எதோவொன்று

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

ஷம்மி முத்துவேல்


நிழல் ஒன்று அழைத்தது
நிஜம் என கொண்டு ..
அருகினில் செல்ல
பூஞ்சாரல்
பொய்த்து போனது
கானல் நீராக …

ஒளிகற்றை ஒன்று
சூரியன் என கண்டு
பகல் புலர
இருள் சூழ்ந்தது
கரிய நிழல் விழுங்க

மொட்டொன்று அவிழ
பூவெனக்கண்டு
மகரந்தம் தேடி
வண்டென மயங்கி
உயிர் மாய்த்ததென்ன ?

ஒன்றை
தொலைத்துத்தேடி
தேடித்தொலைத்து
கருப்பொருள் கொண்டு
இருப்பொருள் ஆனதென்ன ?

ஷம்மி முத்துவேல்

Series Navigation

ஷம்மி முத்துவேல்

ஷம்மி முத்துவேல்