ஏதோ எனக்குத் தெரிந்தது …..

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

ஆர். சிவசங்கரன்


இப்போ நம்ம ஊருல நடக்கிற கூத்தை பார்த்தா நம்ம மக்களை ஆட்டு மந்தைன்னு யாராவது சொன்னா சொன்னவங்களை ஆடு முட்டும். ஒரு அடிப்படை சிந்தனை வேணாம் ? முன்னாடி போற ஆடும் தப்பா போனா எங்க போய் முட்ட ? எல்லாம் நம்ம வருங்கால தூண்களையும் அவங்க அப்பா அம்மா பற்றியும் தான். எங்க ஊரு சென்னையில வருஷம் ஒரு திருவிழா நடக்குது. Admission திருவிழா. உலக பொருளாதாரம் அண்ணா பல்கலைகழக வாசல்ல படும் பாடு பரிதாபம் !!

ஒரு நாலு வருஷம் முன்னாடி இந்த திருவிழாவுக்கு நானும் போனேன். வேடிக்கை பார்க்கத்தான். அந்த திருவிழாவிலே சல்லிசா கிடைத்தது கணிணி பொறியியல் தான். ( Computer Science ன்னு சொன்னா என்னை POTOல போட்டாலும் போடுவா .. யாரு கண்டா ? ?) உள்ள போற ஜீவன் எல்லாம் அதையே வாங்கிட்டு வருது. என்ன தான் இருக்கு அதுலேன்னு ஒரு மண்ணும் புரியாம, வெளியே வந்த ஒரு குடும்பம் உள்ளே போகப் போகும் ஒரு குடும்பத்துக்கு சொன்ன அறிவுரைய ஒட்டு கேட்டதில் எனக்கு புரிந்ததது இது தான். வெ.வ.கு-த்தின் எட்டு விட்ட சித்தப்பா பையன் அதை படிச்சுட்டு தான் எங்கேயோ பூச்சி பிடிச்சு பெரிய ஆள் ஆயிட்டானாம். அதனால் உ.போ.கு.மம் நம்பி அதையே எடுக்கலாம்னு தான் அறிவுரை எல்லாம். அதையே எடுத்துட்டு வந்து பேக்கு மாதிரி முழிச்ச பொண்ணை இழுத்து எதுக்காக இதை எடுத்தேன்னேன். ‘அப்பா -சான்னா எடுத்தேன்னுச்சு ‘. இப்படியே இரு, 99ஐ 1999ஆ மாத்தறதை தவிர வேற எதுக்கும் உருப்படமாட்டேன்னு சபிச்சு எரிச்சலை தீர்த்துகிட்டேன். ஆக அந்த வருஷம் கிலோ மூணு ரூபான்னு எல்லாரும் computer science (POTOல போட்டா போடட்டும் எனக்கு இது தான் வசதி) வாங்கினதோட முடிஞ்சது.

இந்த வருஷத் திருவிழாவிலும் நானிருந்தேன். மறுபடி ஒட்டு கேட்டதில் தெரிந்தது இதான். ‘CS படிச்சா வேலை கிடைப்பது இல்லையாம். வேலையில் இருப்பவர்களையும் வெளியே அனுப்பறாங்களாம் ‘. அதனால் இந்த வருஷம் சல்லிசா கிடைச்சது EEE. என் தோட்டத்து கிணத்துல தண்ணி இல்லை பக்கத்து கிணறு பாழுங்கிணறா இருந்தா என்ன, குதிச்சு நீந்து மாதிரி இல்லே இருக்கு. EEE படிச்சவங்க எல்லாம் சண்டைக்கு வர மாட்டாங்க. எல்லாருக்கும் தெரியும் போன ஏழெட்டு வருஷமா அவங்களுக்கே வேலை தருவது இந்த CS கம்பெனிங்க தான். இப்போ CS வேணான்னு அதை படிச்சா யார் கொடுப்பா வேலை ? அரசாங்கமா ? 40 வயசில interview வரும். முடிஞ்சா வாங்குன்னு வந்துட்டேன். எனக்கு BP ஏறினது தான் மிச்சம்.

படிக்க போற மண்டுகெல்லாம் சொந்த சரக்கே இருக்காதா ? அப்பா சொன்னார் ஆட்டுக்குட்டி சொல்லுச்சுன்னு என்ன வேணா படிக்குமா ? அதுக்கு ஒரு போட்டி. கிடைக்காட்டி வருத்தம் வேற. சந்தோஷப்படணும். என்னடா சகட்டு மேனிக்கு பேசரானேன்னு பார்க்கக் கூடாது. அதான் உண்மை. பழனி மலைக்கு கீழே கல்யாண மண்டபத்தில ஆரம்பிச்ச engineering collegeல கூட சேர்ந்துக்கோ, எப்படி வேணா படி. ஆனா CS படின்னு சொன்னவனை எல்லாம் நிக்க வைச்சு சுடலாம்.

எதை படிச்சாலும் ஒழுங்கா படிச்சா வேலை கிடைக்கும்னு இதுங்களுக்கு தெரியாமல் போனது தான் சோகம். வெளியே சுத்தறதில பாதி படிக்கறேன்னு பேர் பண்ணி, PGFMS, PGXYZன்னு அப்பா காசை அழிச்சு, java, xmlன்னு ஜல்லி அடிச்சுட்டு வந்தது. Pointer பற்றி கேட்டா ரெண்டு டம்ளர் சுக்கு கஷாயம் ஒரு மூச்சில் குடிச்சவன் கணக்கா முழிக்கிற கும்பல். இதுங்களை நம்பி ஏவுகணை செய்ய சொன்னா கராச்சிக்கு விட்டா காரைகுடியில் வெடிக்கும். வேலை வாங்கிட்டு தகுதிய வளர்த்துகிறது எல்லாம் அவங்க அவங்க தாத்தா கம்பெனில தான் நடக்கும். அதனால இப்போதைக்கு வேலை இல்லாம சுத்துது, சுத்தும், சுத்திகிட்டே இருக்கும். ஆட்டுகுட்டி சொல்லி படித்த மண்டை மட்டும் தப்பு சொல்லவில்லை. அதுங்களுக்கு சொல்லி தர பெரும்பாலானோர் தகுதியும் அவ்வளவுதான்.

எல்லாம் Professional Courseங்கற பேர் பண்ற மாய்மாலம். CSக்கு அடிப்படையான Maths, Physics, Chemistry படிச்சா Professional கிடையாதுன்னு தள்ளி வைச்சுடுவாங்களா என்ன ? Maths, Physics ஒலிம்பியாடில் நம்ம ஊர்க்காரன் ஜெயித்தாதாய் கனவு. நடந்தால் அவனையே திருப்பதி கூட்டி வந்து மொட்டை போடுவதாய் வேண்டுதல் வேற இருக்கு. எங்க இருந்து இதெல்லாம் நடக்க ? எல்லாரும் CS, EEE படிச்சுட்டு பூச்சி புடிக்கற வேலைக்கு போயிடலாம். நம்ம சென்னைய சுத்தம் பண்ண சிங்கப்பூர்கிட்ட காசு கொடுத்து மெஷின் வாங்கலாம். நாடு உருப்படும்.

எழு விட்ட, எட்டு விட்ட தாத்தா சொன்னது எல்லாம் விட்டுட்டு படிக்க போற பிள்ளைங்க உட்கார்ந்து நமக்கு எது வரும், என்ன படிச்சா உருப்படலாம்னு யோசிக்கணும். அதை ஒழுங்கான இடத்தில் ( இன்னைக்கு தேதியில் தமிழ்நாட்டின் 80-90%ஐ விட்டுடலாம் ) ஒழுங்க படிச்சா, அது சமையல் ஆனாலும் சயின்ஸ் ஆனாலும் தானும் உருப்படலாம். நாட்டுக்கும் பண்ணலாம்.

***

sivasankaran.r@india.sun.com

Series Navigation

ஆர் சிவசங்கரன்

ஆர் சிவசங்கரன்