எஸ் என் நாகராஜன் 75 ஆண்டு நிறைவு : மலர் வெளியீடு

This entry is part [part not set] of 24 in the series 20021118_Issue


எஸ் என் நாகராஜன் 75 வயது நிறைவு நாளை ஒட்டி ஒரு தொகுப்பு டிசம்பர் 2002-ல் வெளியாகவிருக்கிறது. இந்த தொகுப்பிற்கு கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன. எஸ் என் நாகராஜன் கருத்துகள் மீது, செயல்பாடுகள் மீதும் கட்டுரைகள் அமையலாம். இந்த முயற்சிக்கு பண உதவியும், மற்றும் வேறு வகை உதவிகளும் புரிய விரும்புபவர்கள் கோவை ஞானியுடன் தொடர்பு கொள்ளவும். முகவரி :

கி பழனிசாமி (ஞானி)

123 காளீஸ்வரர் நகர்

கோவை 641009

இந்தியா

தொலை பேசி : 91-422-235040

*******

எஸ் என் நாகராஜன் உயிரியலில் பெற்ற கல்விப் பயிற்சியிலிருந்து அவருடைய மார்க்சியம் நோக்கிய பயணம் தொடங்குகிறது. ‘இல்லிஸ்ட்ரேடட் வீக்லி ‘யில் இந்தியாவின் பத்து முக்கியமான மார்க்சியர்களில் ஒருவராக குறிப்பிடப்பட்ட நாகராஜன், இடதுசாரி இயக்கத்தின் விமர்சகரும் கூட. ‘மூன்றாவது உலக அணி ‘ (Third World Network) , நீதி உலக டிரஸ்ட் ( JUST Wirld Trust) இயக்கங்களுடன் பிணைந்தவர். இவை மலேசியாவிலிருந்து இயங்குகின்றன. பசுமைப் புரட்சி பற்றி 1960 தொடங்கி, முதலிலிருந்தே விமர்சித்தவர் இவர். மற்று விவசாய இயக்கங்களுக்கு தூண்டுதலாய் இருப்பவர். இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் அடிமட்ட யதார்த்தங்களுடன் பொருந்துவரும் மார்க்சியம் அவருடைய பெருநோக்கங்களில் ஒன்று. துடிப்புள்ள விவசாயிகள் இயக்கம் கட்டுவதும் அவருடைய கனவுகளில் ஒன்று.

மாவோ, ஜே டி பர்னல், ஜோசப் நீதாம், ஹால்டேன், கிறிஸ்டோபர் காட்வெல் முதலியோரின் வாழ்க்கை மற்றும் படைப்புகளில் அவர் ஊக்கம் பெறுகிறார். கீழை மார்க்சியம் என்ற கருத்தாக்கத்தினை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சனாதன மார்க்சியம் பற்றிய விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இதனால் மார்க்சிய வட்டாரங்களிலிருந்து அன்னியப் பட்டவர். அன்னியமாதல் கருத்தாக்கத்தை தமிழில் அறிமுகப் படுத்தியதில் இவர் முதல்வர். எஸ் வி ராஜதுரை, ஞானி முதலியோருடன் இணைந்து பணி புரிந்திருக்கிறார். ‘புதிய தலைமுறை ‘, ‘மார்க்சியம் இன்று ‘ , நிகழ் ஆகிய இதழ்களுடன் இணைந்தவர். கீழைத்தேயத்தின் மார்க்சியம் பற்றிய இவர் கருத்து மாவோவின் கருத்துகளிலிருந்தும் , ‘விடுதலை என்பது கூறுபோட முடியாதது ‘ என்ற மார்க்சின் கருத்திலிருந்தும் பெறப் படுகிறது என்கிறார். கீழ்க்கண்ட தமிழ் நூல்கள் வெளியாகியுள்ளன. ஆங்கிலக் கட்டுரைகள் புத்தகவடிவில் இன்னமும் தொகுக்கப் படவில்லை.

1. மார்க்சியம் : விடுதலையின் இலக்கணம்.

2. மார்க்சியம் கிழக்கும் மேற்கும்

3. அறிவின் தத்துவம்

இவை பற்றி ஞானியிடம் மேல் தகவல்கள் பெறலாம்.

நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் பற்றிய விமர்சகராக, இவை தரும் வளர்ச்சி எப்படி நிலையற்ற தன்மையை அளித்துள்ளது என்பது பற்றி எழுதியுள்ளார். அறிதலியலின் மாற்றுக் கருத்துகளின் தேவை பற்றியும் எழுதியுள்ளார். 1960-ல் ஹால்டேனுடன் கொல்கத்தாவில் இருந்திருக்கிறார். ஹால்டேன் நாகராஜனுக்கு பெரும் தூண்டுதல் அளித்ததுண்டு. ஐம்பதுகளின் பிற்பகுதியில் கட்சி வட்டாரங்களில் தேசியம்பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளார். விவாதத்துக்குரிய ஆனால் முக்கிய கருத்துகள் அவருடையவை. அவருடைய கருத்துகளை தீவிரமாக விவாதிப்பது தான் அவரை கெளரவப்படுத்துவதாகும்.

*****

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு