ஏழாவது வார்டு

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

அனந்த்


***

ஏழாவது வார்டின்
மூன்றாவது மாடி அறைகளைக்
கெட்டியாகப் பூட்டிநிற்கும்
இரும்புக் கம்பிக்கதவுகள்
உள்ளிருக்கும் உன்மத்தங்களின்
இரகசியங்களை
மறைக்க இயலாமல் தவிக்க,

கீழே,
அடர்த்தியான மரக்கிளைகளை
ஊடுருவும் அவல ஓலங்களும்
கீச்சிட்டுத் தாவும் அணில்களும்
கையில் டென்னிஸ் மட்டைகளுடன்
இரு டாக்டர்களும்.

ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்