எதிாியிடம் ஒரு வேண்டுகோள்

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue

கோகுலகிருஷ்ணன்.


வாள் வீசியெறிந்து,
கவசங்கள் களைந்து,
நெஞ்சு நிமிர்த்தி
நிற்கும் என் மேனியில்
உனது
அத்தனை
ஆயுதங்களின்
அணிவகுப்பு.
உனது உடலில்
தெறித்திருக்கும்
எனது ரத்தத் துணுக்குகளைத்
தின்று கொண்டிருக்கும்
வல்லூறுகளின் அலகுகளினால்
காயம் ஏற்படப்போகிறதே உனக்கு
என்கிற கவலை எனக்கு.
போதும்,
என் பிணத்தின்மீது
கத்தி வீசுவதை
நிறுத்து.

Series Navigation

கோகுல கிருஷ்ணன்.

கோகுல கிருஷ்ணன்.