உள்ளத்தனைய உயர்வு

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

பா.தேவேந்திர பூபதி


சூரியனும் ,சந்திரனும்
தனது வட்டக் காசுகளை
விட்டெறியும் வரை
நீ
ஏழையென்று பெயர் சுமந்து
சரிந்து கிடக்காதே !

சிகரங்களைத் தாண்டி
சிந்திக்கின்ற நீ
பாதாளங்களுக்கிடையில்
உந்தன்
எதார்த்தத்தை மட்டும்
ஏன் தொலைத்தாய் !

உன் சுந்தரக் கனவுகளின்
தாமும் ஏவாளும்
சாதி பார்த்து பிரிந்திருந்தால்
மானிட சாதியின்
வாசனையை
பூமி உணர்ந்திருக்காது !

(பெயற்சொல் தொகுப்பிலிருந்து)
—-
kousick2002@yahoo.com

Series Navigation

பா .தேவேந்திர பூபதி

பா .தேவேந்திர பூபதி