‘ஊக்கும் பின்னும் ‘
கரு.திருவரசு

ஊக்குவிக்க வேண்டுமென ஓர்தலைவர் பேசினார்
பாக்குவிற்ற பேர்களும் பஞ்சுவிற்ற பேர்களும்
தேக்குவிற்ற பேர்களும் செல்வரான நாட்டிலே
ஊக்குவிற்றும் தோன்றும் உயர்வு!
கொண்டைப்பின் வாங்கக் குமரிப்பெண் போகையிலே
அண்டை ஒலிபெருக்கி ஆங்காரம் செய்கிறது
பின்வாங்கக் கூடாது, பின்வாங்கக் கூடாது!
பெண்தேங்கிப் போகிறாள் பின்!
thiruv@pc.jaring.my