This entry is in the series 20060317_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


வாத்துக்கூட்டங்களில்
சில
அன்னங்களைப் பார்த்தேன்
என்றது தவறு
வாத்துக்கள்
வாத்துக்களே
எல்லாம் வாத்துக்களே
என்றிருந்துவிட்டால்
எந்த அவஸ்தையும் இல்லை
வாத்துக்கள்
அன்னங்களாக முகம்காட்டும் வேளையிலும்
அன்னங்கள்போலத் தோன்றியத் தருணத்திலும்தான்
கணக்குத் தவறாகிப்போனது
எல்லாம் வாத்துக்களே
என்பதில்
எத்துணை நிம்மதி…!

2.03.06

pichinikkaduelango@yahoo.com

Series Navigation