நா. கோபால்சாமி
Vilakku Literary Society, Inc.
(A registered non-profit tax-exempt corporation)
11205 Greenwatch Way North Potomac MD 20878 Phone: (301) 217-9691 E-mail: vilakku@yahoo.com
______________________________________________________________________________________
டிசம்பர் 26, 2006
2005-ம் ஆண்டுக்கான விளக்கு விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது.
அமெரிக்காவில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் அமைப்பான விளக்கு நிறுவனத்தின் புதுமைப் பித்தன் இலக்கிய விருது இவ்வாண்டு எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. லதா ராமகிருஷ்ணன், க்ருஷாங்கினி, திலீப் குமார் ஆகியோரடங்கிய விளக்கு நடுவர் குழுவின் பரிந்துரையின் பேரில் அம்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடகம், கட்டுரை சிறுகதை என்று பல தளங்களில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருபவர் இம்முப்பதாண்டுக் கால இலக்கியப் பங்களிப்பைக் கணக்கில்கொண்டு விளக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் உள்ள வெளிச்சத்திற்கு வராத பல பெண்களின் வாழ்க்கைச் சிக்கல்களை வாய்வழிப் பதிவு செய்ய ‘ஸ்பேரோ’ என்ற அமைப்பையும் நடத்திவருகிறார். மும்பையில் வசிக்கும் இவர், அல்லலுறும் இந்தியப் பெண்களுக்கென ஒரு எழுத்து இயக்கம் நடத்தி வருகிறார் என்றால் மிகையாகாது.
“தனது படைப்புக்களில் பெண்சார் மரபார்த்த பார்வைகளையும் பிம்பங்களையும் தொடர்ந்து கேள்விக் குட்படுத்தியும்,தோலுரித்துக் காட்டியும் வந்திருப்பவர் அம்பை” என்கிறர் லதா ராமகிருஷ்ணன்.
“குடும்பத்தில் வாழும் பெண்ணின் இடத்தைஇலக்கியத்தில் துணிவுடனும் உண்மையாகவும் சிறுகதைகளின் மூலம் பதிவு செய்தவர்” என்று க்ருஷாங்கினி குறிப்பிட்டுள்ளார்.
“தன்னை ஒரு பெண் எழுத்தாளர் என்று பறைசாற்றிக் கொள்ளவோ அத்தகுதியை எதற்கும் பயன்படுத்திக் கொண்டதோ இல்லை” என்று அம்பையின் தெள்ளிய நிலைப்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறார் திலீப் குமார்.
தற்காலத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தரம் வாய்ந்த ஆனால் வெளிச்சத்துக்கு வராத படைப்பாளிகளைப் பரவலாக அறிமுகப் படுத்தும் விளக்கின் நோக்கத்துக்கு மிக உகந்ததாகிறது இத் தெரிவு. நடுவர் குழுவுக்கும் இந்தியத் தொடர்பாளரான வெளி ரங்கராஜனுக்கும் விளக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
நா. கோபால்சாமி
விளக்கு அமைப்பாளர்
- ரியாத் கலை விழா – 2006-12-08
- அகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்
- ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் ஆன்மிகம் சார்ந்த இந்து உணர்வு
- காதல் நாற்பது (2) – சாதல் அல்ல காதல் !
- யுனிகோடு ( ஒருங்குறி ) தமிழ் எழுத்துரு வரலாறு
- Letter – Flourishing of Sanars and malaprop of Nadars
- கணையாழியில் நான் கண்டது
- எழுத்தாளர் அம்பைக்கு 2005-ம் ஆண்டுக்கான விளக்கு விருது
- கடித இலக்கியம் – 38
- “அனைத்துயிரும் ஆகி” – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்
- பதில் அளிக்க முடியாத பதினான்கு கேள்விகள்
- N F S C தேவராட்டம் பயிற்சி முகாம்
- கற்பழிக்கத் தூண்டிய கவிதை
- கால் நகங்களைப் பிய்த்துக் கொள்ளும் காவிப் பூனைக்குட்டி
- யாசகம் !
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 2
- பெண் ஆண்மொழியில் படைப்பது இல்லை
- ஆசிரம வாழ்க்கை
- நீர்வலை (4)
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 17
- மின்னூட்டாம் பூச்சி
- இதுவேறுலகம்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:10) ஆண்டனி ஆற்றிய சீஸர் மரணப் பேருரை -1
- உயிரியல் தொழில் நுட்பம்,விவசாயம் – ஒரு கேள்வி-பதில்- 1
- மக்காக்கா!…மக்காக்கா!
- அரபு தேசிய வாதம்
- ஒரு திரைமீன் வாய் திறக்கிறது !
- பெரியபுராணம் – 118 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
- நன்றிக் கடன்
- இலை போட்டாச்சு 8 – சட்டினி வகைகள்
- என் வார்த்தைகள் சில, தொடங்கும் முன்
- மடியில் நெருப்பு – 18