என்ன உரு நீ கொள்வாய்?

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

காளி நேசன்


உலகில் எதுவும் நிலையிலி ஒரு
கலைஞனின் படைப்பில் உலவும்
கதா மாந்தர்களன்றி!
காலத்தை வெல்லும் கலைகள்
காட்டும் உன்னத இலட்சியங்களை!
காலத்தை கடந்து நீ உலவ என்ன உரு
கொள்வாய் அவற்றில்!
தேர்வினை நீதான் செய்தாகனும்!
தலைவனாக? தலைவியாக?
காதலானாக? காதலியாக?
நல்லாற்றல் மிக்கவனாக?
நல்லன்னையாக? நல்லாசானாக?
புரட்சியாளனாக?
கவிஞனாக? கலைமகளாக?
தோழனாக? தோழியாக?
அமைதி நாடுபவனாக? ஆற்றல் மிக்கவனாக?
வீரனாக? நீதிமானாக?
கொடையாளியாக? போராளியாக?
உண்மையானவாக? உழைப்பாளியாக?
சிந்தனையாளனாக? சிறப்புடையவனாக?
சித்தனாக? புத்தனாக? ஞானியாக?
வஞ்சனை செய்பவனாக? விலை போகியாக?
அடுத்துக் கெடுப்பவனாக?
சுரண்டி கொழுப்பவனாக?
ஊழல் பேர்வழியாக? ஊரை ஏய்ப்பவனாக?
என்ன உரு நீ கொள்வாய்?

Series Navigation

காளி நேசன்

காளி நேசன்