எழுதப்படாத பதில் கடிதம் -யூமா.வாசுகியின் இரவுகளின் நிழற்படம் கவிதைகள் குறித்து

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

எச் பீர் முஹம்மது


கடிதங்கள் என்பவை நேருக்கு நேரற்ற உரையாடலின் வெளிப்பாடே. நேரடிபேச்சானது பிரசன்ன தன்மையை சொண்டது. காகிதத்தில் வந்து விழும் ஒவ்வொரு வார்த்தையும் பேனாவின் புறவெளியில் தீர்;மானிக்கப்படுகிறது. இந்நிலையில் பேனாவின் இயக்கமும் மொழிக்கிடங்கிலிருந்து உற்பத்தியாகும் வார்த்தையின் இயக்கமும் ஒரே நேர்கோட்டில் வரும் போது முன்னை விட கடிதங்கள் மீ உயிர்ப்பை அடைகின்றன. கடிதங்களின் இயல்பான வாிகளை போன்றும்/ அதே நிலையில் ஆழ்மன பிரக்ைஞூயின் பிரதிபலிப்பாகவும்/ தேடலாகவும் உருமாறியிருக்கின்றன இவருடைய கவிதைகள்

அம்மா/

உனக்கு பதில் கடிதம் எழுத போவதில்லை நான்

எழுதினாலும் எதைச் செல்ல

நரைக்காலத்தில் விளிம்புக் குடிலொன்றிலிருந்து

வந்த கடிதத்தின் எழுத்துக்கள் இரவில் உருகி

நேசமாய் விசாாிக்கிறேன் – மனம் தாளா

கனத்த சொட்டுகளாய்.

அன்றாட வாழ்வின் விரக்தியும் இக்கவிதைகயில் வெளிப்படுகின்றது. உழைப்பின் பு[ற நடவடிக்கையானது மனித வாழ்வின் உள்ளிணைந்த கூறு. கேளிக்கைகள் என்பது இதன் பகுதி தான் நான் ஒரே விதமான செயலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது மற்றொரு செயல் அதற்கு பதிலீடாக மாறுகிறது.

எழுதுவதற்கொன்றுமில்லை தொலைபேசி முன்பு நின்று

உடனடியாக பசி நிவிர்த்திக்கும் எண்களைத்

தேடி சுழற்றுகிறேன் புறத்தேகிய நண்பனின் வீட்டினுள்

அலறியடங்கியது என் அழைப்பு

உயிர் வாதையின் உச்சத்தில் உச்சாிக்க தகுந்த வார்த்தை

உன்னை விளிப்பதாயிருக்கிறது.

மழையின் சலனம் தொடர்ச்சியானது. ஏக காலத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மாதிாியான அனுபவங்களை உருவாக்குகிறது. சமூக பிரக்ைஞூயின் மீதும் மழைக்குள்ள உறவு உரையாடல் மாதிாியானது. நம்மால் காண முடியாத/ உணரமுடியாத/ அறிய முடியாத தளங்களில் மழை நமக்குள் தாக்கத்தை உண்டுபண்ணுகிறது. குறியீட்டு தளத்தில் அது வரைந்து கொள்ளும் வரைபடம் இன்னொரு மழையை வடிவமைக்கும். கவிஞூனின் படைப்பு மனத்தில் மழை பன்முகப்பட்ட அனுபவமாக இருக்கலாம்

வெயிலும் காற்றும் கருக்கி கந்தலாக்கிய கூரைக்கீற்றிருக்கின்

உட்புகுந்து சாணத்தரையில் துயிலும் மகவே நீ நனைக்காதே

வீடுகளின் முகடுகள் மட்டுமே தொிகிற படி

என்றுமே நடவாதிருக்க வேண்டும்

உயிருள்ள எதற்கும் இடறேதும் நிழ்ந்தால்

நீ வா மழையே ஏறத்தாழ நனைந்து நான்

பெட்டிக்கடையொன்றில் ஒண்டிக்கொண்டு

குளர்சிலிர்க்க புதைத்தபடி

உன்னை பாராட்டுகிறேன்.

மழைத்துளியின் தூறலோடு அவன் வார்த்தைகளை வரைந்து கொள்கிறான். அதன் ஒவ்வொரு விதமான சலனமும் கவிதைகளை உற்பத்தி செய்யும். வாழ்க்கையே இப்போது நகர்மையப்படுத்தலில் தான் அடங்கியிருக்கிறது. நகர வாழ்க்கயைின் ஒவ்வொரு அசைவுகளுமே கிராம மனிதனுக்குள் பிரதிபலிக்கும் போது அவன் தன்னை மேல்நிலைப்படுத்தி கொள்கிறான். பேன்சி பனியனில் தொடங்கி உச்சாிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் அதன் தாக்கம் வெளிப்படுகிறத. இன்னொரு புறத்தில் அதன் தாங்க மடியாத அவலம்/ பல்வேறுபட்ட காட்சி தளம் நகர அமைப்பின் கூழற்சிக்குறியீடு.

தாடியை படித்து விளையாடும் குரங்கை

வெற்றிலை மென்று கொஞ்சுகிறான் கிழவன்

ஆர்வமாய் நிரப்பிய குப்பை சாக்கை

சுமக்கவும் முடியாமல் இழுக்கவும் முடியாமல்

அதன் மீதே படுத்து வீதியை வேடிக்கையாய் ரசிக்கும் சிறுவன்

உந்தி ஊர்ந்த ஒருவனுக்கு இரு தொடைகளுக்குப் புறம்

எதுவுமில்லையாயினும் கைகளிற் செருப்பு

யாரோ எவரையோ கைதட்டி அழைக்க

திரும்பி பார்த்துவிட்டு நான் நடக்கிறேன்.

இரவுகளின் தினசாி அனுபவம் மற்றும் நிகழ்சாரம் நமக்கு தொடர்ச்சியானது நனவிலி மனத்தின் செயல்பாடு தொடங்கும் நேரத்தில் இரவின்; புறத்தூண்டல் நம்மை வலிக்கச் செய்யும். இதன் தோடர்ச்சியில் ஒவ்வொரு இரவுகளுமே ஒரு படக்காட்சி தான்.

உறக்கத்துடன் உறவு இன்றிரவும் இல்லை

இதைப்போல தான் நேற்றிரவும் மின்விசிறி வேகத்தில் நடுங்கி

படுக்கை விாிப்பு சஞ்சலமாய் பேசுகிறது

நினைவுகளை சிதைத்து விழியத்துடிக்கும் இந்த சபிக்கப்பட்;ட

இரவுகளொன்றில் கைவசமில்லை ஒரு முடிவும்.

கனவுகள் உருவாக்கும் வெளி அகலமானது. அது வரையும் ஒவ்வொரு சித்திரமும் ஒரு எதார்த்த ஓவியம் தான். நம் உள்ளுணர்வுகள் தான்/ யோகிகளின் மொழிகள் சொன்னால் உள்மூச்சு தான் இந்த சித்திரத்தை வரைகிறது. கனவை நாம் நிஜமென நம்பும் காரணம் இது தான். உள்மூச்சு தான் நமக்கு அம்மாதிாியான உணர்வை உருவாக்குகிறது. கனவுகள் மட்டும் கனவாக உணருவோமானால் நாம் ஆழ்ந்த நிலையிலேயே அக்காட்சிகளை சுற்றிக்கொண்டு வலம் வருவோம். நனவிலி நிலையில் கனவின் இயல்பை துண்டிவிடுவது சித்தர்களின் செயல்பாடு. நான் இந்நிலைக்கு முயற்சித்து தோல்வியை தழுவியது உண்டு. அது வரைபட நெகட்டிவ் மாதிாி. நம் தேடல் இதற்குள் சங்கமிக்கிறது. வாழ்வில் ஒவ்வொருவரும் எதையோ தேடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களால் வரைய முடிவதில்லை. 1960 களில் ஐரோப்பாவில் உருவான போட்டோ ாியலிசம் என்ற பின்நவீனத்துவ கருத்தாக்கம் இக்கவிதைகளில் வெளிப்படுகிறது.

இரவுகள் எழும்பும் ஊழிக்காற்றில்

நெகிழும் சுடருக்குள் நிலைத்த கருவிழி

நடுங்கும் நிழல்களின் ஸ்பாிஸத்தில் அறைச் சுவர்கள்

கண் மறைந்த ஆனந்தத்தின்

ஒரு பகுதியை பற்றிக் கொள்ள விரும்புகின்றன.

தனியறையில் சாய்ந்த உடல் புரளும்

வியூகங்கள் தகர்ந்த பழைய விஸ்வரூபத்தின் நினைவுகளில்

சிற்றெறும்பின் தலையை விரல் நகம் துண்டாக்கியதோடு

அம்பின் முனையொன்று இலக்கை வென்றது.

கவிதையின் புாிதல் சிக்கலாயிருக்கும் இச்சூழலில் யூமா.வாசுகியின் கவிதைகள் அதனை ஓரளவுக்கு தனித்திருக்கின்றன. வாசக இடைவெளியை குறைப்பது என்பது வாசிப்பின் கனத்தை மேலும் அதிகாிக்கும். உடம்பின் நரம்புகள் இயங்காது போகும் சூழலில் ஏற்படும். நிச்சயமற்ற தன்மைகள் ஒரு சில கவிதைகளில் வெளிப்படுகிறது. சில நேரங்களில் இதனை கவிதையின் ஹிஸ்டாாியா என்றும் கூட சொல்லதாம். இன்றைய தமிழ் கவிதைகள் சில சமயங்களில் வாசகனுக்கு மேற்கண்ட அனுபவத்தை தான் கொடுக்கின்றன. உடம்பின் அடையாளம் காண முடியாத இடத்தில் ஏற்படும் வலியை போன்று நவீனத்துவ கவிதைகள் சில காலம் வரை வாசகளுனுக்கு வாசிப்பு வலியை கொடுத்தன. அதற்கேயுாிய இறுக்கம்/ வடிவ ஒழுங்கு/ மீட்சியற்ற தன்மை இவையெல்;லாம் ஒரு தீவிற்குள் கவிதையை கொண்டு போய் சேர்த்தன. பிச்சமூர்த்தியிலிருந்து தொடங்கி கலாப்பிாியா வரை ஒரு தீவு கூட்டம் தான். அந்த தீவு கூட்டத்திற்குள் இருந்து விலகி வேறொரு வெளியை உருவாக்க முயல்கின்றன சமகால இளைய தலைமுறை கவிஞூர்களின் கவிதைகள். யூமா வாசிகியின் இரவுகளின் நிழற்படம் என்ற இந்த தொகுப்பையும் இதற்குள் சேர்த்து கொள்ளலாம்.

peer13@asean-mail.com

Series Navigation

author

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது

Similar Posts