This entry is in the series 20050707_Issue

ரா.கிரிஷ்


கடற்கரை மணலில் காமம்
மட்டுமே காதலாய்…

கல்லூரிகளில் நேரம் போக்க
மட்டும் காதல்…

திரும்பிய பக்கமெல்லாம்
வண்டிகளில் காதல்…

மறைந்து கொள்ள இடம்
கிடைக்கும் எல்லா இடங்களிலும்
உடல் பசிக்காய் காதல்…

காலை ஒரு காதல்
மாலை ஒரு காதல்

காமம் மட்டுமே காதலா ?

நேரம் போக மட்டும் காதலா ?

உண்மை காதல் எது ?

எனக்கு மட்டுமேனும் சொல்லுங்கள்…

ரா.கிரிஷ்

Series Navigation