ஏக்கத்தின் நீளம் 2010

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

ருத்ராபுத்தாண்டு என்பது
இன்னும்
ஒரு ஏக்கம் தான்.
இப்போதைக்கு
இதன் நீளம் 2010 !
அது மைல்களா?
ஒளியாண்டுகளா?
அங்கே
“ந‌ண்டு நெபுலா”க்கள்
குழி பறித்துக்கொண்டிருக்கட்டும்.
இதோ…இங்கே…
இளந்தளிரிடையே
சில்வண்டுகள்
ரீங்காரத்தில்
பல்கலைக்கழகங்கள்!
அங்கே
ஒண்ணாங்கிளாஸ் படிக்க‌
அனுப்புங்கள்
இந்த மதங்களையெல்லாம்.
மற்றதெல்லாம் எதற்கு?

======================================ருத்ரா.

Series Navigation

ருத்ரா

ருத்ரா