ஏன் போர்கள் நடக்கின்றன ? (அத்தியாயத்தின் இறுதிப் பகுதி)

This entry is part [part not set] of 20 in the series 20011001_Issue

மார்வின் ஹாரிஸ்

(இந்தக் கட்டுரை, டாக்டர் மார்வின் ஹாரிஸ் எழுதிய பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் என்ற மானுடவியல் பாடப்புத்தகத்தின் மூன்றாவது அத்யாயம், Primitive Wars. இதன் முதல் பகுதி சென்றவாரம் வெளியானது. இந்தவாரம் கடைசிப் பகுதி)

ஆகவே மாரிங் பழங்குடியினரின் போர்களின் முக்கியத்துவம், போர்களின் போது இறக்கும் மக்களால் மக்கள் தொகை குறைவதை எதிர்பார்த்து மட்டுமே நடப்பதாகக் கூறமுடியாது. பதிலாக, மாரிங் பழங்குடியினரின் சுற்றுச்சூழலை இரண்டு மறைமுகமான, அதிகம் ஆராயப் படாத விளைவுகளால் இந்தப் போர்கள் தக்கவைக்கின்றன என்று கருதுகிறேன். முதலாவதாக, மக்களுக்குப் போதுமான வளங்களை அளிக்க முடியாத ஒரு நிலை( carrying capacity )க்குக் கீழ் நிலம் செல்லும் போது, போரின் காரணமாக, மாரிங் பழங்குடியினர் தங்களது முக்கிய தோட்டங்களை விட்டு விடுகிறார்கள் . இரண்டாவதாக, போர்களின் போது, ஆண்களின் இறப்புகள் முக்கியமில்லாவிட்டாலும், பெண்சிசுக்கொலையை அதிகரித்து, பிராந்திய மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருகின்றன.

முதலில், முக்கியமான தோட்ட நிலங்களை விட்டுவிட்டுப் போவதை விளக்குகிறேன்

தோல்விக்குப் பிறகு பல வருடங்களுக்கு, தோற்றவர்களும் சரி, ஜெயித்தவர்களும் சரி, தோற்றவர்களின் நல்ல, மத்திய நிலப்பரப்பில் இருக்கும், தோட்டவேலைக்கு வசதியான தோட்டங்களைத் தொடுவதில்லை. இவ்வாறு அந்தத் தோட்டங்களை விட்டுவிடுதல், அந்த பிராந்தியத்தின் விளைவுற்பத்தியின் அளவினைத் தக்கவைக்க உதவுகிறது. 1953இல், குந்தகை (Kundegai) உபகுழு செம்பகா (Tsembega) உபகுழுவைத் தோற்கடித்த பின்னர், செம்பகா உபகுழுவின் தோட்டங்களை அழித்தார்கள். பழமரத் தோட்டங்களை அழித்தார்கள். அவர்களது புனிதமான கல்லறை நிலங்களை அசிங்கம் செய்தார்கள். அவர்களது பன்றித்தொழுவங்களை உடைத்தார்கள். அவர்களது வீடுகளை எரித்தார்கள். கண்ணுக்குப்பட்ட செம்பகா உபகுழுவின் வளர்ந்த பன்றிகளைக் கொன்றார்கள். பன்றிக்குட்டிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு தங்கள் கிராமங்களுக்குச் சென்றார்கள். ராப்பபோர்ட் சொல்வது போல, செய்யும் அழிவுகள், தோற்றவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதை விட, அந்த நிலங்களுக்கு செம்பகா உபகுழு மக்கள் திரும்பி வரக்கூடாது என்பதை நோக்கியே இருந்தது.

குந்தகை உபகுழுவினர், செம்பகா உபகுழுவின் மூதாதையர்களது கோபத்துக்குப் பயந்து கொண்டு தங்கள் கிராமங்களுக்குச் சென்று விட்டார்கள். அவர்கள் தங்களது புனிதமான பாதுகாப்பு வீடுகளுக்குச் சென்று கொண்டு அங்கு செம்பகா உபகுழுவின் மூதாதையர்களது ஆவிகள் தங்களை பாதிக்காமல் இருக்க புனித கற்களை தங்களது வீடுகளுக்கு முன்னர் தொங்க விட்டார்கள். அடுத்த முறை செம்பகா மக்கள் தங்களது மூதாதையர்களுக்கு நன்றி தெரிவித்து பன்றி விழா கொண்டாடும் வரை இந்தக் கற்கள் கீழே இறக்கப்படுவதில்லை. இந்தக் கற்கள் மேலே இருக்கும் வரை, செம்பகாவின் மூதாதையர்களது ஆவிகளுக்கு பயந்து கொண்டு செம்பகா உபகுழுவின் நிலங்களைத் தொடுவதோ, அங்கு தோட்ட வேலைகள் செய்வதோ, அங்கு வேட்டையாடுவதோ செய்வதில்லை. செம்பகா உபகுழுவினரே மீண்டும் தங்கள் நிலங்களை சுத்தம் செய்து, மீண்டும் குடியேறினார்கள். மற்ற போர்களின் போது, நான் முன்னமே சொன்னது போல, வெற்றி பெற்றவர்களும், அவர்களது தோழமை உபகுழுக்களும், அந்த நிலங்களை கைப்பற்றிக்கொண்டார்கள். ஆனால், எந்த நிகழ்ச்சியிலும், தோல்விக்குப் பின்னர் உடனடி விளைவு, அந்த நிலங்கள் காடுகளாகும்படி விட்டுவிடப்படுவதுதான். முன்பு தோட்ட நிலங்களாக இல்லாத, தோற்றவர்களின் எல்லைக்கோட்டைச் சுற்றிய நிலங்களே முதலில் பயிர் செய்ய ஆரம்பிக்கப்படுகின்றன.

நியூ கினியா மேலைநிலங்களிலும், மற்ற பூமத்தியரேகை காட்டுப்பிரதேசங்களிலும், மீண்டும் மீண்டும் ஒரே இடத்தையே வெட்டுவதும் எரிப்பதும் காடு தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் குணத்தை வெகுவாகப் பாதிக்கிறது. ஒரு எரிப்புக்கும் மறு எரிப்பும் இருக்கும் கால இடைவெளி குறைவாக இருந்தால், நிலம் வறண்டும், கடினமாகவும் ஆகிவிடுகிறது. மரங்கள் தங்களது விதைகளை மீண்டும் விதைக்க இயலாது. புற்கள் தோட்ட நிலங்களை ஆக்கிரமிக்கின்றன. வளமையான முதன்மைக் காடு அழிக்கப்பட்டு, அவை மெல்ல மெல்ல குண்டும் குழியுமான, தேய்ந்த புல்வெளிகளாக ஆகி விடுகின்றன. இந்த புல் நிலங்களில் பாரம்பரிய விவசாயம் செய்ய முடியாது. உலகெங்கும் இருக்கும் பல கோடி ஏக்கர் புல்வெளிகள் இவ்வாறே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

மாரிங் பழங்குடி மக்களிடையே மிகவும் குறைவாகவே காட்டழிப்பு நடந்திருக்கிறது. குந்தகை போன்ற வன்முறை நிறைந்த வெற்றிகரமான உபகுழுக்களின் பிரதேசங்களில் நிரந்தர புல்வெளிகளும், சீரழிக்கப்பட்ட இரண்டாம்தரக் காடுகளும் இருக்கின்றன. ஆனால், நியூ கினியா மேலை நிலங்களுக்கு அருகாமையில் பல இடங்களில் மற்ற பழங்குடியினர் வாழும் இடங்களில், அதிகமான பன்றிகளைக் காப்பாற்றவும், மக்களைக் காப்பாற்றவுமான முயற்சியில் நிரந்தரமாக அழிக்கப்பட்ட காட்டின் விளைவுகள் வெகுவாகக் காணப்படுகின்றன.

உதாரணமாக, டாக்டர் ஆர்தர் சோரன்ஸன் அவர்கள் தெற்கு ஃபோர் பிரதேசத்தை ஆராய்ந்திருக்கிறார். அங்கு ஃபோர் இன மக்கள், தாங்கள் வாழும் மத்தியப்பிரதேசத்து 400 மைல் சதுரப் பரப்பில். தாங்கள் வாழும் காட்டை நிரந்தரமாக அழித்து அங்கு காடுகள் தோன்ற முடியாத அளவுக்கு நாசம் செய்திருப்பதை குறிப்பிடுகிறார். தடித்த குனாய் புல் முன்பு இருந்த தோட்டநிலங்களிலும், முந்தைய காடுகளிலும் வளர்ந்து, மக்கள் சென்று அழிக்கும் காடுகளிலெல்லாம் பின் தொடர்ந்து செல்வதை குறிப்பிடுகிறார். பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடக்கும் தோட்ட விவசாயத்தின் மூலம் காடுகள் நிரந்தரமாக அழிவது பொதுவான காட்டழிப்பு விஷயம். ஆனால், மாரிங் பழங்குடிகளின் சடங்கு ரீதியான போர்முறைகளும், புனித ரும்பிம் மரத்து சமாதானமும், பன்றி கொலைகளும், மாரிங் இனப் பழங்குடியினரின் காட்டை அத்தகைய அழிவிலிருந்து காப்பாற்றி இருக்கின்றன.

இந்த சடங்கு சுழற்சியில் நடக்கும் ரும்பிம் மரம் நடுவது, பன்றி கொலைகள், மந்திர கற்களை தொங்க விடுவது, போர் போன்ற அனைத்து வினோதமான நிகழ்ச்சிகளிலெல்லாம் எனக்கு படு ஆச்சரியமாக இருப்பது அவைகள் சரியான நேரத்தில் நடப்பதுதான். மாரிங் பகுதிகளில் இருக்கும் தோட்டங்கள் குறைந்தது 10 அல்லது 12 வருடங்கள் தொடர்ந்து விளைக்கப்படாமல் கிடந்தால் தான் அவை மீண்டும் பயிர் செய்ய ஏதுவானவையாக ஆகும். அப்போதுதான் அவை மீண்டும் புல்வெளிகளாக மாறாமல் இருக்கும். பன்றி விழா ஒரு தலைமுறைக்கு இருதடவை நடக்கிறது. அதாவது சுமார் 10 அல்லது 12 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கிறது. இது வெறும் தற்செயலானதாக இருக்க முடியாது. ஆகவே, ‘மாரிங் பழங்குடியினர் தங்கள் மூதாதையருக்கு நன்றி செலுத்தும் அளவுக்கு போதுமான பன்றிகளை எப்போது வைத்திருப்பார்கள் ? ‘ என்ற கேள்விக்கு நாம் இப்போது பதில் சொல்லலாம். ‘தோற்றவர்களின் நிலத்தில் காடு மீண்டும் முளைத்து வளமையாக ஆனபின்னர், அவர்களிடன் தங்கள் மூதாதையருக்கு நன்றி செலுத்தும் அளவுக்கு போதுமான பன்றிகள் இருக்கின்றன ‘ என்பதே பதில்.

காட்டை வெட்டி-எரிக்கும் மற்ற மக்களைப் போலவே, மாரிங் பழங்குடி மக்களும், ‘காட்டை தின்று ‘ உயிர் வாழ்கிறார்கள். மரங்களை எரித்து அந்த சாம்பலில் தோட்டங்களை உருவாக்குகிறார்கள். அவர்களது சடங்கு ரீதியான சுழற்சியும், சடங்காக்கப்பட்ட போரும் அவர்களை காட்டை வெகுவேகமாகத் தின்று விடாமல் பாதுகாக்கிறது. தோற்ற குழுவினர், தங்களது நல்ல தோட்ட நிலங்களிலிருந்து பின் வாங்க உதவுகிறது. இவர்களாலும், பன்றிகளாலும் அழிக்கப்பட்ட காடு மீண்டும் புத்துயிர் பெறவும், அழிவின் நுனியில் உள்ள நிலங்களும், செடிகளும், மீண்டும் உயிர் பெறவும் இது வழி வகை செய்கிறது. தோழமைக் குழுக்களோடு வாழும் காலத்தில், இவர்கள் மீண்டும் தங்கள் நிலங்களுக்கு வரலாம். அப்படி வந்தாலும், காடாகவே இருக்கும் தங்களது நிலங்களிலேயே மீண்டும் தோட்டம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவர்களால் தோட்டமிடவும், பன்றிகளை வளர்க்கவும் முடிந்தால் மீண்டும் தங்களது பழைய நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள். இந்த சுழற்சியான வாழ்க்கைக் கீதத்தின் ஏற்றதாழ்வுகள், போரும் அமைதியும், வலிமையும் பலவீனமும், அதிகமான பன்றிகளும் குறைந்த பன்றிகளும், மத்திய தோட்டங்களும் எல்லைப்புறத் தோட்டங்களும், அருகில் இருக்கும் எல்லா உபகுழுக்களையும் பாதிக்கின்றன. வெற்றி பெற்றவர்கள் எதிரிகளின் தோட்டங்களை ஆக்கிரமிப்பதில்லை என்றாலும், தங்களது தோட்டங்களை எதிரிகளின் நிலங்களுக்கு அருகாமையில் அமைக்கிறார்கள். இதை விட முக்கியமாக, பன்றிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக குறைக்கப்பட்டு, காடுகள் பன்றிகளால் தின்னப்படுவதை வெகு விரைவாக குறைக்கப்படுகிறது. இது மக்களை அந்த காட்டின் வளமைத் திறனிற்குக் கீழ் உடனே கொண்டுவருகிறது.

பன்றிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் போது, வெற்றி பெற்றவர்கள் தங்களது மந்திரக்கற்களை கீழே எடுத்துவிட்டு, ரும்பிம் மரத்தை பிடுங்கிவிட்டு, ஆக்கிரமிக்கப்படாத, புதிதாக வளமை பெற்ற நிலங்களை ஆக்கிரமிக்க தங்களை தயார் செய்து கொள்கிறார்கள். தங்களது முந்தைய எதிரிகள் இன்னும் பலவீனமாக இருந்தால் அமைதியாகவும், எதிரிகள் தங்களது இடங்களை ஆக்கிரமித்திருந்தால், வன்முறையாகவும் தங்களை தயார் செய்து கொள்கிறார்கள்.

அலைபோல வரும் மனிதர்களும், பன்றிகளும், தோட்டங்கலும், காடுகளும் இணைந்த இந்த தொடர் சங்கிலிகளில், வெறெந்த நிலங்களிலும் இல்லாத அளவுக்கு பன்றிகள் ஏன் இங்கு புனிதத்துவத்தைப் பெறுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஒரு வளர்ந்த பன்றி ஒரு வளர்ந்த மனிதன் அளவுக்கு தின்னுவதால், அலையின் உச்சத்தில் ஒரு பன்றியைக் கொல்லுவது ஒரு மனிதனைக் கொல்லுவதற்கு சமானமானது. மூதாதையர்கள் பன்றிக்கறி தின்ன ஆர்வமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இல்லையென்றால், அவர்கள் தங்களது ‘ பிள்ளைகளைத் தின்ன வேண்டி வரும் ‘.

இன்னும் ஒரு பிரச்னை இருக்கிறது. 1953இல் செம்பகா உபகுழு தோற்றபின்னர், அவர்கள் 7 வேவ்வேறு தோழமை உபகுழுக்களிடம் தஞ்சம் புகுந்தார்கள். செம்பகா தோற்றதற்கு முன்னரும் பின்னரும், இந்த உபகுழுக்கள் இன்னும் பல தோற்றவர்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே, மக்கள் மூலம் நிலங்களுக்கு ஏற்படும் அழிவு ஒரு உபகுழுவிடமிருந்து மற்ற உபகுழுக்களுக்கு மாற்றப்பட்டு விடுகிறது என்றுதான் தோன்றும். அகதிகள் வெகு விரைவிலேயே தாங்கள் தஞ்சம் புகுந்த உபகுழுக்களின் நிலங்களையும் காடுகளையும் தின்ன ஆரம்பித்து விடுவார்கள். ஆகவே, மக்கள் தொகை இடம் மாறுவதன் மூலமாக மட்டுமே சுற்றுச்சூழல் அழிவைத் தடுக்க முடியாது. உண்மையிலேயெ மக்கள் தொகைப் பெருக்கத்தை தடுக்க ஏதேனும் ஒரு வழி இருக்க வேண்டும். இது பழங்குடி மக்களின் போர்கள் மூலம் நடக்கும் விளைவுகளின் இரண்டாம் பகுதிக்கு நம்மை கொண்டு வருகிறது.

பெரும்பாலான பழங்குடிகளின் சமூகங்களில், போர் என்பது ஒரு முக்கியமான மக்கள் தொகை கட்டுப்படுத்தும் உபாயம். ஏனெனில், அடிக்கடி நடக்கும் பழங்குடிகளுக்கு இடையேயான போர்களிலும், சண்டைகளிலும், போட்டிகளிலும், ஆண்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தால், ஆண்களை வளர்ப்பது பெண்களை வளர்ப்பதை விட முக்கியமானதாக ஆகிறது. அதிகமாக இருக்கும் ஆண்களால், அதிக வலு உள்ளதாக ராணுவம் ஆகிறது. கைகளால் வீசப்படும் ஆயுதங்களை நம்பி இருக்கும் சமூகம், இந்த ராணுவத்தின் மூலம் போர்க்களத்தில் அதிக எண்ணிக்கையுள்ளதாக ஆகி தன்னுடைய நிலத்தை தக்க வைத்துக்கொள்ளவும், பக்கத்தில் உள்ள உபகுழுக்கள் கொடுக்கும் பிரச்னைகளையும் தாங்க முடியும். சுமார் 600 பழங்குடி சமூகங்களை ஆராய்ந்த அமெரிக்கன் மியூஸியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரியைச் சேர்ந்த வில்லியம் டி டிவாலே அவர்கள் சொல்வது போல, எல்லா பழங்குடிகளிலும், பெண்களை விட ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள், முக்கியமாகக் குழந்தைப்பருவத்தில். சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் இருக்கும் சராசரி விகிதம், 150:100. சில குழுக்களில் பெண் சிறுமிகளை விட ஆண் சிறுவர்கள் சுமார் இரண்டு பங்கு இருக்கிறார்கள். செம்பகாவின் விகிதம் சுமார் 150:100. ஆனால் வளர்ந்தவர்களின் மத்தியில் ஆண்களும் பெண்களும் சரிசமமான விகிதத்திலேயே இருக்கிறார்கள். இதற்குக் காரணம், வளர்வதற்குள் பெண்களை விட அதிகமான ஆண்கள் போர்களிலும் மற்ற விஷயங்களிலும் இறப்பதால்.

வளர்ந்த ஆண்கள் மத்தியில் அதிகமான இறப்பு விகிதம் இருப்பதற்குக் காரணம் அதிகமான ஆண்கள் போர்களில் இறப்பது முக்கியக் காரணம். மாரிங் பழங்குடிகளில் போர்களின் போது இறக்கும் ஆண்கள் பெண்கள் சதவீதம் சுமார் 10:1 ஆனால் சிறுவர்களிலும் குழந்தைகளிலும் மாறுபட்டு அதிகமான ஆண்கள் இருப்பது எதனால் ?

பல பழங்குடிகள் வெளிப்படையான பெண்சிசுக்கொலையை கடைபிடிப்பதுதான் இதற்குக் காரணம் என்று டிவாலே அவர்கள் கூறுகிறார்கள். பெண் குழந்தைகள் மூச்சடைக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். அல்லது வெறுமே காடுகளில் கவனிப்பாரன்றி விட்டுவிடப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலான பழங்குடிகள் பெண்சிசுக்கொலையை மறைமுகமாகச் செய்யும்போது, அவ்வாறு தாங்கள் செய்வதில்லை என்று மறுக்கிறார்கள் – இந்து விவசாயிகள் தாங்கள் பசுக்களைக் கொல்வதை மறுக்கிறார்களே அது போல. இந்தியாவில் இருக்கும் பசுக்களுக்கும் காளைகளுக்கும் இடையே விகித வித்தியாசம் இருக்கிறதே அது போல, ஆண்குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் இடையே இருக்கும் எண்ணிக்கை விகித வித்தியாசம், பெரும்பாலும் நேரடியாக கொல்லாவிட்டாலும், மறைமுகமாக, பெண்குழந்தைகளை உதாசீனம் செய்வது, அதிகம் கவனிக்காமல் விட்டுவிடுவது போன்றதால் நடக்கிறது. ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் இடையேயான கவனிப்பில் ஒரு அம்மா செய்யும் மிகச்சிறிய வித்தியாசம் கூட தொடர்ந்து பலகாலத்தில் ஆண் பெண் குழந்தைகள் எண்ணிக்கை வித்தியாசத்துக்கு காரணமாகி விடுகிறது.

மிகவும் சக்தி வாய்ந்த கலாச்சார சக்திகள் மட்டுமே பெண் சிசுக்கொலை என்ற நடைமுறையை விளக்கவும், ஆண் குழந்தைகளுக்கு கிடைக்கும் பாரபட்சமான கவனிப்பை விளக்கவும் முடியும். உயிரியல் ரீதியை மட்டும் எடுத்துக்கொண்டால் பெண்கள் ஆண்களை விட முக்கியமானவர்கள். பெரும்பாலான ஆண்கள் இனப்பெருக்க ரீதியில் தேவையற்றவர்கள். ஒரு ஆணால் நூற்றுக்கணக்கான பெண்களை கர்ப்பிணிகளாக்க முடியும். ஒரு பெண்ணால் மட்டுமே குழந்தை பெறவும், குழந்தைகளுக்கு பால் கொடுக்கவும் இயலும் (பாட்டில் பால் கிடைக்காத சமூகங்களில்). ஆண் பெண் ரீதியில் குழந்தைகள் மீது பாரபட்சம் நடக்குமென்றால், ஆண் குழந்தைகளே பலிகடாவாக ஆவார்கள் என்பதைத்தான் நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இங்கு நேர்மாறாக இருக்கிறது. பெண்கள் ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளையும் செய்ய உடல் ரீதியிலும் மன ரீதியிலும் வலிமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதையும், இத்தகைய வேலைகளை ஆண்கள் துணை இல்லாமலேயே செய்யக்கூடிய அளவுக்கு வலிமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் பார்க்கும் போது குழப்பம் அதிகரிக்கிறது. ஆண் செய்யும் எந்த வேலையையும் ஒரு பெண் செய்ய முடியும். காட்டுத்தனமான சக்தி தேவைப்படும் சில வேலைகளைக் கூடச் சற்று அதிக நேரம் எடுத்துக்கொண்டு செய்து விடமுடியும். பெண்களால் வில் அம்புகள் கொண்டு வேட்டையாடவும், மீன் பிடிக்கவும், பொறிகளை வைத்து விலங்குகளைப் பிடிக்கவும், கற்றுக்கொடுத்தாலும் அனுமதிக்கப்பட்டாலும் மரங்களை வெட்டவும் முடியும். அதிக எடையுள்ள பொருட்களை தூக்கிக்கொண்டு செல்லவும், தோட்டங்களிலும் வயல்களிலும் வேலை செய்யவும் முடியும். காட்டை வெட்டி எரிக்கும் தோட்டவேலை செய்யும் மாரிங் போன்ற சமூகங்களில், பெண்களே முதன்மையான உணவு உற்பத்தியாளர்கள். புஷ்மென் எனப்படும் வேட்டை சமூகங்களில் கூட சமூகத்தின் உணவு தேவையில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களிடமிருந்தே வருகிறது. மாதவிடாய், கர்ப்பகாலம் போன்ற இடையூறுகளைப் பொறுத்த மட்டில், நவீன கால பெண் விடுதலையாளர்கள் சொல்வது போல, வேலைகளை செய்யும் காலத்தில் சில மாறுதல்களைச் செய்வதன் மூலம் இந்த இடையூறுகளையும் கடந்து விடலாம். ஆண்கள் செய்யும் வேலைகளுக்கும் பெண்கள் செய்யும் வேலைகளுக்கும் இந்த பிரிவுகளுக்கும், உயிரியல் ரீதியான அடிப்படைகள் இருக்கின்றன என்று சொல்வது பெரிய ஏமாற்று வேலை. ஒரு குழுவில் இருக்கும் எல்லாப் பெண்களும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இல்லாதவரைக்கும், ஆண்களின் உரிமைகள் எனக் கருதப்படும் பொருளாதார வேலைகளை செய்வது – வேட்டையாடுவது, ஆடுமாடுகளை மேய்ப்பது போன்றவை – வெகு எளிதாக பெண்களால் மட்டுமே செய்ய முடியும்.

பாலுறவு தவிர்த்து, ஆணால் மட்டுமே சிறப்பாகச் செய்யக்கூடிய காரியம், கையால் உபயோகிக்கப்படும் ஆயுதங்களைக் கொண்டு போரிடுவது. சராசரியாகப் பார்த்தால், ஆண்கள் பெண்களை விட உயரமாகவும், வலிமையாகவும், பளுவானவர்களாகவும், சதைபிடிப்பானவர்களாகவும் இருக்கிறார்கள். ஆண்களால், பெண்களை விட அதிக தூரத்துக்கு ஈட்டி எறியவும், கடினமான வில்லை வளைக்கவும், பெரிய குண்டாந்தடியைத் தூக்கவும் இயலும். ஆணால் பெண்ணைவிட அதிக வேகமாக ஓடவும் இயலும். போரின் போது எதிரியை நோக்கி ஓடவும், தோல்வியின் போது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போர்க்களத்திலிருந்து திரும்பி ஓடவும் இயலும். சில பெண் விடுதலையாளர்கள் சொல்வது போல , கையால் உபயோகிக்கப்படும் ஆயுதங்களை உபயோகப்படுத்த பெண்களைப் பயிற்றுவிக்க முடியும் என்ற நம்பிக்கை மேற்கண்ட உண்மைகளை மாற்றிவிடாது. எந்தப் பழங்குடியாவது ஆண்களை விட பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை ராணுவத்துக்கு முக்கியமானவர்களாக வளர்த்ததென்றால் அது பெரிய தவறைச் செய்துவிட்டது என்று தெளிவாகச் சொல்லலாம். அதுவும் நிச்சயமாக தற்கொலை செய்து கொண்டுவிட்டது என்றும் சொல்லலாம். ஏனெனில் உலகத்தில் எந்த இடத்திலும் பெண்கள் முக்கியமாகப் போர் புரியும் ஒரு பழங்குடிச் சமூகம் இல்லவே இல்லை.

ஒரு குழுவின் எதிர்கால பாதுகாப்பான வாழ்க்கைக்கு ஆண்களும் பெண்களும் கொடுக்கும் பங்களிப்புகளின் முக்கியத்துவத்தை போர் தலைகீழாக்கி விடுகிறது. போருக்குத் தயாராக உள்ள வளர்ந்த ஆண்களை அதிகப்படுத்த வேண்டிய காரணத்தால், பழங்குடி சமூகங்களை பெண்களை அதிகம் வளர்க்காமல் பார்த்துக்கொள்கின்றன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் உபாயம் இதுதான், போர் அல்ல. மாரிங் பழங்குடியினன் ஒருவனுக்குத் தெரிந்தது போலவே, ஏராளமான போருக்கு தயாராக இருக்கும் ஆண்களை வைத்திருக்கும் மாரிங் உபகுழுவுக்கே மூதாதையர்கள் உதவி செய்வார்கள். இந்த சடங்கு ரீதியான சுழற்சி என்பது அதிகமாக பெண்களை வளர்க்காமல், பன்றிகளையும் ஆண்களையும் வளர்த்து காட்டைக் காப்பாற்றுவதற்கு மூதாதையர்கள் செய்த தந்திரம் என்றே நான் கருதுகிறேன்.

பழங்குடிகளின் போர்கள் தோன்றியதைப் பற்றி அதிகம் ஆராயும் போது, ஏன் இதை விட வன்முறை குறைந்த வழிகளின் மூலம் பிராந்தியக் குழுக்கள் தங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவில்லை என்பதை நான் எதிர் கொள்ள வேண்டும். குடும்பக்கட்டுப்பாடு சாதனங்களில் ஒன்றின் மூலம், மாரிங் பழங்குடியினர் தங்களது மக்கள் தொகையைக் கட்டுப்படித்தியிருந்தால் மாரிங் பழங்குடியினருக்கும் நல்லதுதானே என்று கேட்கலாம். பதில் நல்லது இல்லை என்பதுதான். 18ஆம் நூற்றாண்டில் கருத்தடை சாதனமான ஆணுறை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், பாதுகாப்பான, சந்தோஷமான, உறுதியான கருத்தடை சாதனம் உலகில் எங்கும் கிடையாது. பெண் சிசுக்கொலையை விட மிகவும் ‘அமைதியான சமாதானமான ‘ மக்கள்தொகைக் குறைப்புச் சாதனம் கருக்கலைப்புதான். பெரும்பாலான பழங்குடி மக்களுக்கு எப்படி விஷக் கஷாயம் சாப்பிட்டு கருக்கலைப்பு செய்வது என்று தெரியும். சிலர் கர்ப்பிணியான பெண்ணின் வயிற்றில் இறுக்கமாக துணியைச் சுற்றி கருக்கலைப்பு ஏற்படுத்துகிறார்கள். இது எல்லாம் தோற்றபின்னர், கர்ப்பிணிப் பெண் மல்லாக்கப்படுத்துக்கொள்ள அவளது தோழி அவளது வயிற்றில் முழு வேகத்துடன் குதிக்கிறாள். இவை எல்லாம் சிறப்பானவைதான். ஆனால், இதன் பக்க விளைவுகளாக, அம்மாவாக இருப்பவளும் இறந்துவிட அதிகம் வாய்ப்புண்டு.

பாதுகாப்பான உறுதியான கருத்தடை சாதனங்கள் இல்லாத சமூகத்தில், பழங்குடிகள் உயிரோடு இருக்கும் மக்களை வைத்துக்கொண்டுதான் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைச் செய்ய வேண்டும். இந்த முயற்சிகளுக்கு குழந்தைகள் தான் முதல் பலிகடாக்கள். எவ்வளவுக்கு சிறியவர்களோ அவ்வளவுக்கு நல்லது. முதலாவது மிகவும் இளையவர்கள் எதிர்த்துப் போராடப்போவதில்லை. இரண்டாவது அவர்களிடம் மிகக்குறைந்த அளவுக்கே சமூக பொருளாதார முதலீடு நடந்திருக்கிறது. மூன்றாவது மிகச்சிறிய குழந்தைகளிடன் உணர்ச்சி ரீதியான பந்தம் மிகவும் வளர்ந்தவர்களை விட குறைவு.

எனது காரண காரிய விளக்கத்தை கீழ்த்தரமானது என்றும், நாகரீகமற்றது என்றும் சொல்பவர்கள் , 18ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தைப் பார்க்கவேண்டும். ஜின் சாப்பிட்டு போதையேறிய தாய்மார்கள் பல்லாயிரக்கணக்கில் தங்கள்து குழந்தைகளை தேம்ஸ் நதியில் வீசி எறிந்தார்கள். அப்படியே வீசும்போது அந்தக் குழந்தைகளை பெரியம்மை வந்து இறந்தவர்களது போர்வையில் சுற்றி வீசி எறிந்தார்கள். குடித்துவிட்டு அவர்களைக் குப்பையில் வீசி எறிந்தார்கள். அவர்களின் மீது புரண்டு விழுந்து மூச்சடைக்கச் செய்தார்கள். மற்றும் பல நேர்முகமாகவும் மறைமுகமாகவும் அந்தக் குழந்தைகளின் உயிரைப்பறிக்க முயன்றார்கள். நமது இன்றைய காலத்திலும், நாம் ரொம்ப நல்லவர்கள் என்ற பன்றிமூளைத்தனம் கொண்டு , பெண்சிசுக்கொலை இன்னும் நடைமுறையில் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறோம். இன்னும் மூன்றாம் உலக நாடுகளில் 1000 குழந்தைகளுக்கு 250 குழந்தைகள் பிறந்த உடனேயே இறக்கின்றன.

நல்ல கருத்தடை சாதனம் தோன்றுவதற்கு முன்னரும், பாதுகாப்பான ஆரம்பநிலை கருக்கலைப்பும் இல்லாத சூழ்நிலையில் மனித சமூகம் அனைத்தும் இருக்கும் பொதுவான இந்த மோசமான நிலையிலும், மாரிங் பழங்குடிகள் சிறப்பாகவே வாழ்கிறார்கள். அவர்கள் அதிகமான பெண் சிசுக்கொலையை ஊக்குவிக்கவும், சகித்துக்கொள்ளவும் செய்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கு எதிராக பாரபட்சம் இல்லை என்றால், ஆண் குழந்தைகளும் மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்காக அழிக்கப்பட வேண்டும். அதிகமான ஆண்களை உருவாக்க வேண்டிய போர்ச் சூழ்நிலை காரணமாக, பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் அதிகம் உயிர் தப்புகின்றன. எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து பார்த்தால், பெண்களை வளர்க்க முடியாத சூழ்நிலையில் ஆண் குழந்தைகளை வளர்ப்பதற்கு பழங்குடி சமூகம் கொடுக்கும் விலைதான் போர்.

பழங்குடிகளின் போரைப் பற்றி ஆராயும் போது, அது, தொழில்நுட்பம் சார்ந்த, மக்கள் தொகை சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த ஒரு தற்காப்புச் சாதனமே போர் என்பது என்று தெளிவாக விளங்குகிறது. இதற்காக, நமக்குப் புரியாத மர்மமான கற்பனையான ‘கொலைவெறிக்குணத்தையோ ‘, ‘புரிந்து கொள்ளமுடியாத ‘ காரணங்களையோ போரை விளக்க உபயோகப்படுத்த வேண்டியதில்லை. மேற்கண்ட விளக்கமே, மனித வரலாறு முழுவதும் போரால் நிறைந்திருப்பதன் காரணம். போர் மூலம் லாபத்தை விட அழிவு அதிகம் என்று மனித வர்க்கம் உணரும் போது, போரைத்தவிர வேறு உபாயங்கள் மூலம் பிரச்னைகளை தீர்க்க மனித வர்க்கம் முயலும் என்று நாம் நம்பிக்கை கொள்ளலாம்.

Series Navigation