This entry is in the series 20060120_Issue

இளைய அப்துல்லாஹ்


எல்லாமே சுமைகளோடு கூடியவை.
மோனமாய் என்னை பார்த்தபடிக்கு
நீ.
ஒவ்வொரு ஒளித்துணிக்கைகளும்
உன் ஸ்பரிஸத்தை எனக்காய்த் தரும்.
அது வானத்திலும்
மட்டும் தானென்றிில்லை
புறத்திலும் இன்னும்
ஊதும் காற்றிடை
கனவுகளினூடு
உன் தலையணையும் நினைவுகளும்
உறைந்தபடிக்கு என்னால்
அண்ணார்ந்து பார்க்க முடிகிறது
நிலாவை

அது நீதானே.

தூர விலக்குமளவிற்குமில்லை
கிட்டவாயுமில்லை உன்சுமைகளை
தாங்குதற்காய் ஒரு பொழுதேனும்
மிச்சமிராதா எப்பொழுதும்
அடைத்தபடிக்கு உ~;ணம் நெஞ்சில்
ஆனாலும் ஒரு இருளில்தான்
செல்ல வேண்டியதாயுள்ளது.
காலம் அப்படித்தானாக்கும்.
ஒரு இடைவெளி இன்னும் ஓடுகிறதே
அதுதான்.

இளைய அப்துல்லாஹ்

லண்டன்

anasnawas@yahoo.com

Series Navigation