எனை கைது செய்து போகிறாய்.

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

நளாயினி தாமரைச்செல்வன்


____

மண்ணில்
விண்ணில்
எந்தன் மனசில்
உந்தன் விம்பம்.
காலை
மாலை
இரவுக் கனவில்
உந்தன்
ஜாலம்.
நீ
கவி சொல்லும் வீரம்
எனைக் கைது செய்து போகும்.
மொழி சொல்லும் வார்த்தை
எனை மெளனிக்க வைக்கும்.
உன் விழியோரக் காதல்
எனைத் தடுமாற வைக்கும்.
உன் உதட்டோர முகிழ்ப்பு
எனைத் தீண்டித் தழுவிப் போகும்.
உன் பாதத்தின் வேகம்
எனை உன்னோடு அழைக்கும்.
உன் கரங்கள் சொல்லும் கதைகள்
எனை உனக்கே அர்ப்பணம் செய்யும்.
++ ++ +++ +++ +++
ஆக்கம் நளாயினி தாமரைச்செல்வன்
சுவிற்சலாந்து.

Series Navigation

நளாயினி தாமரைச்செல்வன்.

நளாயினி தாமரைச்செல்வன்.