எழுத்தாளர் கந்தர்வன் மறைவு

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue


====

முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவராக இருந்த கந்தர்வன் 23-4-04 அஃன்று விடிகாலையில் அவரது மகள் வீட்டில் மாரடைப்பில் காலமானார். ஏற்கனவே நோயுற்று சிகிழ்ச்சையில் இருந்தபோதும்கூட தொடர்ந்து இலக்கியக்கூட்டங்களில் கலந்துகொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்.

அரசு ஊழியர் சங்கத்தில் தீவிரமாகப் பணியார்றி பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு பழிவாங்கல்களுக்கு ஆளான கந்தர்வனின் வாழ்வின் பெரும்பகுதி தொழிற்சங்கவாதத்திலேயே கழிந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கியமான வழிகாட்டிகளில் ஒருவராக இருந்தார்.

கந்தர்வன் அதிகமும் சிறுகதைகளே எழுதினார். குறைவாக கவிதைகள். பூவுக்கு கீழே , ஒவ்வொரு கல்லாய் ஆகிய கதைத்தொகுப்புகள் பரவலாகக் கவனிக்கப்பட்டவை. அவரது இறுதிக் காலத்தில் எழுதிய கதைகள் தமிழ்ச்சிறுகதைவரலாற்றில் அவருக்கு முக்கிய இடத்தை உருவாக்கியளிப்பவை.

(குறிப்பு : ஜெயமோகன்)

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு