ஐந்து மணிக்கு அலறியது
வே பிச்சுமணி
ஐந்து மணிக்கு அலறியது
கைபேசி அலாரம்
நிழல் உருவாய்
காபியோ கோலமோ
போட மின்விளக்கு போடாது
செல்லும் இல்லாள்
அபாய வரைகோடு ஆணை நீர் போல்
வயிற்றில் சிறுநீர்முட்டி கொண்டு
அலட்டி கொள்ளாத அரசாங்கமாய்
படுக்கையில் புரண்டு கொண்டிருந்து
உடலும் உள்ளமும்
காப்பி சூடாக வந்து
பாயை சுருட்ட செய்தது
குடித்தவுடன் மீண்டும்
குடிக்க தூண்டும் போதைபோல்
மீள பாயில் படுக்க விரும்பியது
உடல்
வாக்கிங் போகலையா
கட்டளையா கவனஈர்ப்பா
காலை கடனை முடித்து
கடனே என வாக்கிங்
டென்சண் குறைக்க
வாக்கிங் போவதே
டென்சண் ஆகி போகுது
இப்படி தினம்
என் காலை விடிகிறது
vpitchumani@yahoo.co.in