகும் வரை கலக்கவும். இதனை தீயிலிருந்து எடுத்து வடிகட்டி குளிரவைக்கவும். இதில் கிரீமை சேர்த்து கலந்து வெண்ணிலா எஸ்ஸென்ஸ் கலந்து இதனை ஐஸ்கிரீம் கோப்பைகளில் ஊற்றி இரவு முழுவதும் உறையும் குளிர்பதன பெட்டியில் உறையவைக்கவைக்கவும்.

அடுத்த நாள் எடுத்து உண்ணலாம்.

****

சாக்கலேட் துண்டுகள் ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்

250 மில்லி பால்

250 மில்லி கிரீம்

75 கிராம் சர்க்கரை

125 கிராம் சாக்கலேட் தூளாக்கியது

செய்முறை

பாலையும் சர்க்கரையையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி மெதுவாக சூடேற்றவும். சர்க்கரை கரையும் வரை சூடாக்கவும். இதனை பின்னர் அடுப்பிலிருந்து எடுத்து தனியே குளிர வைக்கவும். குளிர்ந்ததும் இதில் கிரீமைப் போட்டு கலக்கவும். இதனை ஐஸ்கிரீம் கோப்பைகளில் போட்டு குளிர்பதனப்பெட்டியின் உறையும் அறைகளில் போட்டு உறைய வைக்கவும். சற்று நேரத்துக்குப் பின்னர் இவை கடினமாக ஆரம்பிக்கும்போது இதில் சாக்கலேட் துண்டுகளைப் போட்டு கலக்கி வைத்து இரவு முழுவதும் உறைய வைக்கவும்.

அடுத்த நாள் எடுத்து உண்ணலாம்.

—-

வாழைப்பழ ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்

1/3 கோப்பை பால்

2 முட்டைகள்

1 கோப்பை கிரீம்

1/2 கோப்பை சர்க்கரை

1 கோப்பை பழுத்த வாழைப்பழங்கள் மசித்தது

1 தேக்கரண்டி வெண்ணிலா எஸ்ஸென்ஸ்

2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

1/4 தேக்கரண்டி உப்பு

செய்முறை

மஞ்சள் கரு வெள்ளைக்கருவை பிரித்துக்கொள்ளவும்.

சூடான தண்ணீரின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து அதில் முட்டை மஞ்சள்கரு, சர்க்கரை இரண்டையும் சேர்த்து சற்றே கெட்டியாக மஞ்சள் நிறமாகும் வரை அடிக்கவும். அதில் பால், உப்பு, வாழைப்பழ மசியல், எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனை குளிர்ப்படுத்தவும். இதில் முட்டை வெள்ளைக்கரு, வெண்ணிலா எஸ்ஸென்ஸ், மற்றும் கிரீம் சேர்த்து கலக்கவும். இதனை ஐஸ்கிரீம் கோப்பைகளில் ஊற்றி குளிர்பதனப்பெட்டியின் உறையும் அறைகளில் வைத்து அடுத்த நாள் எடுத்து உண்ணலாம்.

—-

வெண்ணிலா ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்

1 1/2 கோப்பை பால்

3/4 கோப்பை சர்க்கரை

2 முட்டைகள்

1/4 கோப்பை தண்ணீர்

1 கோப்பை கிரீம்

1/2 தேக்கரண்டி வெண்ணிலா எஸ்ஸென்ஸ்

1/4 தேக்கரண்டி உப்பு

செய்முறை

முட்டை வெள்ளைக்கரு மஞ்சள் கருவை பிரித்துக்கொள்ளவும்.

தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சூடாக்கிக்கொண்டு அதன் மீது இன்னொரு பாத்திரம் வைத்து அதில் மஞ்சள் கரு, பால், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாகக் கலக்கவும். கரண்டியின் பின்னே ஒரு படலமாகப் படியும் வரைக்கும் கலக்கவும். இதில் உப்பு மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் மற்றும் கிரீம் சேர்த்து மெதுவாக மடிக்கவும். கரண்டியின் மூலம் மெதுவாக எடுத்து மடித்து மடித்து கலக்கவும். இதனை குளிர்பதனப் பெட்டியின் உறை அறையில் வைத்து முக்கால் பாகம் உறையும் வரை வைக்கவும். பிறகு வெள்ளைக்கருவை தனியே எடுத்து தீவிரமாக அடித்து நுரை நுரையாக வரும்வரை அடித்து இதனுடன் கலந்து மீண்டும் நன்றாக அடித்து இதனை உறை அறையில் இரவு முழுவதும் வைக்கவும். காலையில் எடுத்து உண்ணலாம்.

Series Navigation