என் ஜீவன் போகும்…
பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

ஆயிரம் இருந்தும்
வசதிகள் இருந்தும்
அவளில்லை பக்கத்தில்…
காதலில் அனாதையாய்
தவிக்கின்றேன் மொத்ததில்…
உன்
வீட்டை நோக்கி
நடக்கிறது பாதங்கள்…
பாதங்கள் தான்
சேதப்பட்டதே தவிர
உன் பார்வையில்லை என் மேல்…
தவமிருந்தேன் உனக்காக – காதல்
வரம் தருவாய் என்ற நம்பிக்கையில்…
சபித்து விட்டு சிரிக்கின்றாய்
கண்களாலே எரிக்கின்றாய்.
வானம் பார்த்த பூமிப் போல
வறண்டு மனம் துடிக்கின்றேன்.
பொழிவாய் காதல் மழை என்று
பொறுமை காத்து நிற்கின்றேன்.
வருவாயோ தேவி…
தவிக்கிறது ஆவி…
கொடுத்து உன் மனதை
நிறுத்து என் உயிரை – அந்த
நொடி சுகம் போதும் .
என் ஜீவன் போகும்.
***
பா.ஸ்ரீராம்
மயிலாடுதுறை.
balageethan@rediffmail.com