ஐக்கூ கவிதைகள்

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

டாக்டர் மா.வீ.தியாகராசன்


வான்மகள்
பூமி பாரக்கிறாள்- பகல்
திரும்பிக்கொள்கிறாள்- இரவு!

வான மங்கையின்
நெற்றிப்பொட்டு
நிலா!

காற்றினால் கற்பழிக்கப்பட்ட
மேகங்களின் கண்ணீர்
மழை!

விண்ணரசியின்
அலைபாயும் கூந்தல்
மேகக் கூட்டங்கள்!

கிழக்கு அடித்த
கிரிக்கெட் பந்து
மேற்கில் விழுந்தது
இது `சூப்பர் சிக்ஸ் ‘

வானத்தில் பறக்கும்
எந்திர எலிகள்
ராக்கெட்!

`பூ ‘வைத்தார்கள் – அந்தப்பூவைக்கு
தீ வைத்தார்கள் என் தெருவுக்கு
ஓ.. .. .. இது ஜா.. ..தீ..!

உலகம் சுற்றும்
உலகப்பறவை
விமானம்!

வாழ்க்கை
இட்லி.. .. தோசை.. .. பூரி இல்லை
இடியாப்பம்!

காசு இல்லாமல்
கடல் நீர் சுத்திகரிக்கப்படுகிறது
மழை!

மின்சாரத்தூண்டல்கள்
இல்லாமலேயே செய்திகள்
பரிமாறும் ஈ..மெயில் – காதல்!

எழுத்து
டாக்டர் மா.வீ.தியாகராசன்
சிங்கப்பூர் 270013
mthyagar@nie.edu.sg

Series Navigation

author

டாக்டர் மா.வீ.தியாகராசன்

டாக்டர் மா.வீ.தியாகராசன்

Similar Posts