எனது பர்மா குறிப்புகள்

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

செ. முஹம்மது யூனூஸ் தொகுப்பு: மு இராமனாதன்


செ. முஹம்மது யூனூஸ், நாற்பதாண்டுகளுக்கு முன்னால் பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் நாற்பதாண்டுகள் வாழ்ந்த, பிறந்து வளர்ந்த ‘பர்மியத் திருநாட்’டைப் பற்றி இந்த நூலில் சொல்கிறார். தமிழர்கள் பர்மாவில் செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் தொடங்குகின்றன யூனுஸின் பதிவுகள். இரண்டாம் உலகப் போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, நேத்தாஜியின் இந்திய சுதந்திர லீக், பர்மீயர்களின் விடுதலை, ராணுவ ஆட்சி, இந்தியர்கள் நேரிட்ட வாழ்வுரிமைச் சிக்கல்கள் என்று தொடரும் இப் பதிவுகள், கணிசமான இந்தியர்கள் பர்மாவிலிருந்து வெளியேற நேர்ந்தது வரை நீள்கிறது. இந்தக் குறிப்புகள் பர்மீயத் தமிழர்களின் வாழ்வு, கலாச்சாராம், கலை, இலக்கியம் அனைத்தையும் தொட்டுச் செல்கிறது. தான் வாழ்கிற சமூகத்தைக் குறித்த அக்கறையும், சக மனிதர்கள் மீது எல்லையற்ற நேசமும் கொண்ட யூனூஸின் பதிவுகள், ஒரு காலகட்டத்தின் சமூக வாழ்வையும் வரலாற்றையும் ஒரு சேரச் சொல்லிச் செல்கிறது; புலம் பெயர் வாழ்வின் உவப்பையும், அலைந்துழல்வையும் படம் பிடிக்கிறது. பர்மீயத் தமிழ் வாழ்வு குறித்த பதிவுகள் மிகக் குறைவாக உள்ள சூழலில், இந்த நூல் ஒரு பெட்டகமாக விளங்கும்.

வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001, தொலைபேசி: 91-4652-278525, தொலைநகல்: 91-4652-231160, 402888 மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in

Series Navigation

மு இராமனாதன்

மு இராமனாதன்