சத்தி சக்திதாசன்
மங்கலான ஒளியில் அழுவதுபோல் இருந்தாலும் உள்ளே இருந்தோரின் ஆரவாரத்தினால் களை கட்டியிருந்தது அந்த டிஸ்கோ மண்டபம் . நீண்ட அந்த மண்டபத்தின் ஒரு அந்தத்தில் ஒரு மேடை அதன் மேல் இருவர் , அந்த டிஸ்கோவிற்கு தேவையான இசை/பாடல்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள் . அதிலே ஒரு ஆங்கிலேயன் ஒவ்வொரு பாடலுக்கு முன்னும் அதைபற்றிய ஒரு விளக்கத்தை தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருந்தான்.
அந்த ஹாலின் மையப்பகுதியில் டிஸ்கோ ஆட்டத்திற்கு ஏதுவாக பெரிய இடம் ஒதுக்கப்பட்டிருந்தது , ஒரு மூலையில் பார் , சுவர் ஓரங்களோடு மேசையும் அதைச்சுற்றிக் கதிரைகளும் அடுக்கப்பட்டிருந்தது அதில் ஆங்காங்கே டிஸ்கோ ஆடிக் களைத்தவர்களும் , மதுவினால் ஆட்டம் கண்டவர்களும் , வேறுசிலரும் உட்கார்ந்திருந்தார்கள்.
ஒரு மேசையில் தனியொருவளாக உட்கார்ந்து கொண்டு கன்னத்தில் ஒரு கையும் , டிஸ்கோ ஆட்டத்தில் கண்களையும் கொண்டிருந்தாள் ரஞ்சி . அவளின் கண்கள் அந்த டிஸ்கோ ஆட்டத்தில் தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்த அவளது தோழி ஹேமாவின் மீது லயித்திருந்தது.ஹேமாவொடு சேர்ந்து ஆடிக் கொண்டிருந்த அந்த வெள்ளையனைப் பார்த்தாள் ரஞ்சி , நீல நிறக்கண்கள் , சுருண்டு முன்னே வந்து விழும் கேசம் , நீலநிற ஜீன்சும் , நீல டா சார்ட்டும்ம் அவனது உயர்ந்த ஆஜானுபாகுவான தோற்றத்திற்கு எடுப்பாக இருந்தது.
அப்போது பாடல் முடியவும் கிடைத்த ஒரு சின்ன இடைவெளியில் ஹேமாவும் , அந்த வெள்ளையனும் ரஞ்சி இருந்த மேசையை நோக்கி வந்தார்கள்
‘ நீ ஆட வரவில்லையா ? ‘ என ஆங்கிலத்தில் கேட்டாள் ஹேமா , அதனோடு தொடர்ந்து ‘ இவன் பெயர் ஹென்றி ‘ என்று தன்கூட வந்தவனை அறிமுகப்படுத்தியும் வைத்தாள் .
‘ ஹலோ ‘ என்று ஒரு மந்தகாசப் புன்னகையை வீசியபடியே தனது வைன் கிளாசை வாயோடு பொருத்திணாள் ரஞ்சி .
‘ஹலோ ‘ என்றவாறு தன் பியர் கிளாஸுடன் அவள் முண்னே ஹென்றி உட்கார , அவனுடன் கூடச் சேர்ந்து ஹேமாவும் உட்கார்ந்தாள்.
‘ என்ன உனக்கு ஆட விருப்பமில்லையா ? ‘ என்ற ஹென்றியயைப் பார்த்து , ‘ ஒரு காதல் முறிவிலிருந்து இப்போதுதான் மெதுவாக வெளியே வருகிறாள் ‘ என்று ஹேமா பதிலளித்தாள்
‘கைவராத காதலைப் பற்றிக் கனவு கண்பவரும் , முறிந்த காதலை எண்ணி முடங்கிக் கிடப்பவரும் என்னைப் பொறுத்தவரை முட்டாள்களே ‘ இது ஹென்றி .
எல்லாவற்றிற்கும் ரஞ்சியிடம் இருந்து வந்த பதில் ஒரு வறண்ட சிரிப்பே !
‘என்ன உன் பிரண்ட் பேச மாட்டாளோ ? ‘ கேலியாகக் கேட்டபடி ரஞ்சியை ஆழமாக நோட்டம் விட்டான் ஹென்றி .
ஆசியர்களுக்குள் மாநிறம் என்று சொல்லக்கூடிய நிறத்தையொத்தவள் ரஞ்சி . மிகவும் மெல்லிய தேகமும் அழகான கூர்மயான முகலட்சணமும் , குறுகுறுவென்று பார்ப்போரைக் கவரும் கருவிழியும் , அழகிய அங்கங்களையும் கொண்டு ஒரு கவர்ச்சிகரமான இளம் ஆசியப் பெண் எனும் வரைவிலக்கணத்தினுள் அடங்குபவளாகத் தான் தோன்றினாள் ரஞ்சி .
மறுபடியும் ஹேமாவும் , ஹென்றியும் டிஸ்கோவுடன் ஜக்கியமானார்கள் . அவர்களைப் பார்த்தவாறே நினைவலைகளில் மூழ்கினாள் ரஞ்சி .
இரண்டு மாதங்களுக்கு முன்னாள் வரை எப்போது டிஸ்கோ மண்டபத்தினுள் நுழைந்தாலும் , டிஸ்கோ தளத்தை விட்டு வெளியே வரமாட்டாள் ரஞ்சி . அப்போது அவளுடன் அவள் காதலன் பீட்டர் இருந்தான் . அவர்கள் இருவரும் தங்களை மறந்து டிஸ்கோவில் ஜக்கியமாகி விடுவது சகஜம் .
ஹேமா அவளுக்கும் பீட்டருக்கும் ஜோக்காக ‘என்ன பீட்டர் குழந்தைகளாய் இருந்து பிரியாமல் இருக்கும் பிரண்ட்ஸ் , எங்களுக்குள்ளே வந்து எப்படி ரஞ்சியை பிரித்தெடுத்து விட்டாய் ? ‘ என்பதுண்டு.
சிறுவயது முதலே உண்மை நட்புக்கு இலக்கணமாக ரஞ்சியும் , ஹேமாவும் திகழ்ந்தார்கள் .அதற்கு அவர்கள் இருவரினதும் குடும்பத்தினிடையே நிலவிய நட்பும் முக்கிய காரணமாக இருந்தது.ரஞ்சியும் அப்பா பிரபாகரும் , ஹேமாவின் அப்பா சரவணனும் ஒன்றாக லண்டனிலே கல்வி பயின்றவர்கள் , அதைத் தொடர்ந்து அவர்களின் திருமணங்களின் பின்னே ரஞ்சியின் அம்மா லதாவும் , ஹேமாவின் அம்மா லஷ்மியும் நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள் .
ரஞ்சியின் குடும்பமும் , ஹேமாவின் குடும்பமும் ஊழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களாக இருந்தாலும் இரு குடும்பங்களில் பிள்ளைகளுக்குச் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தது . அவர்களும் அந்தச் சுதந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார்கள் என்று கூற முடியாது . நன்றாகப் படித்து ரஞ்சி ஒரு ஆசிரியையாகவும் , ஹேமா ஒரு அக்கெளண்டன் ஆகவும் நல்ல பதவிகளையடைந்தார்கள் .
ஆனால் கல்யாணம் என்பதில் இருவரும் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தார்கள் , ரஞ்சி தனக்குப் பிடித்தவனுடன் சிலகாலம் பழகிப் பின்னர் மணமுடிக்க வேண்டும் என்ற கருத்தையும் , ஹேமா திருமணம் என்றாலே
தேவையற்ற பந்தம் ஆண்களின் துணை நண்பர்கள் என்ற அளவில் நெருக்கமாக இருக்கலாம் என்பதை ஏற்று
திருமணம் என்பதை அடியோடு வெறுத்தாள்.
ஒருநாள் அவசரமாக காலையில் வேலைக்குக் காரில் போய்க்கொண்டிருக்கும்போது கார் டயர் பஞ்சராகி அல்லகல்லோப்பட்டுக்கொண்டு இருக்கும்போதுதான் தேவதூதன் போன்று பீட்டர் வந்தான் .
பீட்டர் சுமாரன உயரம் தான் ஆனால் முகத்தில் எப்போதும் ஒரு குறும்பு தவழ்ந்து கொண்டிருக்கும் , கடலில்
நீந்தும் மீனைப்போல அவனது நீலநிறக் கண்ணில் மண்ணிறக் கருவிழிகள் அங்குமிங்கும் பாய்ந்து கொண்டிருக்கும். வெளையருக்கே உரித்தான நிறம். சேர்ட் , டை , கோர்ட் என அவன் உடை அவன் கெளரமான உத்தியோகத்தில் இருக்கிறான் என்று பறை சாற்றின.
தனது காரை அவளின் காரின் பின்னால் நிறுத்தி ‘ கொஞ்சம் தள்ளுங்கள் , நான் 5 நிமிடத்தில் டயரை மாற்ரி விடுகிறேன் ‘ என்று உரிமையாக அங்கு நுழைந்தவன் அன்றிலிருந்து அவள் வாழ்க்கையிலும் நுழைந்து விட்டான்.
பின் வழமையான ரெஸ்டோரண்ட் , கிளப் , பிரண்ட்ஸ் வீடு என்று ஆரம்பித்த அவர்களது உறவு பெற்றோர்களிடம் தமது வாழ்க்கைத்துணை என்று அறிமுகப்படுத்துமளவிற்கு வளர்ந்தது.
ரஞ்சியின் அப்பா பிரபாகர் முதலில் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதுமே அதிர்ந்து விட்டார் . தனது வாழ்க்கையே குழைந்தது போல நில கிலைந்தார் . பின்பு ரஞ்சியின் அம்மாவின் படிப்படியான போதனையும் , காலப்போக்கில் பீட்டருடன் ஏற்பட்ட பழக்கத்தினாலும் தனது சம்மதத்தை வழங்கினார்.
ஆனால் பீட்டரின் தாய் தந்தையர் எப்போதோ விவாகரத்து எனும் விழாவை விமரிசையகக் கொண்டாடி விட்டார்கள் . அப்பா ஆதரித்த அதே சமயத்தில் , அப்பா ஆதரிக்கிறார் எனும் காரணத்திலாயே என்னவோ அம்மா சம்மதிக்கவேயில்லை . ஆனால் பீட்டர் அதைப்பற்றிப் பொருட்படுத்தவேயில்லை.
ஆனால் ஹேமாவோ அடிக்கடி ரஞ்சியிடம் ‘ ஆண்கள் எட்ட நின்று பழகவே லாயக்கானவர்கள் ‘ என்று .
ரஞ்சியின் மனதில் ஓடிய எண்ணங்களோ வித்தியாசமானவை . அவள் அம்மா தன் ஆசைகளை , தனது இலட்சியங்களை எல்லாம் மூட்டி கட்டி வைக்க வேண்டி வந்தததை அவளிடம் எப்போதும் சொல்லுவாள் . ஆசிய மனப்பான்மையின் அடிப்படையான ஆணாதிக்கத்தின் முதற்குணமான , தன் மனைவி தன்னை விடக் கல்வியில் கூடியவளாக இருக்கக் கூடாது என்பதற்கமைய , அவளது அப்பா ,அம்மா எவ்வளவோ புத்திசாலியாக இருந்தும் , படிக்க அனுமதிக்கவில்லை.
இப்படியாக தனது அம்மாவின் நியாயமான ஆசைகள் சமுதாயத்தில் ஏற்ருக் கொள்ளப்படாது எனும் காரணத்திற்காக தந்தையால் நிராசையக்கப்பட்டதும் , அதே போன்ற ஒரு நிலைமை தனது நண்பி ஹேமாவின் அம்மாவுக்கும் நடந்ததையும் பார்த்தபோது , ஒரு ஆசிய இனத்தவன் தனது கணவனாக வந்தால் தான் ஒரு கூண்டுக் கிளியாக வேண்டியதுதான் என்ற எண்ணமே அவள் மனதில் மேலோங்கியது.
அனைத்து ஆசிய ஆண்களையுமே அடக்குமுறை நிறைந்த சர்வாதிகளாகத்தான் அவள் பார்த்தாள்.
தனது வாழ்க்கையில் தான் வெற்றி பெற்று விட்டதாகவே ரஞ்சி நினைத்தாள் . நல்ல வேலை , அழகான காதலன் விரவில் கணவனாகப் போகிறான் . அன்பான பெற்றோர் . இதைத்தவிர தனக்கு வேறென்ன வேண்டும் என்று எண்ணினாள்.
அப்போதுதான் அவள் வாழ்விலே அந்த இடி விழுந்தது.
அன்ரு அவளுக்கு கல்லூரியில் மாணவர்கள் கல்வி சம்மந்தமான டூர் போயிருந்ததால் சீக்கிரமே கிளம்பக்கூடிய வாய்ப்பிருந்தது.
வீடு நோக்கிப் போய்க்கொண்டிருந்தவளின் ம்,அனதில் தீடிரென ஒரு ஆசை ‘ஏன் நான் பீட்டரின் பிளாட்டுக்குப் போய் அவன் வருமுன் அவனுக்கு சமையல் செய்து ஒரு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடாது ‘ . பீட்டரின் பிளாட் திறப்பு அவளிடமிருந்தது . பீட்டரின் வீட்டின் முனால் கார நிரித்தியவள் ஒரு பாடலை வாயில் முணுமுணுத்தவாறே , கதவைத் திறந்து மெதுவகாச் சாத்தினாள் , உள்ளே நுழைந்தவள் பீட்டரின் அறியிபுள் யாரோ கதைத்த சத்தம் வரவே சென்று கதவைத் திறந்தாள் ! உள்ளே
பீட்டரின் அணைப்பில் ஹேமா ! அப்படியே வானம் இடிந்து தன் தலை மீது விழக்கூடாதா ? ஏக்கம் வாட்டியது . தன் கைகளே தன் கண்ணைக்குத்தியதா ? கண்களிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் உகுத்தது .
தான் தன் சகோதரம் போன்று பழகிய தன் உற்ற நண்பியே தன் வாழ்வுக்கு உலைவைக்கத் துணிந்தாளா ? தான் யாருடன் தன் எதிர்காலத்தை சாகும்வரை கழிக்கப் போகிறோம் என்று எண்ணினாளோ அவர்கள் இருவரும் தன் எதிர்காலத்தின் விளக்கை அணைத்து தன்னை இருளில் மூழ்கடித்து விட்டார்களே!
‘ ஜ ஆம் சாரி ‘ என்றவாறே விரைந்து வெளியே ஓடினாள் ஹேமா .
‘ என்னைப் பார் ரஞ்சி ‘ என்றவாறு அவளைப்பார்க்க முயன்ற பீட்டரின் முகத்தில் கூட விழிக்க முடியாதவளாக அழுதவாறே ஓடினாள்.
காரில் உட்கார்ந்த படியே ஒரு பார்க்குக்கு வந்தாள் அப்போது இரவு 7 மணியாகியிருந்ததால் , விண்டர் காலம் ஆகையால் அந்தப் பார்க் வெறிச்சோடி இருந்தது காரைப் பார்க் பண்ணி விட்டு காரினுள் உட்கார்ந்தபடி
ஸ்டியரிங்கில் முகத்தைப் புதைத்தவாறு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
சிறிது நேரத்தின் பின் முகத்தை துடைத்தவாறு சீரியசாகச் சிந்திக்கத் தொடங்கினாள் . இந்த விடயம் முழுதாக வெளியே வந்தாள் இதனால் பாதிக்கப்ப்டப்போவது தனதும் , ஹேமாவினதும் நட்பு மட்டுமல்ல , எத்தனையோ வருடங்களாக அவர்களது குடும்பங்கலுக்கிடையில் இருந்த நெருக்கமான உறவு பாழடைவது மட்டுமல்ல , தன்னுடைய மனவேதனைகளைக் கொட்டுவதர்கு அவளது அம்மாவுக்கு இருக்கும் ஒரேயொரு நட்பு , ஹேமாவின் அம்மா மட்டும்தான் , அந்த உறவையும் அடைடைத்துவிட அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.
செல்போனை எடுத்தாள் ‘ ஹலோ ‘ அடுத்த முனையில் ஹேமா . தயங்கியவாறே ‘ என்னை மன்னித்து விடு ரஞ்சி ‘ என்றாள் . ‘ அதைப்பற்றிப் பிறகு பேசுவோம் , இன்று நடந்தத இந்த விடயம் எமக்குள் மட்டும் இருக்கட்டும் , இந்த உதவியை மட்டும் செய்வாயா ? ‘ அழுகையே அதற்கு பதிலாகியது.
ஒருவாறு தனக்கும் பீட்டருக்கும் ஒத்து வரவில்லை ஆகவே இப்படியே உறவை முறித்து விடுவதே நல்லது என்று தாங்கள் இருவரும் முடிவெடுத்ததாகக் கூறி சமாளித்து விட்டாள் . தந்தை பிரபாகருக்கு ஏனோ ஒருவிதமான ஆறுதல்.
ஹேமா அவளிடம் காலில் விழாத குறையாக மன்னிப்புக்கேட்டாள் .தான் இவ்வளவு காலமும் எவ்வளவு பிழையாக நடந்து விட்டேன் என்று உணர்ந்து விட்டாதாகக் கூறினாள் .தன்னுடைய வாழ்வின் அழிவிலே தன் தோழிக்கு நல்ல புத்தி வந்தால் அதுவே போதும் என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு திரும்பவும் உடைந்து போன அவர்களது நட்பை சிறிது சிறிதாக ஒட்டினாள்.
‘ உங்களுடன் அமரலாமா ? ‘ என்ர குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் ரஞ்சி எண்ணங்களில் நீந்தியவள்
மீண்டும் நிஜ உலகிற்கு வந்தாள். எதிர உயரமான , வாட்டசாடமான ஒரு ஆசிய இளஞன் நின்று கொண்டிருந்தான்.
‘ பரவாயில்லை உட்காருங்கள் ‘என்றாள்
‘ தனியாக உட்கார்ந்திருகிறீர்கள் , நானும் தனியாகத்தான் இருக்கிறேன் இருவரும் தனியாக இருந்து கொண்டி டிஸ்கோ ஹாலை வெறித்துப் பார்ப்பதை விட ஏன் சேர்ந்து வெறித்துப் பார்க்கக் கூடாது ‘ என்று சிரித்தவாறே கேட்டான்.
அதைக் கேட்டதும் ரஞ்சி சிரித்து விடாள் , அதுவும் தன்னை மறந்து.
பின்பு இருவரும் அடுத்த ஒருமணி நேரமும் பேசிக் கொண்டிருந்தார்கள் , அவனின் பெயர் ரவி என்றும் அவனுன் ஈழத்தைப் பூர்வீகமாக கொண்ட ஒரு பிரிட்டிஷ் ஆசியன் என்றும் அறிந்தாள் . ஏனோ தெரியவில்லை அவனின் சேர்க்கை அவளுக்கு ஓர் ஆறுதலைத் தந்தது.
புறப்படும் சமயம் அவன் ‘என்னை மீண்டும் சந்திக்க விரும்பினால், கூப்பிடுங்கள் ‘ என்று தனது செல் தொலைபேசி எண்ணைக் கொடுத்துச் சென்றாண். சிரித்தவாறே அவனுக்கு விடை கொடுத்தவள் , மீண்டும் இரு கிளாஸ் வைனுக்காக பாரை நோக்கி நடந்து கொண்டே அந்த பேப்பரை எறிவதற்கு ஆயத்தமானாள் , அப்போது அருகே நடந்து கொண்டிருந்த வெள்ளைப் பெண்கள் இருவரில் ஒருத்தி
‘அதோ அங்கே போய்க்கொண்டிருக்கும் ஆசிய இளைஞனை நான் மிகவும் விரும்பினேன் , அவனை என்னுடன் ஆட வருமாறு கூப்பிட்டும் பார்த்தேன் , ஆனால் அவன் புன்னகைத்தவாறே மறுத்து விட்டான் ‘ என்று மற்றவளுக்குக் கூறினாள்.
ரஞ்சியின் மனதில் திரும்பவும் எண்ண அலைகள் என்னுடைய அப்பாவும் , ஹேமாவினுடைய அப்பாவும் ஆணாதிக்கத்தை கொண்டிருப்பதால் , எல்லா ஆசிய இளைஞர்களுமே அப்படியா ? முதற்தடவையாக அவளது மனது அவளை ஓர் நியாயமான கேள்வியைக் கேட்டது.
ஒருவிதமான மன ஆறுதலாடுடன் எறியப்போன அந்த பேப்பரை தனது கைப்பையினுள் மடித்து வைத்தாள் ?
ஒரு காதல் தோல்வியால் ஊனமடைந்தது என் உள்ளமே கருத்தல்ல . எல்லா ஆசியர்களுமே மூடக் கருத்துக்களை கொண்டவர்களுமல்ல , எல்லா வெள்ளையர்களுமே நேர்மையானவர்களுமல்ல ஏனேனில் எல்லோரும் மனிதர்களே !
ரஞ்சியின் முகத்தில் ஓர் திடமான உணர்ச்சி தோன்றியது
—-
- கடிதம் அக்டோபர் 14,2004
- கீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் – ஒரு குறிப்பு
- உரத்த சிந்தனைகள்- 3
- ஓவியப் பக்கம் : இரண்டு – ஜான் லென்னன் – கலையும் கலகமும்
- கிஷன் பட்நாயக் – 1930 – 2004
- காற்றினிலே வந்த கீதங்கள்
- சுகந்தி சுப்ரமணியனின் ‘மீண்டெழுதலின் ரகசியம் ‘ – சின்னச்சின்ன காட்சிகள்
- அ.முத்துலிங்கம் பரம்பரை -4
- மக்கள் தெய்வங்களின் கதை 5 : சோமாண்டி கதை
- ஆட்டோகிராஃப்- 22 – ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ‘
- கடிதம் 14,2004
- கடிதம் அக்டோபர் 14,2004
- கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? -பகுதி 2 (நிறைவு)
- அக்டோபர் 14,2004
- ஓவியர் நடிகர் கே கே ராஜா கலந்து கொள்ளும் அரங்கப் பட்டறை – அக்டோபர் 23,2004
- விளையாட ஒரு பொம்மை
- பெரியபுராணம் — 13
- குழந்தைத் தனமாய்..(ஹைக்கூ)
- கவிதைகள்
- என்னிசைக் கீதம் – கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- முன்னைப் பழம் பொருள் வெஃகும் சிறுமை
- பூரணம்
- மெய்மையின் மயக்கம்-21
- பெரிய பாடம்
- பருவக்கோளாறு
- கடல் தாண்டிய உறவுகள்
- நீலக்கடல் – ( தொடர்) – அத்தியாயம் -41
- வாரபலன் அக்டோபர் 14,2004- அருண் கொலட்கர், , மாறாத கர்நாடகம்,கேரளத்தில் மறைவு மரியாதை , தமிழ்நாட்டில் ஜிக்கி மறைவு
- ஆதித்தனார் 100: அஞ்சலி
- டைரி
- விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்
- ஹாங்காங்கின் ஜனநாயகக் கிரணங்கள்
- முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்
- யஷ்வந்த்ராவ் ( கவிதை : அருண் கொலட்கர் – மொழிபெயர்ப்ப்பில்)
- தாவோ க்ஷேத்ரத்தில் போகேண்டதெங்ஙனெ ? (சச்சிதானந்தனின் மலையாளக் கவிதை. மொழியாக்கம் )
- ஊனம் உள்ளத்தினுள்ளா ?
- கவிக்கட்டு 31-சத்தமில்லாத சமுதாயச் சரிவு
- தவிக்கிறேன்
- ‘விண் ‘ தொலைக்காட்சி கவிதை – (1)
- என் நிழல்
- குகன் ஓர் வேடனா ? ?..
- கவிதை
- சரித்திரப் பதிவுகள் – 3 : விக்ராந்தும் காஜியும்
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (4)
- மறுபிறவி மர்மம்
- கல்விக்கோள் (எதுசாட்) : எதிர்நோக்கும் சவால்கள்