ஏப்பம் விட்டுப் பார்த்தபோது

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

கலாசப்பா


‘எண்ணம் என்பது ஏப்பம் இல்லை ‘ என்று ‘பேரறிஞர் ‘ சொன்னார். இப்படி ஒரு ‘தமிழ்க்கடல் ‘ பேட்டியில் அலையடித்திருந்தது. அதைப் படித்துவிட்டு ‘தத்துவப் பேரரசு ‘ தவிட்டுராயருக்குத் தோன்றிய பொன்மொழிகள் இவை. நீங்களும் புதிய இதுபோல பொன்மொழிகளைக் கண்டுபிடியுங்கள். அவற்றைத் தபாலட்டையில் எழுதி, அறிவாலயத்துக்கு அனுப்பி வையுங்கள். பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பொன்மொழிகளுக்கு அடுத்த ஆண்டுக்கான பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது ஆகியன கிடைக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ‘ஏப்பம் விட்டுப் பார்த்தபோது ஏலேலே, எறைஞ்சு விழுந்த பொன்மொழிடா ஏலேலே ‘ என்ற டைட்டில் சாங்கைக் கேட்டபடியே பொன்மொழி எழுத உட்காருங்கள்.

1. கொள்கை என்பது குசு இல்லை.

2. பணம் என்பது பிணம் இல்லை.

3. சிக்கல் என்பது விக்கல் இல்லை.

4. தமிழ் என்பது குமிழ் இல்லை.

5. மானம் என்பது மோனம் இல்லை.

6. சொல் என்பது செல் இல்லை.

7. வாக்கியம் என்பது வாந்தி இல்லை.

8. கற்பு என்பது பருப்பு இல்லை.

9. தெளிவு என்பது கழிவு இல்லை.

10. சித்தம் என்பது பித்தம் இல்லை.

11. கடமை என்பது மடமை இல்லை.

12. கண்ணியம் என்பது திண்ணியம் இல்லை.

13. கட்டுப்பாடு என்பது கட்டிப்புடி இல்லை.

14. சொத்து என்பது சொத்தைப்பல் இல்லை.

15. சினிமா என்பது எனிமா இல்லை.

16. பேச்சு என்பது பேதி இல்லை.

17. கூட்டணி என்பது குளிர்ஜூரம் இல்லை.

ஏப்பம் விட்டுப் பார்த்தபோது ஏலேலே

எறைஞ்சு விழுந்த பொன்மொழிடா ஏலேலே

பல்லு விளக்கித் துப்பும்போது ஏலேலே

துள்ளி விழுந்த பொன்மொழிடா ஏலேலே

மீதிப் பாட்டை எழுதிமுடிக்க ‘தமிழ்க்கடல் ‘ கவிப்பேரரசின் கொடைக்கானல் திராட்சை தோட்டத்துக்குச் சென்றிருக்கிறார் என்று தமிழ்முரசு ‘நச் ‘சுகிறது.

—-

kalasappa_2005@yahoo.co.in

Series Navigation